தஞ்சை மறைமாவட்டம்
தஞ்சை மறைமாவட்டம் Dioecesis Taniorensis | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பெருநகரம் | புதுவை-கடலூர் |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 9,583 km2 (3,700 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 3,820,117 239,630 (15.94%) |
விவரம் | |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
கதீட்ரல் | திரு இதய கதீட்ரல் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
ஆயர் † | தேவதாஸ் அம்புரோஸ் மரியதாஸ் |
தஞ்சை மறைமாவட்டம் (இலத்தீன்: Tanioren(sis)) என்பது தஞ்சாவூர் திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
வரலாறு
[தொகு]- நவம்பர் 13, 1952: மயிலாப்பூரின் சாந்தோம் மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு தஞ்சை மறைமாவட்டம் உருவானது.
சிறப்பு ஆலயங்கள்
[தொகு]தலைமை ஆயர்கள்
[தொகு]- தஞ்சை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- ஆயர் சகாயராஜ் தம்பு ராஜ் ( ஜூலை 13, 2024 - இதுவரை)
- ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரியதாஸ் (ஜூன் 28, 1997 –2022)
- ஆயர் பாக்கியம் ஆரோக்கியசுவாமி (செப்டம்பர் 12, 1986 – ஜூன் 28, 1997)
- ஆயர் ராஜரத்தினம் ஆரோக்கியசாமி சுந்தரம் (பிப்ரவரி 4, 1953 – செப்டம்பர் 12, 1986)
இயேசுவின் திரு இருதய ஆண்டவர் பேராலயம் தமிழ்நாடு தஞ்சை மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமாகும்..
தஞ்சை மறைமாவட்டம் நாகப்பட்டினத்தில் கி.பி. 1545-ஆம் ஆண்டளவில் தூய சவேரியார் மறைத்தொண்டு புரிந்தார், கி.பி. 1667-ஆம் ஆண்டுக்குப்பின் தூய அருளாந்தர் தஞ்சை மக்களிடையே மறைப்பணி ஆற்றினார் என்பனவெல்லாம் வரலாறுகள்.
தஞ்சையில் கோவா குருக்கள்
[தொகு]தஞ்சைக்கு கோவா குருக்கள் எப்போது வந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் போற்றிப் பாராட்டப் பெறும் வீரமாமுனிவர் தஞ்சைப் பங்குத் தந்தையாகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பே தஞ்சை தூய வியாகுல அன்னை திருக்கோவில் கோவா குருக்களின் கண்காணிப்பில் இருந்துவந்துள்ளது. கி.பி. 1838-இல் திருத்தந்தை 16-ஆம் கிரகோரியாரின் “முல்த்தா பிரக்லாரா” என்ற திருமடலால் தஞ்சை, பத்ரொவாதோ (கோவா குருக்கள்) பொறுப்பிலிருந்து மறை பரப்புப் பேராயத்தின் பொறுப்புக்கு மாற்றப்பட்டது. 1843 வரை பாரீஸ் அயல் நாட்டு மறைபரப்புக் குருக்கள் தஞ்சையில் பணியாற்றியுள்ளனர்.1843-இல் வெட்டாறுக்கு வடக்கே உள்ள பகுதி மதுரை மண்டலத்தைச் சார்ந்த சேசு சபைக் குருக்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.
1843-ஆம் ஆண்டில் அருட்திரு கிளாடுபேடின் சே.ச. அடிகளார் தஞ்சைப் பங்குத்தந்தயானார். அது மதக் கலவரங்கள் நடைபெற்ற காலம் அதனால் தஞ்சையில் பணியாற்ற இயலாததால் பள்ளியேறி, வல்லம், கூனம்பட்டி, பரக்குடி ஆகிய இடங்களில் அவர் மறைத்தொண்டு புரிந்தார்.
பட்டுக்கோட்டை, பாதிரிக்குடி ஆகிய இடங்களுக்கும் அருட்திரு கிளாடுபேடின் அடிகளார் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால், அப்போதைய துணைப்பங்குத் தந்தை அருட்திரு.திரிங்க்கால் அடிகளார் தஞ்சை பங்குப் பணிகளைச் செய்துவந்தார். அவர் தந்த தகவலின்படி 1849-ல் தஞ்சையைச் சுற்றி 2500 கத்தோலிக்கர் இயேசு சபையினரின் பார்வையிலும், 1000 பேர் கோவா குருக்களின் கண்காணிப்பிலும் இருந்தனர்.
விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் முதல் முதலாக மொழிபெயர்த்தவர் திரிங்க்கால் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.