டி. என். சேஷாசலம்
டி. என். சேஷாசலம் (1898 - 1937)[சான்று தேவை], மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்ட கலாநிலையம் என்னும் வியாழன்தோறும் வெளிவரும் இலக்கிய இதழை 1928 முதல் 1935 வரை நடத்தி வந்தவர்.[1] இதழின் மூன்று முக்கிய நோக்கங்களாவன: நற்றமிழ் கற்றல், தமிழ்க் கவிஞர்களின் கவிதை நலம் கண்டுணர்தல், பிறமொழி மாண்பறிதல் ஆகும்.
இவர் கம்பராமாயணம், ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர் நாடகங்களை நன்கு கற்றுணர்ந்தவர். அவற்றில் ஜூலியஸ் ஸீஸர்,[2] டெம்படஸ் என்பதை காற்றுமழை, ஒத்தெல்லலோ (முழுமை பெறவில்லை) ஆகிய நாடகங்களைத் தனக்கே உரிய திறமையில் பல வரலாற்றுச் சான்றுகளுடன் மொழி பெயர்த்துள்ளார். இவர் பிஸாரோ நாடகத்தை நாடக வடிவில் எழுதி, இயக்கியதுடன் முக்கிய தலைமைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதனால்தான் இவர் மகன் பரணிதரனும் மெரினா என்ற பெயரில் நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]சென்னை புரசைவாக்கம் பகுதியில் வாழ்ந்தார். இவர் ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் தாய் மாமன் ஆவார். ஆனந்த விகடன் இதழில் ஆன்மிக பயணக்கட்டுரைகள் எழுதி புகழ் பெற்ற பரணிதரன் என்பவருக்குத் தந்தையாவார்.[3] இவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் தன் தாய்மொழியின் மீது நீங்காப் பற்றுக் கொண்டவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழியல் ஆய்வு வரலாறு ( 1928 - 1935 )". Retrieved 19 சூலை 2015.
- ↑ "ஜுலியஸ் ஸீஸர் / Juliyas Sīsar". Retrieved 19 சூலை 2015.
- ↑ "Pilgrim's progress". The Hindu. 14 அக்டோபர் 2010. http://www.thehindu.com/features/friday-review/theatre/pilgrims-progress/article830445.ece. பார்த்த நாள்: 19 சூலை 2015.