டெசுடினி நார்டனின் கொலை
டெசுடினி ஆனி நார்டன் (2000 நவம்பர் 30 - 2006 சூலை 16) என்பவர் கடத்தல் மற்றும் கொலைக்கு இரையான குழந்தை.
கொலை
[தொகு]கொலையுறும் முன், டெசுடினி ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரத்தில் வசித்து வந்தார். ஜூலை 16, 2006 அன்று வீட்டிலிருந்து காணாமல் போனார். சிறுமியின் சடலம், அவர்களது வீட்டில் இருந்து 100 அடி தொலைவில் உள்ள பக்கத்து வீட்டினரான க்ரெய்க் ரோஜர் க்ரிகர்சனின் வீட்டு அடித்தளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
படுக்கைக்குச் செல்வதைப் பற்றி அவள் பெற்றோருடன் வாதிட்ட பிறகு அவள் வீட்டை விட்டு வெளியேறியதை கடைசியாக பார்த்தவர்கள் கூறினர். அவள் பெற்றோருடன் ஒரு சிறிய பண்ணையில் தங்கியிருந்தாள், பொருளாதார காரணங்களுக்காக வீட்டை பத்து பேர்களாக மற்ற ஜோடிகள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
குழந்தை காணாமல் போனபின்னர் சால்ட் லேக் சிட்டி முழுவதும் காணாமல் போயுள்ள குழந்தையின் உருவ அடையாள விளக்கத்துடன் வாசகங்களைக் இட்டனர். அதன்பிறகு சுமார் 5,000 தன்னார்வல தொண்டர்கள், எப்.பி.ஐ, காவல்துறையினர் ஆகியோரின் எட்டு நாள் தேடலுக்குப் பின்னர், 2006 சூலை 24, அன்று, டெஸ்டினியின் உடலை அவரது அண்டை வீட்டுக்காரர் கிரெய்க் ரோஜர் கிரெகெர்சனின் அடித்தளத்தில் அவர்களது வீட்டிலிருந்து 100 அடிக்கு குறைவான தொலைவில் கண்டறிந்தனர்.[1] தேடல் முடிவுக்கு வந்தபிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆரம்பத்தில் சீற்றம் அடைந்து, விசாரணையை தவறாகப் புரிந்து கொண்ட அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டினார். பின்னர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சார்பில் பத்திரிக்கையாளரிகளிடம் மன்னிப்பு கோரினர்.
2006 ஜூலை 27 அன்று கடத்தல் மற்றும் மோசமான படுகொலை செய்த்தற்காக கிரெர்ஜெர்சன் கைது செய்யப்பட்டார். மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காக மனு தாக்கல் செய்த அவர், டிசம்பர் 4 ம் தேதி கொலை மற்றும் குழந்தை கடத்தலின் முதன்மை குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டார். கொலைக்கு ஆயுள் தணைடனையும், கடத்தலுக்கு பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டுயிருக்கும்.[2]
2007 ஆம் ஆண்டில், டெஸ்டினி சர்ச் திட்டத்தால்[3] டெஸ்டினி நார்டனின் நினைவகம் உருவாக்கப்பட்டது. காணாமற்போகும் சம்பவங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு உதவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Destiny Norton Found Dead, Suspect Arrested".
- ↑ "Gregerson pleads guilty, gets life for killing Destiny". Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2017-08-02.
- ↑ "Destiny Search Project". Archived from the original on 2018-05-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-02.