உள்ளடக்கத்துக்குச் செல்

டுவிட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டிவிட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டுவிட்டர்
நிறுவன_வகைபொது
பங்கு வணிகத்தில்நியாபசTWTR
நிறுவப்பட்ட நாள்மார்ச்சு 21, 2006; 18 ஆண்டுகள் முன்னர் (2006-03-21)[1]
தலைமையிடம்சான் பிரான்சிற்கோ, கலிபோர்நியா, ஐக்கிய அமெரிக்கா[2]
சேவை பகுதிஉலகம் முழுவதும்
நிறுவனர்(கள்)யாக்கு உடோர்சி
நோவா கிளாசு
பிசு தோன்
இவான் வில்லியமிசு
தொழில்இணையம்
வருமானம் 2.21 பில்லியன் அமெரிக்க உடொலர் (2015)
நிகர வருமானம்Increase -521 மில்லியன் ஐக்கிய அமெரிக்க உடொலர் (2015)
உரிமையாளர்எல்லான் மஸ்க்
ஊழியர்கள்3,800 (மார்ச்சு 2016)[2]
துணை நிறுவனங்கள்வைன்
பெரிசுக்கோப்பு
வலைத்தளம்twitter.com
நிரல் மொழியாவா[3][4], உரூபி[3], காலா[3], யாவாக்கிறிட்டு[3]
அலெக்சா தரவரிசை எண்Increase 8 (சூலை 2016)[5]
வலைத்தள வகைசமூக வலையமைப்புச் சேவை
பதிகைபதிவிடுவதற்கும் பின் தொடர்வதற்கும் பின் தொடரப்படுவதற்கும் தேவை
பதிந்த பயனர்கள்550 மில்லியன்மாதத் தொடர் பங்களிப்பாளர்கள் (செப் 2023)[6]
மொழிகள்பன்மொழி
துவக்கம்சூலை 15, 2006 (2006-07-15)[7]
தற்போதைய நிலைஇயங்குநிலை

எக்ஸ் (X) (பரவலாக அதன் முந்தைய பெயரான டுவிட்டர் என்று அறியப்படுகிறது) இது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு சமூக ஊடக வலைத்தளமாகும். 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு, இது உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல்களில் ஒன்றாகவும் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட வலைத்தளங்களில் ஐந்தாமிடத்திலும் உள்ளது.[8][9] பயனர்கள் குறுஞ்செய்திகள், ஒளிப்படம், நிகழ்படங்களை குறுகிய இடுகைகள் மூலம் தகவல்களைப் பகிரலாம் ("ட்வீட்" என்று அழைக்கப்படுகிறது).[10] நேரடிச் செய்தி அனுப்புதல், நிகழ்படம் மற்றும் ஒலி அழைப்பு, நூற்குறி, பட்டியல்கள் ஆகிய வசதிகள் இதில் உள்ளன.

டுவிட்டர் இன்க் எனும் அமெரிக்க நிறுவனமான எக்ஸ் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இந்தச் சேவை மார்ச் 2006 இல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டு, அதே ஆண்டு சூலை மாதம் தொடங்கப்பட்டது. துவக்கத்தில் விரைவான வளர்ச்சியினைக் கண்டது, மேலும் 2012 ஆம் ஆண்டில், 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஒரு நாளைக்கு 340 மில்லியன் ட்வீட்களை பதிவிட்டனர்.[11] கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவினைத் தளமாகக் கொண்ட டுவிட்டர், உலகம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டிருந்தது.[12] இதன் முதன்மைப் பண்புக்கூறு, பதிவுகள் சுருக்கமாக இருக்க வேண்டும் (முதலில் 140 எழுத்துக்கள், பின்னர் 2017 இல் 280 ஆக விரிவுபடுத்தப்பட்டது) என்பதாகும். 2020 ஆம் ஆண்டில், சுமார் 48 மில்லியன் கணக்குகள் (அனைத்து கணக்குகளிலும் சுமார் 15%) போலிக் கணக்குகள் என்று மதிப்பிடப்பட்டது.[13]

