தங்கமாமா (இதழ்)
Appearance
தங்கமாமா 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பா. ஜெயபாண்டியன் ஆவார். இது சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய சிறுகதை, சிரிப்பு, கேள்வி பதில், பரிசுப்போட்டி, மூளைக்கு வேலை எனப் பலவகையான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.