உள்ளடக்கத்துக்குச் செல்

டிரைபீனைல்பாசுபீன் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரைபீனைல்பாசுபீன் செலீனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிரைபீனைல்பாசுபேன் செலீனைடு
இனங்காட்டிகள்
3878-44-2
ChemSpider 263833
EC number 223-406-1
InChI
  • InChI=1S/C18H15PSe/c20-19(16-10-4-1-5-11-16,17-12-6-2-7-13-17)18-14-8-3-9-15-18/h1-15H
    Key: ZFVJLNKVUKIPPI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 298720
  • c1ccc(cc1)P(=[Se])(c2ccccc2)c3ccccc3
பண்புகள்
C18H15PSe
வாய்ப்பாட்டு எடை 341.25
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 186.5 to 187.5
கரையாது
கரைதிறன் டைகுளோரோமீத்தேன், பிரிடின் மற்றும் டெட்ரா ஐதரோபியூரான் போன்றவற்றில் நன்றாகக் கரையும். அசிட்டோநைட்ரைல், எத்தனால் மற்றும் மெத்தனாலை சூடாக்கினால் மிதமாகக் கரையும். ஈதரில் கரையாது. [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிரைபீனைல்பாசுபீன் செலீனைடு (Triphenylphosphine selenide ) என்பது (C6H5)3PSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமபாசுபரசு சேர்மமான இதை முப்பீனைல்பாசுபீன் செலீனைடு என்றும் அழைக்கலாம். வெண்மை நிறத்தில் திண்மமாக காணப்படும் டிரைபீனைல்பாசுபீன் செலீனைடு பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. பிற செலீனியம் சேர்மங்களைத் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. டிரைபீனைல்பாசுபீனுடன் பொட்டாசியம் செலீனோசயனேட்டை வினைபுரியச் செய்தால் டிரைபீனைல்பாசுபீன் செலீனைடை தயாரிக்க இயலும்[2]. ஒற்றைசரிவச்சு[3], முச்சரிவச்சு[4] கட்டமைப்புகளுடன் முறையே P21/c மற்றும் P1 இடக்குழுக்களுடன் இரண்டிலும் பாசுபரசில் நான்முகி வடிவத்துடன் ஒற்றைப் படிகங்கள் தனித்துப் பிரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mayhew, D. L., Clive, D. L. J., Stawinski, J. and Bollmark, M. 2004. Triphenylphosphine Selenide. e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis எஆசு:10.1002/047084289X.rt378.pub2
  2. Philip Nicpon, Devon W. Meek "Triphenylphosphine Selenide" Inorganic Syntheses, 1967, Volume 10, 157–159. எஆசு:10.1002/9780470132418.ch23
  3. Codding, P. W.; Kerr, K. A. (15 May 1979). "Triphenylphosphine selenide". Acta Crystallographica Section B 35 (5): 1261–1263. doi:10.1107/S0567740879006129. 
  4. Jones, P. G.; Kienitz, C.; Thöne, C. (January 1994). "Crystal structure of triphenylphosphine selenide (triclinic), C18H15PSe". Zeitschrift für Kristallographie 209 (1): 80–81. doi:10.1524/zkri.1994.209.1.80.