வரலாறு

குறுஞ்செய்தி அடிப்படையிலான சமூக வலைப்பின்னலைக் கற்பனை செய்யும் ஜாக் டோர்சி எழுதிய ஒரு வரைபடம், சி. 20

"டுவிட்டர், நிலை பகிர்வுச் சேவையான TXTMob உடன் தொடங்கியது" என்று TNW இல் ஒரு கட்டுரை விளக்குகிறது.[14] ரக்கஸ் சொசைட்டி, பிரயோகவுடலமைப்பியல் பின்னர் எம்ஐடி மீடியா லேப் ஆகியவற்றுடன் தொடர்புடைய மாணவரும் ஆர்வலருமான டாட் ஹிர்ஷ், 2004 குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் ஆர்வலர்கள் உதவுவதற்காகவும் அடிப்படையான செயலி ஒன்றினை உருவாக்கினார்.[15][14][16][17] அன்றைய பிற குறுஞ்செய்தி பகிர்வு பயன்பாடுகளால் ஈர்க்கப்பட்ட, வலையொலி நிறுவனமான Odeo இன் உறுப்பினர்கள் ஒரு புதிய பயன்பாட்டை உருவாக்குவது குறித்து முடிவு செய்ய "குழுச் சிந்திப்பு அமர்வை" நடத்தினர். அப்போது இளங்கலை மாணவரான ஜாக் டோர்சி, ஒரு சிறிய குழுவுடன் தொடர்பு கொள்ள ஒரு தனிநபர் குறுஞ்செய்திச் சேவையைப் பயன்படுத்துவதற்கான யோசனையை குழுவிற்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறுகிறார்.[18] இந்தச் சேவைக்கான அசல் திட்டக் குறிப்பெயர் twttr ஆகும். பிளிக்கரின் தாக்கத்தாலும் அமெரிக்கக் குறுஞ்செய்திச்சேவைக் குறுங்குறியீடுகள் ஐந்து வரியுருக்களில் அமைந்திருந்ததாலும் இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. பின்னர், இப்பெயரானது நோவா கிளாசால் பரிந்துரைக்கப்பட்டது என வில்லியமிசு அறிவித்தார்.[19] டுவிட்டரின் உருவாக்குநர்கள் 10958 என்பதையே குறுங்குறியீடாகப் பயன்படுத்த எண்ணியிருந்தனர். ஆயினும், இலகுவில் நினைவில் வைத்துக்கொள்வதற்காகவும் பயன்பாட்டுக்கு இலகுவாக இருப்பதற்காகவும் குறுங்குறியீடாக 40404 என்பதை மாற்றியமைத்தனர்.

டோர்சி மற்றும் ஒப்பந்ததாரர் புளோரியன் வெபர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட முதல் டுவிட்டர் முன்மாதிரி, ஓடியோ ஊழியர்களுக்கான உள்ளகச் சேவையாகப் பயன்படுத்தப்பட்டது.[20] பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சூலை 15, 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[21] அக்டோபர் 2006 இல், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ், டோர்சி மற்றும் ஓடியோவின் பிற உறுப்பினர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து ஓடியோவை அதன் சொத்துக்களுடன் (Odeo.com மற்றும் Twitter.com உட்பட) வாங்கினர்.[22] டுவிட்டர் ஏப்ரல் 2007 இல் அதன் சொந்த நிறுவனமாக உருவானது.[23]

