உள்ளடக்கத்துக்குச் செல்

டொரெசு நீரிணை தீவினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொரெசு நீரிணைத் தீவு மக்கள்
Torres Strait Islanders
மொத்த மக்கள்தொகை
66,387[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
டொரெஸ் நீரிணைத் தீவுகள் 4,514[2]
 ஆத்திரேலியா (முதன்மைநிலம்)61,873
மொழி(கள்)
டொரெசு நீரிணைத் தீவுகளின் மொழிகள், டொரெசு நீரிணை கலப்பு, ஆங்கிலம்
சமயங்கள்
கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மெலனீசியர்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள சிக்கல்களைக் கவனியுங்கள்.[2]

டொரெசு நீரிணைத் தீவு மக்கள் (Torres Strait Islanders)[3] என்போர் டொரெசு நீரிணைத் தீவுகளில் வாழும் மெலனீசிய மக்கள் ஆவர். இத்தீவுகள் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் ஒரு பகுதி ஆகும். ஆத்திரேலியாவின் பிற பகுதிகளில் உள்ள ஆத்திரேலியத் தொல்குடியின மக்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்டவர்கள், இவர்கள் பெரும்பாலும் ஆத்திரேலியப் பழங்குடிகளாக தொல்குடியனருடன் குழுவாக உள்ளனர். இன்று, தீவுகளை விட (சுமார் 4,500) ஆத்திரேலியாவின் முதன்மை நிலப்பகுதியில் (கிட்டத்தட்ட 28,000) அதிகமான டொரெசு நீரிணைத் தீவுவாசிகள் வாழ்கின்றனர்.

டொரெசு நீரிணைத் தீவு மக்கள் என்ற பரந்த பெயரில், புவியியல், கலாச்சாரப் பிரிவுகளின் அடிப்படையில் ஐந்து தனித்துவமான மக்கள் உள்ளனர். இவர்களில் கலாவ் லகாவ் யா, மெரியம் மிர் ஆகிய இரண்டு முக்கிய பழங்குடி மொழிக் குழுக்கள் உள்ளன. டொரெசு நீரிணைக் கிரியோல் மொழி வணிக மொழியாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. தீவின் கலாச்சாரத்தின் மையமானது பப்புவோ-ஆசுத்திரோனீசியம் ஆகும், அத்துடன் இவர்கள் மரபுவழியாக கடற்பயண மக்கள் ஆவர். ஒரு வலுவான கலை கலாச்சாரம் இவர்களுக்கு உள்ளது, குறிப்பாக சிற்பம், அச்சு தயாரித்தல், முகமூடி தயாரித்தல் ஆகியவையாகும்.

மக்கள்தொகையியல்

[தொகு]
தொரெசு நீரிணைத் தீவின் பழங்குடித் தகுநிலை மக்களின் புவியியல் பரம்பல்[4]
தொல்குடி, தொரெசு நீரிணைத் தீவு பழங்குடித் தகுநிலை மக்களின் புவியியல் பரம்பல்[4]
தொரெசசு நீரிணைத் தீவுகளின் வம்சாவளியைக் கொண்ட மக்களின் புவியியல் பரம்பல்[4]

133 தீவுகளில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அண்டைய பிரதேசங்களான பப்புவா நியூ கினி, இந்தோனேசியா, பசிபிக் தீவுகள் ஆகியவற்றிடம் இருந்து வேறுபடுத்தும் வகையில், தொரெசு நீரிணைத் தீவுகள் பண்பாடு ரீதியாகத் தனித்துவமானது. ஆசிய, பசிபிக் தீவு வணிகர்களை பல ஆண்டுகளாக பெச்சே-டி-மெர், முத்தின் தாய், துரோச்சசு-ஓட்டு மீன் தொழில்களுக்கு ஈர்த்து, இன்று இத்தீவுகள் பன்முகக் கலாச்சாரம் கொண்டவையாகக் காணப்படுகின்றன.[5]

