தசைப்பிடிப்பு
தசைப்பிடிப்பு (Sprain) என்பது தசைகள் சிதைவடைவது அல்லது பாதிக்கப் படுவதாகும்.
தசைப்பாதிப்பு
[தொகு]ஒரு விபத்தினால் தசை நார்கள் இழுக்கப்பட்டால், தசை நார்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதற்குத் தசைப்பாதிப்பு என்று பெயர்.
தசைப்பிடிப்பு ஏற்படக் காரணங்கள்
[தொகு]இப்பாதிப்பு, தசைநார்கள் அதிகபட்ச நீட்சி திறனுக்கு மேலும் இழுக்கப்படும் போது ஏற்படுகிறது. சில சமயங்களில், தசைப்பிடிப்பு, அதிக வேகத்துடன் தசை சுருக்கம் ஏற்படும் போது உண்டாகிறது. வேறு சில சமயங்களில் மீண்டும் மீண்டும் தசை அசைவுகள் நடைபெறுவதால் உண்டாகிறது. ஒரு தசைப்பகுதி, நீண்ட நேரம் அதிக அழுத்தத்துடன் இருக்குமேயானால், அவ்விடத்தில் தசைகளில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் தசைப்பிடிப்பு தோன்றலாம்.
இது, நாற்காலியில் சரியான முறையில் அமர்ந்திருக்காவிட்டால் ஏற்படும் தொல்லையாகும். இதனால், நீண்டநேμம் ஒரே நிலையில் அமர்ந்து இருக்கும் போது தசைகள் இறுக்கமடைகின்றன. இந்நிலையிலிருந்து இலேசாக மாறி ஒரு குவளை தண்ணீர் எடுப்பதற்காக நாம் முயலும் போது கூட தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடலாம்.
தசைப்பிடிப்பினால் ஏற்படும் தொல்லைகள்
[தொகு]முதுகு வலி அல்லது இடுப்பு வலி, சாதாரணமாகத் தசைப்பிடிப்பினால் ஏற்படும் தொல்லையாகும்.