உள்ளடக்கத்துக்குச் செல்

டொமினிக் ஸ்ட்ராஸ்-கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொமினிக் ஸ்ட்ராஸ் கான்
Dominique Strauss-Kahn
10வது மேலாண் இயக்குனர்,
பன்னாட்டு நாணய நிதியம்
பதவியில்
1 நவம்பர் 2007 – 15 மே 2011
Deputyஜான் லிப்ஸ்கி
முன்னையவர்ரொட்ரிகோ ராடோ
பின்னவர்ஜான் லிப்ஸ்கி (பொறுப்பு)[1]
பிரான்சின் நிதி மற்றும் பொருளாதார அமைச்சர்
பதவியில்
4 சூன் 1997 – 2 நவம்பர் 1999
முன்னையவர்ஜீன் ஆர்துயி
பின்னவர்கிறிஸ்டியன் சௌட்டர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 ஏப்ரல் 1949 (1949-04-25) (அகவை 75)
நியுயி சுர் சீன், பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
அரசியல் கட்சிசோசலிசக் கட்சி
துணைவர்ஆன் சின்கிளையர்

டொமினிக் காஸ்டோன் ஆண்ட்ரெ ஸ்ட்ராஸ் கான் (Dominique Gaston André Strauss-Kahn, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[dɔminik stʁos kan]; பிறப்பு 25 ஏப்ரல் 1949, பரப்பு ஊடகங்களில் பெரும்பாலும் DSKஎனக் குறிப்பிடப்படுபவர்),[2][3] ஓர் பிரெஞ்சு பொருளியலாளர், வழக்கறிஞர், மற்றும் பிரான்சின் சோசலிசக் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி. செப்டம்பர் 28, 2007ஆம் ஆண்டு பன்னாட்டு நாணய நிதியம் பிரச்சினைகளில் தடுமாறியபோது பிரான்சின் அதிபர் நிக்கொலா சார்கோசியின் ஆதரவுடன் அதன் மேலாண் இயக்குனராக பதவியேற்றார்.

பாரிசிலுள்ள பாரிசு அரசறிவியல் கல்விக் கழகத்தில் (Institut d'Études Politiques de Paris) பொருளியல் பேராசிரியராக உள்ளார். 1997 முதல் 1999 வரை லியோனல் யோசுபின்னின் இடதுசாரி ஆட்சியில் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக இருந்தார். பிரெஞ்சு அரசியலில் "நடு-இடது" கட்சியான சோசலிசக் கட்சி(PS)யில் வலது நோக்குடையவராக இருந்தார். 2007ஆம் ஆண்டு பிரெஞ்சு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிந்தெடுக்கும் கட்சித் தேர்தலில் நவம்பர் 2006இல் செகோலீன் ராயலிடம் தோற்றார்.

மே 15, 2011 அன்று நியூயார்க் தங்குவிடுதியில் விடுதிப்பணிப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baker, Al; Erlanger, Steven (15 May 2011). "I.M.F. Names Replacement as Chief Awaits Arraignment". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2011/05/16/nyregion/imf-names-replacement-as-chief-awaits-arraignment.html. பார்த்த நாள்: 15 May 2011. 
  2. Willsher, Kim (15 May 2011). "Dominique Strauss-Kahn's sex arrest could end presidential hopes" (in English). The Guardian. http://www.guardian.co.uk/world/2011/may/15/dominique-strauss-kahn-sex-arrest. பார்த்த நாள்: 15 May 2011. 
  3. (பிரெஞ்சு) "Dominique Strauss-Kahn". Les Stars: Bios de Stars. Gala.fr. பார்க்கப்பட்ட நாள் 15 May 2011.
  4. ஓட்டல் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கைது பரணிடப்பட்டது 2011-05-19 at the வந்தவழி இயந்திரம்- தினகரன் செய்தி 16 மே,2011

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொமினிக்_ஸ்ட்ராஸ்-கான்&oldid=3214795" இலிருந்து மீள்விக்கப்பட்டது