டைகுளோரோ(1,5-வளைய ஆக்டாடையீன்) பிளாட்டினம்(II)
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டைகுளோரோ(1,5-சைக்ளோ ஆக்டாடையீன்) பிளாட்டினம்(II)
| |
இனங்காட்டிகள் | |
12080-32-9 | |
ChemSpider | 4642949 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5702648 |
| |
பண்புகள் | |
C8H12Cl2Pt | |
வாய்ப்பாட்டு எடை | 374.17 g·mol−1 |
உருகுநிலை | 285 °C (545 °F; 558 K) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Xi |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26-S37/39 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைகுளோரோ(1,5-வளைய ஆக்டாடையீன்) பிளாட்டினம்(II) (Dichloro(1,5-cyclooctadiene)platinum(II)) என்பது C8H12Cl2Pt என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட பிளாட்டினத்தின் கரிம உலோக சேர்மம் ஆகும். சுருக்கமாக (Pt(cod)Cl என்று இதைக் குறிப்பிடுவார்கள். டைகுளோரோ(1,5-சைக்ளோ ஆக்டாடையீன்) பிளாட்டினம்(II) என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. திண்ம நிலையில் நிறமற்ற சேர்மமாக காணப்படுகிறது. வளைய ஆக்டாடையீனை அல்லது குளோரைடு ஈந்தணைவிகளை இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் பிற பிளாட்டினம் சேர்மங்களை உருவாக்குவதில் தொடக்க வினைபொருளாக பயன்படுகிறது. 1,5-வளைய ஆக்டாடையீனின் பல்வேறு அணைவுச் சேர்மங்களில் இச்சேர்மமும் ஒன்றாகும். பொட்டாசியம் டெட்ராகுளோரோபிளாட்டினேட்டுடன் டையீனைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் டைகுளோரோ(1,5-வளைய ஆக்டாடையீன்) பிளாட்டினம்(II) சேர்மத்தை தயாரிக்கலாம் :[1]
- K2PtCl4 + C8H12 → PtCl2C8H12 + 2 KCl.
இச்சேர்மம் சதுரதள வடிவத்தில் படிகமாவதாக எக்சு கதிர் படிகவியல் ஆய்வு தெரிவிக்கிறது [2][3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ E. Costa; P. G. Pringle; M. Ravetz (1997). "[(1,2,5,6-η)-1,5-Cyclooctadiene]Dimethyl-Platinum(II)". Inorg. Synth.. Inorganic Syntheses 31: 284–286. doi:10.1002/9780470132623.ch49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13262-3.
- ↑ Anil B. Goel, Sarla Goel, Don Van Der Veer (1982). "Chemistry of Metal diene complexes: X-ray crystal structure of dichloro(1,5-cyclooctadine)platinum(II)". Inorganica Chimica Acta 65: L205-L206. doi:10.1016/S0020-1693(00)93548-5.
- ↑ Ashfaquzzaman Syed; Edwin D. Stevens; Sandra G. Cruz (1984). "Reexamination of the π bonding in dichloro(cycloocta-1,5-diene)platinum". Inorg. Chem. 23 (22): 3673–3674. doi:10.1021/ic00190a053.
மேலும் படிக்க
[தொகு]- J. L. Butikofer, E. W. Kalberer, W. C. Schuster, and D. M. Roddick, “The Crystal Structure of Dichloro(norbornadiene)platinum(II): A Comparison to Dichloro(cyclooctadiene)platinum(II),” Acta Crystallogr. C. 2004, m353-m354.