உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் மெக்காலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் மெக்காலோ

டேவிட் மெக்காலோ (David Gaub McCullough) என்பவர் 7 சூலை 1933 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 அன்று பிறந்த ஓர் அமெரிக்கர் ஆவார். நூலாசிரியர், வரலாற்றாளர், விரிவுரையாளர் பேராசிரியர்[1] என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர் என்ற சிறப்பு இவருக் இருக்கிறது. இவர் புலிட்சர் பரிசையும் தேசிய புத்தக விருதையும் இரண்டு முறை பெற்றார். அமெரிக்காவின் உயர்ந்த விருதான சுதந்திர பதக்கத்தையும் [1][2], பிரான்சிசு பார்க்மேன் பரிசுகள் இரண்டும் பெற்றுள்ளார்.

மெக்காலோ பிட்சுபர்க்கில் பிறந்து அங்கேயே வளர்ந்து ஆளானார். யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார் . கல்லூரிப் படிப்பு முடிந்தும் நியூயார்க்கில் விளையாட்டு இதழ் ஒன்றில் வேலை செய்தார். 1960 களில் அமெரிக்க எரிட்டேச்சு என்னும் இதழை ஆசிரியராக இருந்து வெளிக் கொண்டுவந்தார்.[3] 1968 இல் இவரது முதல் நூலான தி யான்சுடவுன் பிளட் 1968 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் பின்னர் இதே போன்ற ஒன்பது நூல்களை எழுதி இவர் வெளியிட்டார். ஆரி எசு இட்ருமான், யான் ஆடம்சு, தி புரூக்ளின் பிரிட்ச்சு, ரைட்டு பிரதர்சு என்பன போன்றவை அந்நூல்களாகும். கென் பர்ன்சு இயக்கிய சிவில் வார் மற்றும் 2003 ஆண்டு எடுக்கப்பட்ட சீ பிசுக்கட்டு என்ற திரைப்படம் போன்ற பல எண்ணற்ற ஆவணப்படங்களை மெக்காலோ விவரித்துள்ளார். பன்னிரண்டு ஆண்டுகள் இவர் தனது அமெரிக்க அனுபவத்தை இத்துறையில் வழங்கினார்.

புலிட்சர் விருது பெற்ற புத்தகங்களான இட்ரூமன் மற்றும் யான் ஆடம்சு ஆகிய மெக்காலோவின் இரண்டு நூல்களையும் எச்.பி.ஒ. தொலைக்காட்சி முறையே ஒரு தொலைக்காட்சி திரைப்படமாகவும், ஒரு குறுந்தொடர் நிகழ்ச்சியாவும் மாற்றியமைத்து பயன்படுத்தியது.

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

இளமைப்பருவம்

[தொகு]

அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள [4] பிட்சுபர்குக்கு அடுத்துள்ள பாயிண்டு பிரீசுவில் மெக்கல்லோ பிறந்தார். இவருடைய பெற்றோர் ரூத் மற்றும் கிறிசுட்டியன் ஆக்சு மெக்கல்லோ ஆகியோராவர் [5] இவரது குடும்பம் இசுக்காட்லாந்து அயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்தது ஆகும்[6]>. மெக்கல்லோ தன் சொந்த ஊரான பிட்சுபர்க்கிலேயே இலிண்டன் அவென்யூ கிரேடு பள்ளியிலும் சேடி சைடு அகாதமியிலும் கல்வி கற்றார்[7]. நான்கு மகன்களில் ஒருவராக இருந்த மெக்கல்லோவின் சிறுவயது பருவம் மிகவும் அற்புதமானது. பரந்தளவிலான ஆர்வங்களை மெக்கல்லோவிற்கு அப்பருவம் வழங்கியது. , விளையாட்டு மற்றும் கேலி சித்திரங்கள் வரைதல் உட்பட பல துறைகளில் இவருக்கு ஆர்வம் மிகுந்திருந்தது [8]. இவரை நன்கு கவனித்து வந்த பெற்றோரும் பாட்டியும் சிறுவயதிலேயே இவருக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினர் [6]. வரலாற்றைப் பற்றி அதிகமாகப் பேசினர், விவாதித்தனர் [6].மெக்கல்லோ தினமும் பள்ளிக்கூடம் செல்வதை விரும்பினார் [8]. கட்டிடக்கலை, நடிகர், ஓவியர், எழுத்தாளர், வழக்கறிஞர் மருத்துவர் என பல தொழில் வாய்ப்புகளைப் பற்றி அவர் சிந்தித்தார் [8].1951 இல் மெக்கல்லோ யேல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார் [9]. யான் ஓ ஆரா, யான் எர்சி, இராபர்ட் பென் வாரன் மற்றும் பிரெண்டன் கில் போன்ற ஆசிரியர்களிடம் அங்கு ஆங்கிலம் படித்தது தனக்குக் கிடைத்த பெரும்பேறு என்று அவர் கூறினார் [10] McCullough occasionally ate lunch with the Pulitzer Prize-winning[11] novelist and playwright Thornton Wilder.[10] புலிட்சர் பரிசு [11] வென்ற நாவலாசிரியரும் நாடக ஆசிரியருமான தார்ன்டன் வைல்டர் [10] உடன் மெக்கல்லோ எப்பொழுதாவது மதிய உணவை சாப்பிடுவார். ஒரு திறமையான எழுத்தாளர் தன்னுடைய கதையில் வானளாவிய சுதந்திரத்தை பராமரிக்கிறார். அறிவியல் அல்லாத புத்தகமாக இருந்தாலும் கூட ஒரு வாசகர் விளைவுகள் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்று வைல்டர் மெக்கல்லோவிற்கு அச்சமயங்களில் கூறியும் கற்பித்தும் இருக்கிறார் [12].

