டான் மேக்ஸ் (படத் தொகுப்பாளர்)
டான் மேக்ஸ் | |
---|---|
பிறப்பு | 16 நவம்பர் 1980 இந்திய ஒன்றியம், கேரளம், கோட்டயம், அனிச்சகாடு |
பணி | திரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர் |
டான் மேக்ஸ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், படத் தொகுப்பாளர் ஆவார், இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார். மலையாளத் திரைப்படத் துறையில் முன்னணி சமகால திரைப்பட தொகுப்பாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார், மேலும் பிராந்திய படங்களில் பல புதிய படத் தொகுப்பு நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]டான் மேக்ஸ் 1980 நவம்பர் 16 ஆம் தேதி கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் முண்டகாயத்தில் எஸ்.பி.டி.யின் முன்னாள் வங்கி மேலாளரான கே. எல். வர்கீஸ் மற்றும் அனிக்காட்டில் உள்ள செயின்ட் தாமஸ் உயர்நிலைப் பள்ளியில் மலையாள ஆசிரியராக இருந்த டி. வி. சினம்மா ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் . மலையாள அதிரடி நட்சத்திரம் ஜெயன் இறந்த அதே நாளில் இவர் பிறந்தார். தனது முதல் ஏழு ஆண்டுகளை இடுகி மாவட்டத்தில் கழித்த பின்னர், இவரது குடும்பம் அனிக்காட்டின் பல்லிகாதோடிற்கு இடம் பெயர்ந்தது. அனிகாட்டின் செயின்ட் தாமஸில் படித்தார். பின்னர் இவர் தனது முன் பட்டப்படிப்பை கஞ்சிராப்பிலியில் உள்ள செயின்ட் டொமினிக் கல்லூரியில் பயின்றார் . பின்னர் பெங்களூரில் உள்ள அரினா அனிமேஷனில் மல்டிமீடியா மற்றும் அனிமேஷனில் பட்டயப் படிப்பை படித்தார் மேலும் கலவை மற்றும் அனிமேஷனில் நிபுணத்துவம் பெற்றார்.
தொழில்
[தொகு]விளம்பரத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் படத்தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய டான் ஆரம்பத்தில் அனிமேஷனில் கவனம் செலுத்தினார், இவர் கேதன் மேத்தாவின் நிறுவனத்தில் சேர்ந்தார், பின்னர் துபாயில் உள்ள பிரைம் டைம் அலைவரிசையில் பணியாற்றினார், மலையாள அலைவரிசையான கைராளியின் படத் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.
டான் சாஜி கைலாசின் தி டைகர் (2005) படத்தின் மூலம் மூத்த படத்தொகுப்பாளராக அறிமுகமாகும் முன் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களின் முன்னோட்டங்களின் படத்தொகுப்பை செய்தார். டான் படப்பிடிப்புத் தளத்தில் படத் தொகுப்பு செய்யும் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டார். அவ்வாறு செய்த முதல் மலையாள படத்தொகுப்பாளர் இவராவார். அதே நேரத்தில் மலையாளத்தின் முதல் எண்ணியல் திரைப்படமான வி. கே. பிரகாசு இயக்கிய மூனமத்தோரல் (2006) படத்திற்கும் படத்தொகுப்பு செய்தார்.[2]
இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் பணியாற்றினார். ஆதவன் (2009), சுறா (2010), பொன்னர் சங்கர் (2011) போன்ற பெரும் செலவில் தயாரான படங்களில் பணியாற்றினார். ஜில்லா (2014) படத்தில் பணிபுரிந்ததற்காக டான் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார், இந்தியா கிளிட்ஸ்.காமின் ஒரு விமர்சகர் "டான் மேக்ஸ் நிச்சயமாக ஒரு திறமையான படத்தொகுப்பாளர்" மற்றும் "மிகவும் சிறப்பான சகலவை செய்பவர்" என்று குறிப்பிட்டு, காட்சிகளை இணைக்க அவர் பயன்படுத்திய முறைகள் மூலம் தெளிவாகக் அது காட்டப்பட்டுள்ளது " என்றார்.[3] 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நடிகர் அனூப் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க [4] தனது முதல் படத்தை இயக்கத் தொடங்கினார், மேலும் தனது முதல் திரைப்படமான 10 கல்பனகள் படத்தை 25 நவம்பர் 2016 இல் வெளியிட்டார்.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | தி டைகர் | மலையாளம் | |
2006 | பாபா கல்யாணி | மலையாளம் | |
2007 | டைம் | மலையாளம் | |
2007 | சோட்டா மும்பை | மலையாளம் | |
2007 | அலி பாய் | மலையாளம் | |
2007 | மூனாமதோரல் | மலையாளம் | |
2007 | ஹலோ | மலையாளம் | |
2007 | பரதேசி | மலையாளம் | |
2008 | ரௌத்திரம் | மலையாளம் | |
2008 | அண்ணன் தம்பி | மலையாளம் | |
2008 | குருவி | தமிழ் | |
2008 | தலப்பாவு | மலையாளம் | |
2008 | எல்லாம் அவன் செயல் | தமிழ் | |
2008 | சிலம்பாட்டம் | தமிழ் | |
2009 | பிளாக் டாலியா | மலையாளம் | |
2009 | ஆதவன் | தமிழ் | |
2010 | துரானா 2010 | மலையாளம் | |
2010 | ஜக்குபாய் | தமிழ் | |
2010 | சுறா | தமிழ் | |
2010 | இனிது இனிது | தமிழ் | |
2010 | 3 சார் சா பீஸ் | மலையாளம் | |
2010 | கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் | மலையாளம் | |
2010 | பெஸ்ட் ஆக்டர் | மலையாளம் | |
2010 | காந்தகார் | மலையாளம் | |
2011 | சின்ன டவுன் | மலையாளம் | |
2011 | சங்கரன்கோவில் | தமிழ் | |
2011 | மனுஷ்யம்ருகம் | மலையாளம் | |
2011 | பொன்னர் சங்கர் | தமிழ் | |
2011 | சப்பா குரிஷு | மலையாளம் | |
2011 | உப்புக்கண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன் | மலையாளம் | |
2011 | புலிவேசம் | தமிழ் | |
2011 | மம்பட்டியான் | தமிழ் | |
2012 | சிம்மாசனம் | மலையாளம் | |
2012 | சாருலதா | தமிழ்/கன்னடம் | |
2012 | மதரசி | மலையாளம் | |
2012 | ர்மயோதா | மலையாளம் | |
2013 | என்டே | மலையாளம் | |
2013 | என்ரி | மலையாளம் | |
2013 | ஏபிசிடி: அமெரிக்கன்-பார்ன் கன்பியூஸ் தேசி | மலையாளம் | |
2013 | 10:30 ஏஎம் லோக்கல் கால் | மலையாளம் | |
2013 | பங்கிலீஸ் | மலையாளம் | |
2014 | ஜில்லா | தமிழ் | |
2014 | நா பங்காரு தள்ளி | தெலுங்கு/மலையாளம் | |
2014 | 100 டிகிரி செல்சியஸ் | மலையாளம் | |
2016 | மான்சூன் மங்கூஸ் | மலையாளம் | |
2016 | சாகசம் | தமிழ் | |
2016 | 10 கல்பனைகள் | மலையாளம் | இயக்குநராக அறிமுகம் |
குறிப்புகள்
[தொகு]
- ↑ http://www.thehindu.com/features/magazine/goodbye-to-the-superstar-era/article4605837.ece
- ↑ "A heartrending film - Don Max". Supergoodmovies. Archived from the original on 5 February 2016. Retrieved 30 January 2016.
- ↑ http://www.indiaglitz.com/jilla-user-review-tamil-news-102206.html
- ↑ http://www.thehindu.com/features/friday-review/interview-with-anoop-menon/article6636307.ece