உள்ளடக்கத்துக்குச் செல்

டோனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சி

ஆள்கூறுகள்: 40°51′25.3″N 79°58′15.6″W / 40.857028°N 79.971000°W / 40.857028; -79.971000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோனால்டு திரம்பு படுகொலை முயற்சி
Map
இடம்பட்லர் பண்ணை
பட்லர் மாவட்டம், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
ஆள்கூறுகள்40°51′26″N 79°58′16″W / 40.8571223°N 79.9711779°W / 40.8571223; -79.9711779
நாள்சூலை 13, 2024 (2024-07-13)
பி.ப. 6:11[1] (கி.நே.வ)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
டோனால்ட் டிரம்ப்[2][3][4]
தாக்குதல்
வகை
படுகொலை முயற்சி, துப்பாக்கிச் சூடு
இறப்பு(கள்)2 (குற்றவாளியும், பேரணியில் பங்கேற்றவரும்)[5]
காயமடைந்தோர்3+ (திரம்பு உட்பட)[6]
தாக்கியோர்தோமசு மேத்தியூ குரூக்சு[7]
நோக்கம்தெரியவில்லை

2024 சூலை 13 அன்று, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவரும், 2024 அரசுத்தலைவர் வேட்பாளருமான டோனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லர் அருகே ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​மேல் வலது காதில் சுடப்பட்டுக் காயமடைந்தார்.[8]

சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த 20 வயதான தாமசு மேத்யூ குரூக்சு என அடையாளம் காணப்பட்டார்.[5][9][10][11] இவர் ஏஆர்-15-ரக அரைத்தானியங்கி மரைகுழல் துப்பாக்கியைப் பயன்படுத்தி, பேரணி நடைபெறும் இடத்திற்கு வெளியே கூரையில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சட்ட அமலாக்க மற்றும் சாட்சிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் இரகசிய சேவை எதிர் தாக்குதல் குழுவைச் சேர்ந்த சேர்ந்த ஒரு குறிசுடுநரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[12] பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் கொல்லப்பட்டார், இரண்டு பங்கேற்பாளர்கள் படுகாயமடைந்தனர்.[13]

சுடப்பட்ட பிறகு, திரம்பு தரையில் தள்ளப்பட்டு, விரைவில் இரகசிய சேவையாளர்களால் சூழப்பட்டார்; அவரது காதிலிருந்தும், கன்னத்திலிருந்தும் வழிந்த இரத்தத்துடன் அவர் எழுந்தார். அவரை ஒரு வாகனத்திற்கு விரைந்து கொண்டுசெல்வதற்கு முன், பலமுறை அவர் கைமுட்டியை காற்றில் அசைத்தார்.[14][15] பின்னர் அவர் மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பப்பட்டார், அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, நிலையான நிலையில் விடுவிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வானூர்தி மூலம் நியூ செர்சிக்குப் புறப்பட்டார்.[16][17]