மறுபெயரீடு

X இன் ஆரம்ப சின்னம்

டுவிட்டரின் உரிமையில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, மஸ்க் இந்தத் தளத்தை "எக்ஸ்/டுவிட்டர்"[24][25][26] மற்றும் "எக்ஸ் (டுவிட்டர்)"[27] என்று குறிப்பிடத் தொடங்கினார். மேலும், சமூகக் குறிப்புகளை பேர்ட்வாட்ச் [28] எனவும் மேற்கோள்கள் டுவீட்டுகளை மேற்கோள்கள் எனவும் மாற்றினார்.[29] சூலை 23, 2023 இல், மஸ்க் மறுபெயரிடலை உறுதிப்படுத்தினார், இது x.com திரளம் (முன்பு பேபாலுடன் தொடர்புடையது) இலச்சினையானது அடுத்த நாள் பறவையிலிருந்து எக்ஸ் ஆக மாற்றப்பட்டது. மேலும், தளத்தின் அதிகாரப்பூர்வ முக்கிய மற்றும் தொடர்புடைய கணக்குகளும் எக்ஸ் என்ற எழுத்தைப் பயன்படுத்தத் தொடங்கின.[30][31][32] ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் பெயர் இலச்சினை சூலை 27 ஆம் நாள் கூகிள் பிளேயில் எக்ஸ் என மாற்றப்பட்டது, ஆப்பிள் அதன் குறைந்தபட்ச எழுத்து நீளம் 2 க்கு விதிவிலக்கு அளித்த பின்னர் சூலை 31 இல் ஆப் ஸ்டோரில் அதே மாற்றம் நேரலையில் வந்தது.[33][34][35] அந்த நேரத்தில், டுவிட்டரின் மேலும் சில கூறுகள் வலைப் பதிப்பில் இருந்து அகற்றப்பட்டன, இதில் ட்வீட்கள் "பதிவுகள்" என்று மறுபெயரிடப்பட்டன.[36]

