உள்ளடக்கத்துக்குச் செல்

டெட்ராபீனைலார்சோனியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெட்ராபீனைலார்சோனியம் குளோரைடு (Tetraphenylarsonium chloride) என்பது C24H20AsCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நான்முகி வடிவத்திலுள்ள டெட்ராபீனைலார்சோனியம் நேர்மின் அயனியைச் சேர்ந்த குளோரைடு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. முனைவு பெற்ற கரிமக் கரைப்பான்களில் கரையும். பெரும்பாலும் இது நீரேற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பும் வேதி வினையும்

[தொகு]

டிரைபீனைலார்சீனிலிருந்து இருந்து தயாரிக்கப்படும் டெட்ராபீனைலார்சோனியம் குளோரைடு ஐதரோகுளோரைடை நடுநிலையாக்குவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது.:[1]

(C6H5)3As + Br2 → (C6H5)3AsBr2
(C6H5)3AsBr2 + H2O → (C6H5)3AsO + 2 HBr
(C6H5)3AsO + C6H5MgBr → (C6H5)4AsOMgBr
(C6H5)4AsOMgBr + 3 HCl → (C6H5)4AsCl.HCl + MgBrCl
(C6H5)4AsCl.HCl + NaOH → (C6H5)4AsCl + NaCl + H2O

மற்ற நான்கிணைய உப்புகளைப் போலவே, டெட்ராபீனைலார்சோனியம் குளோரைடும் கரிம ஊடகங்களில் பல்லணு நேர்மின் அயனிகளைக் கரைக்கப் பயன்படுகிறது.[2] இந்த நோக்கத்திற்காக, எதிர்மின் அயனிகளைக் கொண்ட நீரிய அல்லது மெத்தனாலிக் கரைசல்கள் டெட்ராபீனைலார்சோனியம் குளோரைடு கரைசலுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகின்றன். பொதுவாக டெட்ராபீனைலார்சோனியம் எதிர்மின் அயனி உப்பு வீழ்படிவாக உருவாகிறது.

தொடர்புடைய சேர்மங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shriner, R. L.; Wolf, Calvin N. (1950). "Tetraphenylarsonium Chloride Hydrochloride". Organic Syntheses 30: 95. doi:10.15227/orgsyn.030.0095. 
  2. Dieck, R. L.; Peterson, E. J.; Galliart, A.; Brown, T. M.; Moeller, T. (1976). "Tetraethylammonium, Tetraphenylarsonium, and Ammonium Cyanates and Cyanides". Inorganic Syntheses. Vol. 16. pp. 131–137. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132470.ch36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132470.