டெல்டா கதிர்
Appearance
டெல்டா கதிர் (delta ray - δ) என்பது நிறைகூடியதும் மின்னூட்டம் கொண்டதுமான ஆல்ஃபா கதிர்கள் அல்லது அதிக ஆற்றலுள்ள இலத்திரன்கள் ஓர் ஊடகம் வழியாகப் பயணிக்கும் போது, அவைகளின் பாதையில் தோற்றுவிக்கப்படும் துணை இலத்திரன்கள் ஆகும். இதனை முகிலறை போன்ற கருவிகளின் துணையுடன் தெளிவாகக் காணமுடியும். இத்துணை இலத்திரன்கள் போதிய ஆற்றலுடன் இருக்குமானால் அவைகளும் வேறு துணை இலத்திரன்களைத் தோற்றுவிக்கலாம்.[1] இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட துணை இலத்திரன்கள் டெல்டா கதிர்கள் எனப்படுகின்றன. இப்பெயரை ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதலில் கையாண்டார்.
இவற்றையும் பார்க்க
[தொகு]- டெல்டா பேரியான் அல்லது டெல்டா துகள்
- துகள் இயற்பியல்
- கதிரியக்கம்
- கதிர்வீச்சு
- கதிர்கள்:
- α (ஆல்ஃபா) கதிர்கள்
- β (பீட்டா) கதிர்கள்
- γ (காம்மா) கதிர்கள்
- δ (டெல்டா) கதிர்கள்
- ε (எப்சிலான்) கதிர்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Podgorsak, E. B., ed. (2005). Radiation Oncology Physics: A Handbook for Teachers and Students (PDF). Vienna: International Atomic Energy Agency. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-0-107304-6.