தஞ்சாவூர் வேணுகோபாலசுவாமி கோயில்
தஞ்சாவூர் வேணுகோபாலசுவாமி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வேணுகோபாலன் |
தஞ்சாவூர் வேணுகோபாலசுவாமி கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள வைணவக் கோயில்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் தஞ்சாவூரில் கொள்ளுப்பேட்டைத் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயில் கிருஷ்ணன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.[1]
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவர் வேணுகோபாலன் ஆவார். அவர் பாமா, ருக்மணியுடன் உள்ளார்.
அமைப்பு
[தொகு]சற்றே உயர்ந்த தளத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சாலையில் இருந்து உள்ளடங்கியுள்ள இக்கோயில் ராஜ கோபுரம், திருச்சுற்று, மூலவர் சன்னதி ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. படிகளில் ஏறி நுழைவாயிலில் உள்ள ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கருடாழ்வார் காணப்படுகிறார். மூலவர் சன்னதிக்கு முன்பாக வலது புறம் வலம்புரி விநாயகரும், இடது புறம் பால ஆஞ்சநேயரும் உள்ளனர். சற்று முன்னதாக வலப்புறத்தில் துவாரபாலகரான ஜெயனும், இடப்புறத்தில் துவாரபாலகரான விஜயனும் உள்ளனர். அருகே நாகர் உள்ளார். சிறிய திருச்சுற்றினைக் கொண்டு இக்கோயில் காணப்படுகிறது.