உள்ளடக்கத்துக்குச் செல்

தக்கியுதீன் அப்துல் வாஹித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தக்கியுதீன் அப்துல் வாஹித் (Thakiyudeen Abdul Wahid) ஒரு இந்திய தொழில்முனைவோர் மற்றும் விமானி ஆவார். நாட்டின் முதல் திட்டமிடப்பட்ட தனியார் விமான நிறுவனமான, (இப்போது செயல்படாத) ஈஸ்ட்-வெஸ்ட் ஏர்லைன்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவர் 1995 நவம்பர் 13 அன்று கொலை செய்யப்பட்டார்..[1][2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வாஹித் கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஓடயம் கிராமத்தில் பிறந்தார். சாதாரண கல்விப் பின்னணி கொண்ட இவர், 9ம் வகுப்பு வரை படித்தவர்.[3][4]

தொழில்[தொகு]

வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்பவர்களுக்காக மும்பையின் தாதரில் தனது சகோதரர்களுடன் பயண நிறுவனத்தில் தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] 1992 இல் அப்போதைய இந்திய அரசாங்கம் விமானத் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தியதின் விளைவாக, அவர் திருவனந்தபுரத்தினை தலைமையிடமாகக் கொண்டு ஈஸ்ட்-வெஸ்ட் ஏர்லைன்ஸைத் தொடங்கினார். ஈஸ்ட்-வெஸ்ட் ஏர்லைன்ஸ் 28 பிப்ரவரி 1992 அன்று வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.[6]

1995 இல் அவர் இறந்த பிறகு 1996 இல் விமான நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது.[7][8]

இறப்பு[தொகு]

மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அருகில் 1995 நவம்பர் 13 அன்று வாஹித் சுட்டுக் கொல்லப்பட்டார். [9]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Lakdawala's arrest may shed light on Thakiyudeen Abdul Wahid murder case". OnManorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  2. "I will return to India and face trial but after teaching Dawood a lesson: Chhota Rajan". India Today (in ஆங்கிலம்). 31 January 1996. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  3. "ഈസ്റ്റ് വെസ്റ്റ് എയർലൈൻസ് : ഇടവ ഗ്രാമത്തിൽനിന്ന്‌ ആകാശം മുട്ടേ". Deshabhimani (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  4. "അധോലോക കുറ്റവാളി ഇജാസ് ലക്ഡാവാലയെ റിമാൻഡ് ചെയ്തു". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  5. "'The great survivor' Naresh Goyal throws in the towel". Moneycontrol. March 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  6. "ഇന്ത്യയിലെ ആദ്യ സ്വകാര്യ വിമാനക്കമ്പനിയുടമ ഒരു മലയാളി; തഖിയുദ്ദീന്‍ വാഹിദിന്റെ വിസ്മയ കഥ". Chandrika Daily (in அமெரிக்க ஆங்கிலம்). 17 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  7. "Arrest of ex-aide of Dawood could shed light on aviation pioneer's murder". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  8. Bureau, BW Online. "Going Down Memory Lane". BW Businessworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  9. "When underworld spilt blood on Mumbai streets". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.

வெளி இணைப்புகள்[தொகு]