யேல் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது மெக்கல்லோ சிகல் அண்டு போன்சு என்ற அமைப்பில் உறுப்பினரானார் [13]. டைம் என்ற அமெரிக்க தகவல் முகமையிலும், லைஃப், என்ற செய்தி பத்திரிகையிலும் மெக்காலோ ஒரு பயிற்சியாளராகக் பயிற்சி பெற்றார்[10]. பயிற்சியாளராக இருந்தபோது அங்கு அவர் ஆராய்ச்சி அனுபவங்களை இரசித்தார். ஆராய்ச்சியின் முடிவில்லாத ஆர்வத்தை கண்டுபிடித்து அதை எழுத்துக்களாக எழுதுவேண்டும் என நினைத்தார். எழுத்தின் மூலம் தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அங்குதான் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார் [10]. யேல் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் சேர்ந்த மெக்கல்லோ, ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என்ற இலக்குடன் ஆங்கில பாடத்தில் பட்டம் பெற்றார் [6]. 1955 ஆம் ஆண்டு மெக்காலோ ஆங்கிலத்தில் ஆனர்சு பட்டம் பெற்றார் [14][15].

எழுத்துப் பணி

[தொகு]

பட்டம் பெற்ற பிறகு மெக்கல்லோ நியூயார்க் நகரத்திற்குச் சென்றார், அங்கு விளையாட்டுப் பத்திரிக்கை ஒன்று அவரை ஒரு பயிற்சியாளராக பணியமர்த்திக் கொண்டது [8].பின்னர் அவர் வாசிங்டன், டி.சி. இல் உள்ள அமெரிக்க தகவல் முகமையின் ஆசிரியர் மற்றும் எழுத்தாளராகப் பணியாற்றினார் [4].அமெரிக்கப் பாரம்பரியம் பத்திரிகையில் ஒரு முக்கிய பொறுப்பு வகித்தது உட்பட பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த பிறகு தந்து சொந்த முயற்சியில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. வரலாற்றை எழுதப் போகிறோம் என்று அவர் என்றும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவர் தான் சொல்லப்போகும் கதை சக்தி வாய்ந்த, அற்புதமான, மிகவும் மதிப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனக் கருதினார் "[8].

