டுவிலைட் (2008 திரைப்படம்)
டுவிலைட் | |
---|---|
![]() பட வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | கேத்தரின் ஹார்ட்விக் |
தயாரிப்பு |
|
திரைக்கதை | மெலிசா ரோசன்பெர்க் |
இசை | கார்ட்டர் புருவெல் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எலியட் டேவிஸ் |
படத்தொகுப்பு | நான்சி ரிச்சர்சன் |
கலையகம் | |
விநியோகம் | சும்மிட் என்டேர்டைன்மென்ட்[1] |
வெளியீடு | நவம்பர் 17, 2008(லாஸ் ஏஞ்சலஸ்) நவம்பர் 21, 2008 (United States) |
ஓட்டம் | 121 நிமிடங்கள்[2] |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள்[3] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $37 மில்லியன்[4] |
மொத்த வருவாய் | $408.4 மில்லியன்[5] |
டுவிலைட் (Twilight) என்பது என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க காதல் கற்பனைத் திரைப்படமாகும். இது மெலிசா ரோசன்பெர்க்கின் திரைக்கதையிலிருந்து கேத்தரின் ஹார்ட்விக் இயக்கியிருந்தார். இசுடீபனி மேயர் எழுதிய டுவிலைட் என்ற அதே பெயரில் 2005 இல் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இது தி டுவிலைட் சாகா திரைப்படத் தொடரின் முதல் பாகமாகும். இந்தப் படத்தில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட் பெல்லா ஸ்வான் என்ற இளம் வயது பெண்ணாகவும், ராபர்ட் பாட்டின்சன் எட்வர்ட் கல்லன் என்ற வாம்பைராகவும் நடித்துள்ளனர்.
கதைச் சுருக்கம்
[தொகு]இப்படத்தின் கதை பெல்லா மற்றும் எட்வர்டின் உறவின் வளர்ச்சியையும், பின்னர் எட்வர்டும் அவரது குடும்பத்தினரும் பெல்லாவை மற்றொரு காட்டேரி கூட்டத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கும் முயற்சிகளையும் மையமாகக் கொண்டுள்ளது.
தயாரிப்பு
[தொகு]பாரமவுண்ட் பிக்சர்ஸின் துணை நிறுவனமான எம்டிவி பிலிம்ஸ் சுமார் மூன்று ஆண்டுகளாக இந்தத் திட்டம் பற்றி விவாத்து வந்தது. அதே நேரத்தில் புதினத்திலிருந்து கணிசமாக வேறுபட்ட ஒரு திரைப்படத் தழுவலாகவும் எடுக்கத் திட்டமிடப்பட்டு எழுதப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் 2008 இல் தொடங்கி மே 2 அன்று முடிக்கப்பட்டது. இந்தப் படம் ஓரிகன் மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் படமாக்கப்பட்டது.[6]
வெளியீடு
[தொகு]டுவிலைட் நவம்பர் 17,2008 அன்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திரையிடப்பட்டது. மேலும் அமெரிக்காவில் நவம்பர் 21 அன்று சம்மிட் என்டர்டெயின்மென்ட் மூலம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், இந்த படம் உலகளவில் 407 மில்லியன் டாலர்களை வசூலித்தது.[5] இதன் டிவிடி மற்றும் பபுளூ-ரே இசைத்தட்டுகள் மார்ச் 21,2009 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஆண்டின் அதிகம் வாங்கப்பட்ட டிவிடி ஆனது.[7] படத்தின் ஒலிப்பதிவு நவம்பர் 4,2008 அன்று வெளியிடப்பட்டது.
படத்தின் தொடர்ச்சி
[தொகு]இந்தப் படத்தைத் தொடர்ந்து தி ட்விலைட் சாகா: நியூ மூன் (2009), தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ் (2010), தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 (2011) மற்றும் தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 (2012) என இதன் நான்கு தொடர்ச்சிகள் வந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Twilight (2008)". British Film Institute. Archived from the original on 2021-01-12. Retrieved 2021-01-10.
- ↑ bbfc (2008-11-21). "TWILIGHT rated 12A by the BBFC". bbfc இம் மூலத்தில் இருந்து 2008-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081209014608/http://www.bbfc.co.uk/website/Classified.nsf/0/634D764F90D0ECDC8025750000605A04?OpenDocument.
- ↑ "Twilight (2008)". AFI Catalog of Feature Films. Archived from the original on July 24, 2021. Retrieved August 5, 2020.
- ↑ Nicole Sperling (2008-07-10). "'Twilight' hits Hollywood". Entertainment Weekly. Time Inc. Archived from the original on October 24, 2014. Retrieved 2008-07-26.
- ↑ 5.0 5.1 "Twilight (2008)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on 2019-10-10. Retrieved 2010-07-05.
- ↑ Nicole Sperling (2009-10-29). "'Twilight' reshoots: Why is Catherine Hardwicke filming again?". Entertainment Weekly. Archived from the original on October 19, 2008. Retrieved 2008-10-13.
- ↑ "Top Selling DVDs of 2009". The Numbers. Archived from the original on 2020-11-15. Retrieved 2010-08-12.
வெளி இணைப்புகள்
[தொகு]