உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சைவாணன் கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட ஓர் அகப்பொருட்கோவை நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில் வாழ்ந்த சந்திரவாணன்[1] என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. [2] தஞ்சைவாணன், பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.

நூலமைப்பு

[தொகு]

கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்த இலக்கியம் படைக்கப்பட்டு இருக்கிறது.[1] ‘ இது,

  1. களவியல்,
  2. வரைவியல்,
  3. கற்பியல்

என்னும் 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள 33 பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுதும் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது.[3]

உள்ளடக்கம்

[தொகு]

தஞ்சைவாணன் கோவை நூலின் உள்ளடக்கம் வருமாறு

இயல் துறை பாடல்களின் எண்ணிக்கை குறிப்பு
களவியல் 01. கைக்கிளை 00
களவியல் 02. இயற்கைப் புணர்ச்சி 00
களவியல் 03. வன்புறை 00
களவியல் 04. தெளிவு 00
களவியல் 05. பிரிவுழி மகிழ்ச்சி 00
களவியல் 06. பிரிவுழிக் கலங்கல் 00
களவியல் 07. இடந்தலைப்பாடு 00
களவியல் 08. பாங்கற்கூட்டம் 00
களவியல் 09. பாங்கி மதியுடன்பாடு 00
களவியல் 10. பாங்கியிற் கூட்டம் 00
களவியல் 11. ஒருசார் பகற்குறி 00
களவியல் 12. பகற்குறி இடையீடு 00
களவியல் 13. இரவுக்குறி 00
களவியல் 14. இரவுக்குறி இடையீடு 00
களவியல் 15. வரைதல் வேட்கை 00
களவியல் 16. வரைவு கடாதல் 00
களவியல் 17. ஒருவழித் தணத்தல் 00
களவியல் 18. வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் 00
வரைவியல் 19. வரைவு மலிவு 00
வரைவியல் 20. அறத்தொடு நிற்றல் 00
வரைவியல் 21. உடன்போக்கு 00
வரைவியல் 22. கற்பொடு புணர்ந்த கவ்வை 00
வரைவியல் 23. மீட்சி 00
வரைவியல் 24. தன்மனை வரைதல் 00
வரைவியல் 25. உடன்போக்கு இடையீடு 00
வரைவியல் 26. வரைதல் 00
கற்பியல் 27. இல்வாழ்க்கை 00
கற்பியல் 28. பரத்தையிற் பிரிவு 00
கற்பியல் 29. ஓதற் பிரிவு 00
கற்பியல் 30. காவற் பிரிவு 00
கற்பியல் 31. தூதிற் பிரிவு 00
கற்பியல் 32. துணைவயிற் பிரிவு 00
கற்பியல் 33. பொருள்வயிற் பிரிவு 00

உரை

[தொகு]

இத் தஞ்சைவாணன் கோவைக்கு விளக்கவுரை எழுதியவர் சொக்கப்ப நாவலர். இவர் பிறந்த ஊர், தொண்டை மண்டலத்தைச் சார்ந்த குன்றத்தூர். இவர் சிறந்த தமிழ்ப்புலமையும் நாவன்மையும் பெற்று அட்டாவதானியாக விளக்கம் பெற்றிருந்தனர். இவர் இந் நூலாசிரியரான பொய்யாமொழியார் மரபில் வந்தவர். [4]

சான்றடைவு

[தொகு]
  1. 1.0 1.1 தி.தெ.சை.நூ.கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவையின் முன்னுரை
  2. சாமிநாதையர் உ.வே, என் சரித்திரம்:அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்
  3. தஞ்சைவாணன் கோவை
  4. பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைக்குச் சொக்கப்ப நாவலர் வரைந்த உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சைவாணன்_கோவை&oldid=3322659" இலிருந்து மீள்விக்கப்பட்டது