2016 ஆத்திரேலிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இத்தீவுகளில் 4,514 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 91.8% மக்கள் டொரெசு நீரிணைத் தீவு மக்கள் அல்லது தொல்குடி மக்கள். (64% மக்கள் டொரெசு நீரிணைத் தீவினர், 8.3% ஆத்திரேலியத் தொல்குடிகள், 6.5% பப்புவா நியூ கினியர், 3.6% ஏனைய ஆத்திரேலியர்கள், 2.6% "கடல்சார் தென்கிழக்கு ஆசியர்" ஆவர்.[1] 2006 இல், 6,800 டொரெசு நீரிணைத் தீவு மக்கள் டொரெஸ் நீரிணைப் பகுதியில் வசித்தனர்.[6]

2016 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஆத்திரேலியா முழுவதிலும் உள்ள டொரெசு நீரிணைத் தீவு வம்சாவளியினர் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மக்கள் 32,345 ஆக இருந்தனர், அதே வேளையில், டொரெசு நீரிணைத் தீவு, தொல்குடியின வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மேலும் 26,767 ஆக இருந்தனர் (2016 இன் முறையே 29,515 மற்றும் 17,810 உடன் ஒப்பிடும்போது).[7]

டொரெசு நீரிணைத் தீவுவாசிகளினதும் தொல்குடி ஆத்திரேலியர்களினதும் ஐந்து சமூகங்கள் குயின்சுலாந்தின் முக்கிய நிலப்பகுதியின் கரையோரப் பகுதியில் முக்கியமாக கேப் யோர்க்கின் வடக்கு மூவலந்தீவுப் பகுதியில் உள்ள பமாகா, சீசியா, இஞ்சினூ, உமாகிகோ, நியூ மாப்பூன் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.[8]

தீவுவாசிகளுக்கு ஐரோப்பிய நோய்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால், சூன் 1875 இல் தட்டம்மைத் தொற்றுநோய் மக்கள்தொகையில் 25% ஆனோரைக் கொன்றது, சில தீவுகளில் 80% வரையிலான மக்கள் உயிரிழந்தனர்.[9]

நிர்வாகம்

[தொகு]

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை, இந்தத் தீவுவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி சபைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தனர், இது ஓரளவு பாரம்பரிய கிறித்துவத்திற்கு-முந்தைய உள்ளூர் அரசாங்கத்தையும், ஓரளவு கிறித்துவ மறைப்பணி மேலாண்மை அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டது.[10]

தற்போது, 1994 இல் நிறுவப்பட்ட டோரெசு நீரிணை பிராந்திய ஆணையம் என்ற ஆத்திரேலிய அரசாங்க அமைப்பானது, தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பிரதிநிதிகளை உள்ளடக்கியது. இது தீவுகளை மேற்பார்வை செய்கிறது, இதன் முதன்மை செயல்பாடு இப்பகுதி மக்களின் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சியை வலுப்படுத்துவதாகும்.[11]

இதனை விட, டொரெசு நீரிணைத் தீவுவாசிகள் குடிபெயர்ந்து வசிக்கும் குயின்சுலாந்து பகுதிகளை நிர்வகிக்கும் குயின்சுலாந்து உள்ளாட்சி அமைப்புகளும் உள்ளன.[12]

இனம்

[தொகு]
டோரெசுத் தீவு மக்கள்தொகையில் கணிசமான பங்கைக் கொண்ட உள்ளூர் மக்கள்தொகையின் பூர்வீக நிலை[4]
டொரெசு நீரிணைத் தீவுவாசிகள் கணிசமான பங்கைக் கொண்ட பகுதிகளில் உள்ள மக்கள்தொகையின் பூர்வீகம்[4]

டொரெசு நீரிணைத் தீவுவாசிகள் மெலனீசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், ஆத்திரேலியாவின் பெருநிலப்பகுதி மற்றும் சில ஆத்திரேலியத் தீவுகளில் உள்ள தொல்குடி ஆத்திரேலியர்களிடமிருந்து இவர்கள் வேறுபட்டவர்கள்.[13][14] இவர்கள் நியூ கினி மக்களுடன் சில மரபணு, கலாச்சார பண்புகளை பகிர்ந்து கொள்கின்றனர்.[15]

