உள்ளடக்கத்துக்குச் செல்

டீ கடை ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டீ கடை ராஜா
இயக்கம்மருது ராஜா / ராஜா சுப்பையா
கதைமருது ராஜா / ராஜா சுப்பையா
நடிப்பு
ஒளிப்பதிவுஎலன்
படத்தொகுப்புமுத்துராஜ்
கலையகம்எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன்
விநியோகம்ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
ஓட்டம்107 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டீ கடை ராஜா (Tea Kadai Raja) (தமிழ்: 2016 இல் Indian தமிழகத் திரைப்படத்துறை காதல் திரைப்படம். எழுதி இயக்கியவர்கள் மருது ராஜா / ராஜா சுப்பையா. 2014 இல் வெளிவந்தவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) படத்தில் இடம்பெற்ற டீ கடை ராஜா என்ற பாடலைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.[1] எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் [2] இப்படத்தில் மருது ராஜா / ராஜா சுப்பையா., நேஹா காயத்திரி, யோகி பாபு, ஷர்மிளா தாபா, மதன் பாப் போன்றோர் நடித்திருந்தனர். 2016 ஏப்ரல் 8 அன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட்டனர்.

தயாரிப்பு

[தொகு]

தனுஷ் (நடிகர்), சமந்தா ருத் பிரபு மற்றும் ஏமி சாக்சன் ஆகியோர் நடித்திருந்த தங்க மகன் (2015 திரைப்படம்) என்ற திரைப்படத்திற்கு டீ கடை ராஜா என்ற பெயர் பரிசீலிக்கப்ட்டது.[3] பின்னர், 'டீ கடை ராஜா' என்ற பெயரை எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் சார்பில் மருது ராஜா / ராஜா சுப்பையா ஆகிய இருவரும் தங்களது படைப்பிற்கு தேர்ந்தெடுத்தனர்.[4]

கதை

[தொகு]

கதை வளர்ந்துவரும் ஒரு நகரத்தில் வாழும் சிறுவர்களை சுற்றியும் மற்றும் அவர்களது நகர்ப்புற பின்னணி பற்றியும், சிறுவர்களுக்கு நிகழும் காதல் விவகாரம் பற்றியும் பேசுகிறது.[4]

நடிகர்கள்

[தொகு]

வெளியீடு

[தொகு]

"பீப் போடு" பாடல் முன்னோட்டம் 31 மார்ச் 2016இல் வெளிவந்தது. படம் 8 ஏப்ரல் 2016இல் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்] வெளியிட்டது. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை யூடியூப் மற்றும் ராஜ் தொலைக்காட்சி பெற்றனர்

ஒலித்தொகுப்பு

[தொகு]

ஒன்பது பாடல்கள் அடங்கிய இதன் பாடல் தொகுப்பை தன்ராஜ் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். இதில் ஒருபாடல் இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு இசையமைக்கப்பட்டது. ஒரு பாடலை கானா பாலா பாடியுள்ளார்.

# பாடல்பாடியோர் நீளம்
1. "ஏ நண்பா கேளு"  தன்ராஜ் மாணிக்கம் 3:35
2. "அசத்துது உன் அழகு"  தன்ராஜ் மாணிக்கம் 4:06
3. "மெலிஞ்சு போன"  Rupesh 4:32
4. "தாவணியி தாஜ்மகால்"  மதிச்சயம் பாலா, கீர்த்தி ஐய்யர்  
5. "சந்தியிலே"  கானா பாலா 4:28
6. "உயிரே உயிரே"  தன்ராஜ் மாணிக்கம் 2:01
7. ""பீப்ப போடு (Trailer Theme)"  தன்ராஜ் மாணிக்கம் 0:56
8. ""டீ கடை ராஜா" (Title Theme)"  தன்ராஜ் மாணிக்கம் 0:48
9. "சக்சஸ் ஆப் லவ்" (வாத்தியங்கள் மட்டும்)"    1:11

விமர்சனம்

[தொகு]

பட வெளியீட்டுக்கு முன் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி ராமசாமி திரைப்படத்தை பார்த்து முதல் பாதியில் திரைக்கதை இறுக்கமாக இருப்பதாகவும் , இரண்டாம் பாதியில் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது பாராட்டினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீ_கடை_ராஜா&oldid=3660129" இலிருந்து மீள்விக்கப்பட்டது