மேற்கோள்கள்

  1. Jack (21 மார்ச் 2006). "Jack". Twitter. Retrieved 31 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 "What's Happening". Twitter. 31 மார்ச் 2016. Retrieved 31 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 Charles Humble (4 சூலை 2011). "Twitter Shifting More Code to JVM, Citing Performance and Encapsulation As Primary Drivers". InfoQ. Retrieved 31 சூலை 2016.
  4. Krishna Gade (6 ஏப்ரல் 2011). "Twitter Search is Now 3x Faster". The Official Twitter Blog. Retrieved 31 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "twitter.com". Alexa. 29 சூலை 2016. Archived from the original on 2020-04-22. Retrieved 31 சூலை 2016.
  6. Kolodny, Lora (September 18, 2023). "Elon Musk says Twitter, now X, is moving to monthly subscription fees and has 550 million users". CNBC (in ஆங்கிலம்). Archived from the original on September 18, 2023. Retrieved September 19, 2023.
  7. Michael Arrington (15 சூலை 2006). "Odeo Releases Twttr". TechCrunch. Retrieved 31 சூலை 2016.
  8. "Top Websites Ranking". Similarweb. Archived from the original on February 10, 2022. Retrieved December 1, 2021.
  9. "twitter.com". Similarweb.com. Archived from the original on November 10, 2023. Retrieved November 8, 2023.
  10. Conger, Kate (August 3, 2023). "So What Do We Call Twitter Now Anyway?" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து October 12, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231012220459/https://www.nytimes.com/2023/08/03/technology/twitter-x-tweets-elon-musk.html. 
  11. "Twitter turns six". Twitter. March 21, 2012. Archived from the original on February 6, 2017. Retrieved August 29, 2014.
  12. "Company: "About Twitter"". Archived from the original on April 3, 2016. Retrieved April 24, 2014.
  13. Rodrıguez-Ruiz, Jorge; Mata-Sanchez, Javier Israel; Monroy, Raul; Loyola-Gonzalez, Octavio; Ĺopez-Cuevas, Armando (April 2020). "A one-class classification approach for bot detection on Twitter". Computers & Security 91: 101715. doi:10.1016/j.cose.2020.101715. https://www.sciencedirect.com/science/article/pii/S0167404820300031. பார்த்த நாள்: June 17, 2022. 
  14. 14.0 14.1 Protalinski, Emil (October 16, 2013). "The Idea for Twitter Came Directly from Status-Sharing Service TXTmob". TNW (in ஆங்கிலம்). Archived from the original on December 3, 2023. Retrieved November 29, 2023.
  15. di Justo, Patrick (September 9, 2004). "Protests Powered by Cellphone". The New York Times இம் மூலத்தில் இருந்து October 21, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021011511/http://www.nytimes.com/2004/09/09/technology/circuits/09mobb.html. 
  16. Freitas, Nathan (April 23, 2010). "Nathan Freitas Responds To Douglas Rushkoff | Digital Nation | FRONTLINE | PBS". www.pbs.org. Archived from the original on April 23, 2010. Retrieved November 29, 2023.
  17. Hirsch, Tad (October 16, 2013). "TXTmob and Twitter: A Reply to Nick Bilton". Public Practice Studio. Archived from the original on October 16, 2013.
  18. (registration required) Miller, Claire Cain (October 30, 2010). "Why Twitter's C.E.O. Demoted Himself". The New York Times இம் மூலத்தில் இருந்து November 1, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101101065448/http://www.nytimes.com/2010/10/31/technology/31ev.html. 
  19. Ev Williams (13 ஏப்ரல் 2011). "Ev Williams". Twitter. Retrieved 31 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  20. Carlson, Nicholas (April 13, 2011). "How Twitter Was Founded". Business Insider. Archived from the original on July 14, 2018. Retrieved September 4, 2013.
  21. Arrington, Michael (July 15, 2006). "Odeo Releases Twttr". TechCrunch. AOL. Archived from the original on May 1, 2019. Retrieved September 18, 2010.
  22. Malik, Om (October 25, 2006). "Odeo RIP, Hello Obvious Corp". GigaOM இம் மூலத்தில் இருந்து May 2, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190502183300/https://gigaom.com/2006/10/25/odeo-rip-hello-obvious-corp/. 
  23. Lennon, Andrew. "A Conversation with Twitter Co-Founder Jack Dorsey". The Daily Anchor. Archived from the original on July 27, 2009. Retrieved February 12, 2009.
  24. elonmusk. "Great work by the X/Twitter team" (Tweet). Retrieved July 30, 2023. Missing or empty |date= (help)
  25. elonmusk. "Using your own inline ads is fine for now, until X/Twitter can offer this" (Tweet). Retrieved July 30, 2023. Missing or empty |date= (help)
  26. elonmusk. "Subscribe to X/Twitter Blue" (Tweet). Retrieved July 30, 2023. Missing or empty |date= (help)
  27. "xAI: Understand the Universe". x.ai (in ஆங்கிலம்). Archived from the original on July 30, 2023. Retrieved July 30, 2023.
  28. Biron, Bethany. "Elon Musk said Twitter's Birdwatch feature will be renamed 'Community Notes' and is aimed at 'improving information accuracy' amid growing content-moderation concerns". Business Insider. Archived from the original on November 15, 2022. Retrieved November 15, 2022.
  29. PopCrave. "Twitter's latest UI change has renamed 'Quote Tweets' to 'Quotes,' and moved tweet views to a different row. The device a user is tweeting from is also visible again" (Tweet). Retrieved July 30, 2023. Missing or empty |date= (help)
  30. Davis, Wes (July 23, 2023). "Twitter's rebrand to X may actually be happening soon". The Verge (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on October 13, 2023. Retrieved July 23, 2023.
  31. "Twitter changes logo to 'X', replacing blue bird symbol". www.aljazeera.com (in ஆங்கிலம்). Archived from the original on July 24, 2023. Retrieved July 24, 2023.
  32. . 
  33. "X (Previously Twitter) 10.0.0-beta.0 (Arm64-v8a) (480-640dpi) (Android 6.0+) APK Download by X Corp". Archived from the original on July 30, 2023. Retrieved August 9, 2023.
  34. "X (Previously Twitter) 10.0.0-release.0 (Nodpi) (Android 6.0+) APK Download by X Corp". Archived from the original on July 30, 2023. Retrieved August 9, 2023.
  35. "Twitter gets special permission to be 'X' in the iOS App Store". July 31, 2023. Archived from the original on July 31, 2023. Retrieved July 31, 2023.
  36. "As Musk renames Twitter to X; 'Tweets' now 'posts', 'retweets' become 'reposts': Report". Hindustan Times (in ஆங்கிலம்). July 29, 2023. Archived from the original on August 13, 2023. Retrieved August 14, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவிட்டர்&oldid=4203287" இலிருந்து மீள்விக்கப்பட்டது