டார்வின் வளைவு
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்கு டார்வின் தீவு, கலாபகசுத் தீவுகள், எக்குவடோர் |
ஆள்கூறுகள் | 1°40′19.2″N 91°59′26.6″W / 1.672000°N 91.990722°W |
தீவுக்கூட்டம் | கலாபகசுத் தீவுகள் |
நிர்வாகம் | |
டார்வின் வளைவு (Darwin's Arch, எசுப்பானியம்: Arco de Darwin) என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள கலாபகசுத் தீவுகளில் ஒன்றான டார்வின் தீவின் தென்கிழக்குப்பகுதியில் காணப்படும் ஒரு இயற்கையான பாறை வளைவு ஆகும். இந்த வளைவானது ”தி தியேட்டர்” என்ற புனைப்பெயரைக் கொண்ட பகுதியளவு மூழ்கிய பீடபூமிப் பகுதியின் மேல் ஒழுங்கற்ற பாறையால் ஆன ஒரு வளைவு ஆகும்.[1][2] இந்த வளைவானது 2021 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாள் இயற்கையான அரிமானம் மற்றும் ஈர்ப்பு விசையின் காரணமாக நிலைகுலைந்துள்ளது. இந்த நிலைகுலைவிற்குப் பிறகு தனித்து நிற்கும் இரண்டு பாறைத்தூண்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன.[3][4]
டார்வின் வளைவு, அருகிலுள்ள டார்வின் தீவுடன் சேர்ந்து, ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இயற்கை தேர்வின் மூலம் அவரது படிவளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்க இதன் சுற்றுப்புறப் பகுதிகள் உதவின. டார்வினுக்கும், அவரது படைப்புகளுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக, சில உள்ளூர்வாசிகளும், தொழில் வல்லுநர்களும் மீதமுள்ள கல் "கோபுரங்களுக்கு" பரிணாமத் தூண்கள்[5](எசுப்பானியம்: Los Pilares de la Evolución) என்ற பெயரைச் சூட்டினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Darwin". Galapagos Conservancy. Retrieved 19 June 2015.
- ↑ Steve Rosenberg; Ellen I. Sarbone (2004). The Diving Guide Galapagos Islands. Cruising Guide Publications, Inc. ISBN 978-0-944428-70-2.
- ↑ Strauss, Rebecca (17 May 2021). "Breaking News: Darwin's Arch Collapses". Scuba Diver Life. Retrieved 18 May 2021.
- ↑ "Galapagos Islands: Erosion fells Darwin's Arch". பிபிசி. 18 May 2021. Retrieved 18 May 2021.
- ↑ Farzan, Antonia Noori (19 May 2021). "Darwin's Arch, famed Galápagos rock formation, collapses from erosion". தி வாசிங்டன் போஸ்ட். Retrieved 20 May 2021.