டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன்
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன் | |
முறையான ஐயூபிஏசி பெயர்
டையீத்தாக்சிடைமெத்தில்சிலேன் | |
இனங்காட்டிகள் | |
78-62-6 ![]() | |
Abbreviations | DMDEOS |
Beilstein Reference
|
1736110 |
ChemSpider | 56117 ![]() |
EC number | 201-127-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 62322 |
வே.ந.வி.ப எண் | VV3590000 |
| |
UN number | 2380 |
பண்புகள் | |
C6H16O2Si | |
வாய்ப்பாட்டு எடை | 148.28 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.865 கி செ.மீ−3 |
உருகுநிலை | −87 °C (−125 °F; 186 K) |
கொதிநிலை | 114 °C (237 °F; 387 K) |
கரைதிறன் | கார்பன் டெட்ரா குளொரைடு கரைசலில் கரையும்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன் (Dimethyldiethoxysilane) என்பது C6H16O2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கன் சேர்மமாகும். பாலிடைமெத்தில்சிலாக்சோன் எனப்படும் சிலிக்கோன் பலபடிகளை உருவாக்கும் ஒரு முன்னோடிச் சேர்மமாக இது கருதப்படுகிறது.
கரிமத்தொகுப்பு வினைகளில் ஐதராக்சில், அமினோ குழுக்களை செயலொடுக்கம் செய்யும் ஒரு பயனுள்ள இடைநிலை சிலேனாக டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன் பயன்படுகிறது. இந்த சிலைலேற்றப் படிநிலை ஐதராக்சில், அமினோ குழுக்களை செயலொடுக்கம் செய்து பின்னர் அடுத்தடுத்த வினைகளை அனுமதிக்கிறது. செயலொடுக்கம் செய்யப்பட்ட இரு தொகுதிகளையும் தொடரும் நீராற்பகுப்பு வினையின் மூலமாக மீளப்பெற இயலும். நீர் எதிர்ப்பு மற்றும் வெளியிடும் பொருட்களைத் தயாரிக்கவும் தூள்களின் பாய்வை அதிகரித்தலிலும் டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன் பயன்படுத்தப்படுகிறது [2] [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–180, ISBN 0-8493-0594-2
- ↑ Merhari, Lhadi (2009), Hybrid Nanocomposites for Nanotechnology, Springer, pp. 184–185, ISBN 978-0-387-72398-3, retrieved 2009-07-19
- ↑ http://www.gpcsilicones.com/silanes/exp49.html