டிசுக்கோக்சு
வலைத்தள வகை | இசை |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் (US), ஆங்கிலம் (UK), இடாய்ச்சு மொழி, எசுப்பானியம், இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, பிரெஞ்சு மொழி |
உரிமையாளர் | சிங்க் மீடியா, இன்க். |
உருவாக்கியவர் | கெவின் லெவண்டோவ்ஸ்கி |
துறை | இணையம் |
சேவை | தரவுத்தளம், வலைவழிக் கொள்முதல் |
வருவாய் | விளம்பரங்கள் (உள்நுழைகை-விளம்பரங்களை நீக்குகிறது), சந்தையிட விற்பனைக் கட்டணம் |
வணிக நோக்கம் | பகுதியும் |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
பயனர்கள் | 346,000[1] |
வெளியீடு | நவம்பர் 2000 |
அலெக்சா நிலை | ![]() |
தற்போதைய நிலை | இணையம் |
உரலி | discogs |
டிசுக்கோக்சு (Discogs, டிஸ்கோகிராபி என்பதன் சுருக்கம்) ஒலிப்பதிவுகளின் தகவல்களைக் குறித்த வலைத்தளமும் கூட்டவழி மூலம் பெறும் தரவுத்தளமும் ஆகும். இது வணிகமயமாக்கப்பட்டவை, மேலுயர்த்து வெளியீடுகள், வெளியிடப்படாத பாடல்கள், நிறுவனங்கள் வெளியிடாதவை என அனைத்து வகைகளையும் உள்ளிட்ட ஒலிப்பதிவுகளின் தகவல்களை ஒன்றுசேர்க்கிறது. டிசுக்கோக்சு வழங்கிகள், தற்போது discogs.com என்ற ஆள்களப் பெயரில் இயங்குகின்றது; இதன் உரிமையாளர் சிங்க் மீடியா நிறுவனமாகும். இவை ஐக்கிய அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரில் அமைந்துள்ளன. இந்த வலைத்தளம் அனைத்து வகை, அனைத்து வடிவ வெளியீடுகளையும் பட்டியல்படுத்துகிறது என்றாலும் மின்னணு இசை வெளியீடுகளின் தரவுத்தளமாக பெரிதும் அறியப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் வினைல் தட்டுக்களில் பதியப்பட்ட இசை குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. டிசுக்கோக்சு தற்போது 9 மில்லியனுக்கும் கூடுதலான வெளியீடுகள், 5 மில்லியனுக்கும் கூடுதலான கலைஞர்கள், ஒரு மில்லியனுக்கும் கூடிய இசைநிறுவனங்கள் குறித தகவல்களை கிட்டத்தட்ட 400,000 பயனர்களின் கணக்குகள் மூலம் சேகரித்துள்ளது. [3][4]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Discogs contributors". Discogs.com. December 2017. Retrieved 15 December 2017.
- ↑ "Discogs.com Site Info". அலெக்சா இணையம். Archived from the original on 2019-10-29. Retrieved 2017-12-10.
- ↑ "Explore on Discogs". Discogs. 25 October 2017. Retrieved 25 October 2017.
- ↑ "Discogs Contributors". Discogs.com. 15 April 2018. Retrieved 15 April 2018.
contributor#: 407,945
வெளி இணைப்புகள்
[தொகு]- அலுவல்முறை இணையதளம்
- Disbugs – Discogs issues/bugs and features requests.
- Discogs wiki பரணிடப்பட்டது 2010-07-11 at the வந்தவழி இயந்திரம் – Discogs wiki site.