அமெரிக்க பாரம்பரியம் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் கிடைத்த ஓய்வு நேரங்களில் மூன்று ஆண்டுகளாக அவர் எழுதினார் [8][16]. 1868 [8] ஆம் ஆண்டில் தி யான்சுடவுன் பிளட் வெளியாகி அதிக அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது [17].. எங்களிடம் சிறந்த சமூக வரலாற்றாளர் எவருமில்லை என்று நியூயார்க் டைம்சு பத்திரிகையின் யான் லியோனார்டு மெக்கல்லோவிடம் கூறினார் "[17]. அந்நேரத்தில் அவருக்கிருந்த நிதி நெருக்கடி காரணமாக அவர் முழு நேர எழுத்தாளராக மாறுவதென முடிவு செய்தார். மனைவி ரோசாலியும் அம்முடிவுக்கு ஆதரவு கொடுத்தார் [18].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Biography at Simon & Schuster". Archived from the original on 2008-06-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-21.
  2. Sherman, Jerome L (2006-12-16). "Presidential biographer gets presidential medal". Pittsburgh Post-Gazette. http://www.post-gazette.com/pg/06350/746640-44.stm. பார்த்த நாள்: 2006-12-18. 
  3. https://www.theparisreview.org/interviews/894/david-mccullough-the-art-of-biography-no-2-david-mccullough
  4. 4.0 4.1 "David McCullough Biography". Academy of Achievement. பெப்பிரவரி 2, 2005. Archived from the original on மே 17, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 23, 2008.
  5. "David McCullough". National Book Awards Acceptance Speeches. National Book Foundation. Archived from the original on 2008-04-15. பார்க்கப்பட்ட நாள் 2008-04-24.
  6. 6.0 6.1 6.2 6.3 "David McCullough". The Charlie Rose Show. PBS. 2008-03-21. 60 minutes in. Archived from the original on April 30, 2008. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-04-30. பார்க்கப்பட்ட நாள் 2018-03-31.
  7. Sherman, Jerome L (2006-12-16). "Presidential biographer gets presidential medal". Pittsburgh Post-Gazette. http://www.post-gazette.com/pg/06350/746640-44.stm. பார்த்த நாள்: 2006-12-18. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 "Interview: David McCullough Two Pulitzer Prizes for Biography". Academy of Achievement. சூன் 3, 1995. Archived from the original on ஏப்பிரல் 3, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 22, 2008.
  9. Hoover, Bob (2001-12-30). "David McCullough: America's historian, Pittsburgh son". Pittsburgh Post-Gazette. http://www.post-gazette.com/books/20011230mccullough1230fnp2.asp. பார்த்த நாள்: 2008-04-21. 
  10. 10.0 10.1 10.2 10.3 Cole, Bruce. "David McCullough Interview". National Endowment for the Humanities. Archived from the original on 2008-05-11. பார்க்கப்பட்ட நாள் 2008-04-22.
  11. "Biography". Thorton Wilder Society. பார்க்கப்பட்ட நாள் 2008-04-22.
  12. Bolduc, Brian (2001-06-18). "Don't Know Much about History". The Wall Street Journal. https://www.wsj.com/articles/SB10001424052702304432304576369421525987128?mod=WSJ_hpp_sections_opinion. பார்த்த நாள்: 2011-06-18. 
  13. Robbins, Alexandra (2002). Secrets of the Tomb: Skull and Bones, the Ivy League, and the Hidden Paths of Power. Boston: Little, Brown and Company. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-316-72091-7.
  14. Yale University(1998-05-25). "Orthodox Church Patriarch and Entertainer Lena Horne Among Honorary Degree Recipients at Yale University". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-04-21. “David McCullough graduated from Yale in 1955 with honors in English literature and began his career as writer and editor for Time Inc. in New York City.”
  15. "David McCullough". PBS. Archived from the original on 2008-01-03. பார்க்கப்பட்ட நாள் 2008-04-21.
  16. "David McCullough biography: The Citizen Chronicler". National Endowment for the Humanities. Archived from the original on 2008-04-16. பார்க்கப்பட்ட நாள் 2008-04-23.
  17. 17.0 17.1 "Johnstown Flood: Reviews and Praise". ElectricEggplant. Archived from the original on 2007-08-14. பார்க்கப்பட்ட நாள் 2008-04-23.. The bestselling author Erik Larson has written that The Johnstown Flood was a book that changed his life. He found it full of "suspense, drama, class conflict, dire goings-on." Larson decided to write in the same genre, what he calls "narrative nonfiction," and thought McCullough's book "a Baedeker for how to go about it. I analyzed his source notes and outlined the story chapter by chapter, to try to divine just how he did it. And suddenly I had my compass. The result was Isaac's Storm." AARP Magazine, April/May, 2015,10.
  18. "David McCullough Profile". Academy of Achievement. பெப்பிரவரி 2, 2005. Archived from the original on மே 17, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 23, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_மெக்காலோ&oldid=3732320" இலிருந்து மீள்விக்கப்பட்டது