துப்பாக்கிச் சூடு ஒரு படுகொலை முயற்சியாக விசாரிக்கப்படுகிறது.[9][18][19] 1981 ஆம் ஆண்டு அப்போதைய அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சுடப்பட்ட பின்னர், முன்னாள் அல்லது தற்போதைய அமெரிக்க அரசுத்தலைவர் படுகொலை முயற்சியில் காயமடைந்தது இதுவே முதல் முறையாகும், அத்துடன் மேலும் 1972 இல் சியார்ச் வால்சு படுகொலை செய்யப்பட்ட பின்னர் அரசுத்தலைவர் வேட்பாளருக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.[20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nolfi, Joey (July 13, 2024). "Donald Trump grazed by gunfire at rally in Pennsylvania பரணிடப்பட்டது சூலை 14, 2024 at the வந்தவழி இயந்திரம்." Entertainment Weekly.
  2. "Trump shot in ear in rally assassination attempt" (in en). BBC. July 13, 2024 இம் மூலத்தில் இருந்து July 13, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240713222730/https://www.bbc.com/news/articles/cd1d31jeyzlo. 
  3. "Trump wounded in assassination attempt. Biden calls it 'sick': Here's what we know". USA Today (in ஆங்கிலம்). July 13, 2024. Archived from the original on July 14, 2024. பார்க்கப்பட்ட நாள் July 13, 2024.
  4. "Australian PM says 'no place for violence in democratic process' after Trump assassination attempt". The Guardian (in ஆங்கிலம்). July 13, 2024. Archived from the original on July 14, 2024. பார்க்கப்பட்ட நாள் July 13, 2024.
  5. 5.0 5.1 Yee, Curtis; Santana, Rebecca; Whitehurst, Lindsay; Orsi, Peter. "Live updates: Shooter dead, rally attendee killed and Trump whisked off stage after gunshots ring out at rally" (in en). Associated Press இம் மூலத்தில் இருந்து July 13, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240713222136/https://apnews.com/live/election-biden-trump-campaign-updates-07-13-2024. 
  6. Levien, Simon J. (July 13, 2024). "Report From the Scene: 'Get Down! Shots Fired!'" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து July 13, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240713223053/https://www.nytimes.com/live/2024/07/13/us/biden-trump-election. 
  7. "Trump rally shooter identified as 20-year-old Pennsylvania man". NBC News. July 14, 2024. Archived from the original on July 14, 2024. பார்க்கப்பட்ட நாள் July 14, 2024.
  8. "Trump shot in right ear at campaign rally, shooter dead". Reuters.
  9. 9.0 9.1 Barnes, Julian E.; Gold, Michael; Levien, Simon J. (July 13, 2024). "Live Updates: Trump 'Safe' After Shooting at Rally; Suspect Killed" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து July 13, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240713223053/https://www.nytimes.com/live/2024/07/13/us/biden-trump-election. 
  10. "FBI identifies Thomas Matthew Crooks as 'subject involved' in Trump rally shooting". ராய்ட்டர்ஸ். 14 July 2024 இம் மூலத்தில் இருந்து July 14, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240714061941/https://www.reuters.com/world/us/fbi-identifies-thomas-matthew-crooks-subject-involved-trump-rally-shooting-2024-07-14/. 
  11. Gurman, Sadie (14 July 2024). "Law Enforcement Identifies Thomas Matthew Crooks, 20, as the Suspected Shooter". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து July 14, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240714055833/https://www.wsj.com/livecoverage/trump-rally-incident/card/law-enforcement-identifies-20-year-old-pennsylvania-man-as-the-suspected-shooter-tiLabprU1Nf0PumWjqBZ. 
  12. Tanyos, Faris (July 13, 2024). "Trump rally shooter killed by Secret Service sniper, officials say - CBS News" (in அமெரிக்க ஆங்கிலம்). CBS News. Archived from the original on July 14, 2024. பார்க்கப்பட்ட நாள் July 13, 2024.
  13. Barnes, Julian E.; Gold, Michael; Levien, Simon J. (July 13, 2024). "Live Updates: Trump 'Safe' After Shooting at Rally; Suspect Killed" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து July 13, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240713223053/https://www.nytimes.com/live/2024/07/13/us/biden-trump-election. 
  14. Layne, Nathan; Mcdermid, Brendan; Mason, Jeff (July 13, 2024). "Trump shot in right ear at campaign rally, shooter dead". Reuters. பார்க்கப்பட்ட நாள் July 13, 2024.
  15. Gold, Michael; Barnes, Julian E.; Levien, Simon J. (July 13, 2024). "Live Updates: Trump 'Safe' After Shooting at Rally; Suspected Gunman Killed" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து July 13, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240713134520/https://www.nytimes.com/live/2024/07/13/us/biden-trump-election. 
  16. Hayes, Christal. "Trump, with blood on face, raises fist in air". BBC. Archived from the original on July 14, 2024. பார்க்கப்பட்ட நாள் July 13, 2024.
  17. "Live updates: Trump says he was shot in the ear during rally; one attendee and shooter are dead". AP News (in ஆங்கிலம்). Archived from the original on July 13, 2024. பார்க்கப்பட்ட நாள் July 13, 2024.
  18. Colvin, Jill (July 13, 2024). "Shooting at Trump rally is being investigated as assassination attempt, AP sources say". AP News (in ஆங்கிலம்). Archived from the original on July 13, 2024. பார்க்கப்பட்ட நாள் July 13, 2024.
  19. Smith, David; Vargas, Ramon Antonio (July 13, 2024). "Trump rally shooting being investigated as suspected attempt on his life" (in en-GB). The Guardian இம் மூலத்தில் இருந்து July 14, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240714020639/https://www.theguardian.com/us-news/article/2024/jul/13/trump-rally-gun-shots-pennsylvania. 
  20. Brasted, Chelsea (14 April 2024). "Trump rally violence recalls historic presidential attacks". Axios. https://www.axios.com/2024/07/14/last-assassination-attempt-president-trump-shot-reagan. 

வெளி இணைப்புகள்

[தொகு]