தேசியக் கொடியில் உள்ள ஐந்து புள்ளிகள் கொண்ட விண்மீன் ஐந்து கலாச்சாரக் குழுக்களைக் குறிக்கிறது;[15] மற்றொரு தகவல், இது தொடக்கத்தில் தீவுகளின் ஐந்து குழுக்களைக் குறிக்கிறது எனக் கருதுகிறது, ஆனால் இன்று (2001 வரை) இது ஐந்து முக்கிய அரசியல் பிரிவுகளைக் குறிக்கிறது.[16]

குடியேற்றக் காலத்திற்கு முந்தைய தீவு மக்கள் ஒரே மாதிரியான குழுவாக இருக்கவில்லை, அதுவரை தங்களை ஒரு தனி மக்களாக கருதவில்லை. இவர்கள் பப்புவா நியூ கினி மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர், நோரெசு நீரிணையின் பல தீவுகள் ஆத்திரேலியாவை விட பப்புவா நியூ கினிக்கு மிக அருகில் உள்ளன, அதே போல் ஆத்திரேலியக் கண்டத்தில் உள்ள கேப் யார்க்கின் வடக்கு முனையிலும் உள்ளன.[16]

இன-மொழியியல் குழுக்களில் அடங்கும் மக்கள்:

  • படு மக்கள், மத்திய-மேற்கு படு தீவை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
  • கௌராரெக், கீழ் மேற்குத் தீவுவாசிகள், முரலாக் (பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவு) குழுவை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
  • முபியாக் அல்லது முவிகிப்கால் மக்கள், பல தீவுகளில் வாழ்கின்றனர்..
  • மெரியாம் மக்கள், மரே தீவு (மெர் தீவு என்றும் அழைக்கப்படுகிறது), தபார் தீவு உட்படப் பல உள் கிழக்குத் தீவுகளில் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2016 Census QuickStats: Torres Strait Island (R)". Australian Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 27 December 2019.
  2. 2.0 2.1 "3238.0.55.001 – Estimates of Aboriginal and Torres Strait Islander Australians, June 2016". Australian Bureau of Statistics. 31 August 2018. பார்க்கப்பட்ட நாள் 27 December 2019.
  3. "Torres Strait. Oxford Dictionary Online". Oxford University Press. Archived from the original on 23 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 ""2021 Census – Cultural Diversity, 2021, TableBuilder"". Australian Bureau of Statistics (ABS).
  5. "About the Torres Strait". Torres Shire Council. Queensland Government. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  6. "Australia's Aboriginal and Torres Strait Islander peoples". Australia Now. Australian Government, Department of Foreign Affairs and Trade. Archived from the original on 8 October 2006. பார்க்கப்பட்ட நாள் 10 December 2006.
  7. "2071.0 – Census of Population and Housing: Reflecting Australia – Stories from the Census, 2016: Aboriginal and Torres Strait Islander Population, 2016". Australian Bureau of Statistics. 31 October 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2020.
  8. "About the Torres Strait". Torres Strait Shire Council. பார்க்கப்பட்ட நாள் 21 October 2019.
  9. Korff, Jens (4 August 2021). "Aboriginal timeline: Health". Creative Spirits. பார்க்கப்பட்ட நாள் 4 August 2021.
  10. Jeremy Beckett (1990). Torres Strait Islanders: Custom and Colonialism. Cambridge University Press. pp. 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-37862-8. பார்க்கப்பட்ட நாள் 7 March 2016.
  11. Kelly, John (June 2001). "Evaluation of the Torres Strait Regional Authority" (PDF). Australian National Audit Office. Archived from the original (PDF) on 4 March 2016.
  12. "Aboriginal and Torres Strait Island local government" (PDF). Report of the Local Government Reform Commission. State of Queensland. July 2007. pp. 59–65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-921057-10-6. Archived from the original (PDF) on 25 July 2008. பார்க்கப்பட்ட நாள் 31 March 2008.
  13. "The people and history of the Torres Strait Islands". BBC News. 24 August 2015. https://www.bbc.com/news/world-australia-34037235. 
  14. "Australian Institute of Aboriginal and Torres Strait Islander Studies". பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  15. 15.0 15.1 "Torres Strait Islander peoples". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  16. 16.0 16.1 Shnukal, Anna. "Torres Strait Islanders" (PDF). Multicultural Australia.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொரெசு_நீரிணை_தீவினர்&oldid=4105460" இலிருந்து மீள்விக்கப்பட்டது