டைரனொசோரசு
டைரனோசாரஸ் ரெக்ஸ் புதைப்படிவ காலம்:Late Cretaceous | |
---|---|
![]() | |
T. rex skull, Palais de la Découverte, Paris. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Tyrannosaurus Osborn, 1905
|
இனம் | |
| |
வேறு பெயர்கள் | |
டைரனசோரசு தெரொபோடா தொன்மாக்களின் பேரினமாகும். இப்பேரினத்தின் பிரபலமான இனமான டி.ரெக்சு (T. rex) பொதுக்கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது. டைரனசோரசு இன்றைய மேற்கு அமெரிக்கா முழுவதும் வாழ்ந்ததிற்கான புதைப்படிவ ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. டைரனசோரசின் புதைபடிவங்கள் 68 முதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பல்வேறுபட்ட பாறைப்படிவுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. கிரேடேசியசு-டேர்சரி அழிவுக்கு முன்னதாக வசித்த பறக்க முடியாத பறவை தொன்மாக்களில் ஒன்றாகும்.
டைரனசோரிட்டுக்களைப் போலவே டைரனசோரசும் இருகாலி ஊனுண்ணியாகும். அதன் பெரிய தலையின் எடை அதன் நீளமான வாலினால் சமன் செய்யப்பட்டது. பெரிய ஆற்றல் மிக்க பின்னங்கால்களோடு ஒப்பிடுகையில் அதன் முன்னங்கால்கள் சிறியவையாகும். இருப்பினும் அவற்றின் அளவுடன் ஒப்பிடுகையில் ஆற்றல் மிக்கவையாக காணப்பட்டன. மேலும் முன்னங்கால்களில் இரண்டு விரல்களும் மூன்றாவது பண்டெச்ச விரலும் காணப்பட்டன. ஏனைய தெரொபோடா தொன்மாக்கள் டைரனசோரசை விட பெரியவையாக காணப்பட்டாலும் டைரனசோரிட்டுக்களில் பெரிய இனமாக டைரனசோரசு காணப்பட்டது. 13 மீட்டர் (43 அடி) நீளமும் [1] 4 மீ (13 அடி) உயரமும் [2] அண்ணளவாக 6.8 மெட்ரிக் டன் எடையையும் கொண்ட[3] டைரனசோரசு அதந் சூழலில் மிகப்பெரிய வேட்டையாடும் விலங்காக காணப்பட்டது. எட்ரசோர், செரடொப்சியா போன்றவை அதன் இரை விலங்குகளாக காணப்பட்டிருக்கலாம். சில ஆய்வாளர்கள் டைரனசோரசு இறந்த விலங்குகளின் உடலங்களை தேடி உண்டதாக கருதுகின்றனர்.
முப்பதுக்குமதிகமான டைரனசோரசு புதைப்படிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இவற்றுள் சில முழுமையான மண்டையோட்டைக் கொண்டுள்ளன. ஆகக் குறைந்தது ஒரு மாதிரியிலாவது இழையங்களும் புரதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதைப்படிவ எச்சங்கள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளமை அதிகளவிலான ஆய்வுகளுக்கு வழிசெய்துள்ளது. இருப்பினும், இதன் உணவுப் பழக்கம், பயனித்த வேகம் போன்றவைத் தொடர்பில் வாதபிரதிவாதம் தொடர்கிறது. ஆசியாவில் கண்டெடுக்கப்பட்ட டர்போசோரசை டைரனசோசின் இரண்டாம் இனமாக ஒரு சாராரும் ஏனையவர்கள் டர்போசோரசை தனிப் பேரினமாகவும் கருதுவதால் டைரனசோரசின் வகைப்பாடும் சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Erickson, Gregory M.; Makovicky, Peter J.; Currie, Philip J.; Norell, Mark A.; Yerby, Scott A.; & Brochu, Christopher A. (2004). "Gigantism and comparative life-history parameters of tyrannosaurid dinosaurs". Nature 430 (7001): 772–775. doi:10.1038/nature02699.