டெலிகிராம் (மென்பொருள்)
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
உருவாக்குனர் | டெலிகிராம் மெசெஞ்சர் LLP |
---|---|
தொடக்க வெளியீடு | 14 ஆகத்து 2013 |
இயக்கு முறைமை | க்ராஸ் பிளாட்பார்ம் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம்,அரபிக்,ஸ்பானிசஷ்,ஜெர்மன்,கொரியன்,டச்,போர்த்துகீஷ்.. |
உருவாக்க நிலை | செயல்பாட்டில் உள்ளது |
மென்பொருள் வகைமை | உடனடி தகவல் பரிமாற்றம் |
உரிமம் |
|
இணையத்தளம் | telegram |
தந்தி (Telegram) அல்லது தொலைவரி மென்பொருள் நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும்.மேக அடிப்படையில் தொலை பேசி எண்னை அடையாளமாக கொண்டு சேவை வழங்கிறது. தந்தி வாடிக்கையாளர்கள் செய்திகளை அலைபேசி (ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ் தொலைபேசி), மேசை கணனிகளில் (விண்டோஸ், மேக்கோசு,லினக்சு)ஆகியவற்றின் மென்பொருள் மூலம் பெற முடியும். உலவிகள் வழியாகவும் அணுக முடியும். இது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் இரண்டும் சேர்ந்த கலவையாகும்.புகைப்படங்கள், காணொலிகள், ஒட்டிகள், ஒலி, கோப்புகள் போன்றவை எந்த வகையில் இருந்தாலும் பரிமாற்றம் செய்ய முடியும்.தந்தி தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது End-to-end மறைகுறியாக்கப்பட்ட வசதியை வழங்குகிறது. இதன் செயலிகள் திறந்த மூல மென்பொருள்ஆகும். வழங்கி தனியுடைமையாகவும் உள்ளது.
வரலாறு
[தொகு]தொலைவரி மென்பொருள் முதன்முதலில் 14 ஆகத்து 2013 ல் IOS இயங்குதளத்தில் அறிமுகபடுத்த்பட்டது. மற்றும் 20 அக்டோபா் 2013 ஆல்பா பதிப்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு அறிமுகபடுத்த்ப்பட்டது. பாவெல் தூரவ்( Pavel Durov) தந்தி செயலிக்கு பொருளாதார பங்களிப்பும், நிகோலை தூரவ் (Nikolai Durov) தொழில் நுட்ப பங்களிப்பும் அளித்தனா். இதன் மேம்படுத்துனா் குழு துபாயை சாந்ததாக உள்ளது. பெரும்பாலும் மேம்படுத்தனா்கள் புனித பீட்டர்சுபர்கைச் சாரந்தவா்கள்.
வசதிகள்
[தொகு]தந்தி வேகமான நம்பகத்தன்மை கொண்ட சேவையாகும். இதில் நபா்களையோ சொற்களையோ குறிப்பிடவும் பதிளிக்கவும் மறைமுக அரட்டைமற்றும் ஹேஷ் குறியீடுகளை பயன்படுத்த முடியும். தந்தி குழுக்களில் 1,00,000 நபா்கள் வரை இணைக்க முடியும் [2]. குழு ஆளுநா்களுக்குகான தனித்துவமான வசதிகளையும் கொண்டுள்ளது. தனித்துவமான ஒட்டிகளை உருவாக்கவும்,பயன்படுத்தவும் வசதியளிக்கிறது. தகவல்கள் அனைத்தும் மேகக் கனிணியில் பதியப்படுவதால் எங்கும் பெறமுடியும். மிகப் பெரிய கோப்பின் அளவு 1.5 GB ஆகும். இவையனைத்தும் கட்டணமற்ற,விளம்பரங்களற்ற சேவையாகும்.https://telegram.org [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Telegram applications". 3 செப் 2020.
- ↑ "Telegram F.A.Q.", Telegram, பார்க்கப்பட்ட நாள் 2018-05-09
- ↑ "Telegram – a new era of messaging", Telegram, பார்க்கப்பட்ட நாள் 2018-05-09