உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர் ஆ. ப. ஜை. அப்துல் கலாம் மகளிர் தொழில்நுட்பக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் ஆ. ப. ஜை. அப்துல் கலாம் மகளிர் தொழில்நுட்பக் கழகம்
Dr. APJ Abdul Kalam Women's Institute of Technology
வகைதொழில்நுட்பம்
உருவாக்கம்2005
வேந்தர்சியாம் நாராயண் தாக்கூர்
மாணவர்கள்600
அமைவிடம்,
வளாகம்நகரம் 25 ஏக்கர்
சேர்ப்புஅகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு,
இணையதளம்www.witlnmu.ac.in

டாக்டர் ஆ. ப. ஜை. அப்துல் கலாம் மகளிர் தொழில்நுட்பக் கழகம் (Dr. APJ Abdul Kalam Women's Institute of Technology) முன்னர் மகளிர் தொழில்நுட்ப நிறுவனம் (Women's Institute of Technology) என்பது இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.[1] இந்நிறுவனம் 2005-இல் நிறுவப்பட்டது. இது அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம், புது தில்லி மற்றும் பீகார் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தர்பங்கா லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழக இணைவு பெற்றுள்ளது. இது தர்பங்கா நகரில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.

வரலாறு[தொகு]

இந்தக் கல்லூரி 2005ஆம் ஆண்டு அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது முதன்மையான லலித் நாராயணன் மிதலா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. இது 10 ஏக்கர் பரப்பளவில் தனி வளாகத்தில் முதலில் செயல்பட்டது.[2] பின்னர் 25 ஏக்கராக விரிவாக்கப்பட்டது. லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் வளாகம் 232 ஏக்கர் பரப்பளவில் தர்பங்காவின் ராஜ் குடும்பத்தால் நிலம் கையகப்படுத்தல் மூலம் கிடைத்தது. தர்பங்காவின் கடைசி மகாராஜா சர் காமேஸ்வர சிங்கின் நினைவாக இந்த வளாகத்திற்கு காமேசுவர் நகர் என்று பெயரிடப்பட்டது.

கல்வி[தொகு]

வசதிகள்[தொகு]

தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை, கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடு முது நிலை பாடம் பயிற்றுவிக்கும் துறைகளும் கல்லூரியில் உள்ளது.

கல்லூரியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றிற்கு ஏழு ஆய்வகங்கள் உள்ளன. இதில் இரண்டு கணினி ஆய்வகங்கள், ஒரு எண்ணிம மின்னணு ஆய்வகம், அடிப்படை மின்னணுவியல் மற்றும் அடிப்படை மின் ஆய்வகமும் செயல்படுகிறது.

பட்டங்கள்[தொகு]

கல்லூரி தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில்நுட்ப இளையர் பட்டப்படிப்பை வழங்குகிறது.

மாணவர்ச் சேர்க்கை[தொகு]

இந்நிறுவனத்தின் மாணவியர் சேர்க்கை 10 + 2 என்ற பாடத்திட்டத்தில் பயின்ற அனைத்து மாணவியருக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியம் / ஏற்றுக்கொண்ட 10 + 2 அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் இத்தேர்வுகளில் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Women's Institute Of Technology, Darbhanga: Details and Reviews". 20 August 2008.
  2. "About WOMENS INSTITUTE OF TECHNOLOGY WIT, DARBHANGA". Extreme Testing House, India.

வெளி இணைப்புகள்[தொகு]