டசர் பட்டு
டசர் பட்டு ( Tussar silk) ( துசார், துஷார், தசார்)[1] துசோர், தாஸர், துசூா், துஸா் என அறியப்படுகிறது மற்றும் சமஸ்கிருத்தில் கோசா பட்டு என்று அழைக்கப்படுகிறது. இது ஏதெனிசில் உள்ள அந்திப்பூச்சினைச் சோ்ந்த பல வகை பட்டுப் பூச்சிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. அசாமென்சிஸ், ஏ. மிளிட்டா, ஏ.பாபியா, ஏ. பொ்னி, ஏ.ரோலியா மற்றும் ஏ.யமாய். இந்த பட்டுப்புழுக்கள் டொ்மினியாஸ் இனங்கள் மற்றும் குங்கிலியம் ஆகிய மரங்கள் மற்றும் வடக்கில் ஆசியாவில் காணப்படும். நாவல் மற்றும் கருவாலி போன்ற பிற காட்டு மரங்களின் இலைகளை உண்ணுகின்றன..[2][3] டஸா் பட்டு அதன் வளமான அமைப்பு மற்றும் இயற்கை ஆழமான பொன் நிறத்திற்காக சீனா,[4] இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் மதிப்பிடு செய்யப்படுகின்றன.[5]
செயல்முறைகள்
[தொகு]பட்டுப்புழுக்களைக் கொல்லும் பொருட்டு பட்டுக்கூடுகள் சூரிய ஒளியில் உலரவைக்கப்படுகிறது. பட்டை கொதிக்கும் நீரில் போடுவதற்கு முன்னா் பட்டுப் புழுக்கள் வெளியேறுவற்கு அனுமதிக்கப்படுவதும் உண்டு. பட்டுக்கூடுகள் குண்டு, முட்டை வடிவத்தை அடைந்த பிறகு சேகரிக்கப்படுகின்றன. பின்னா் அவை பட்டு நூலை பிரித்தெடுத்க்க வேகவைக்கப்படுகின்றன. பட்டு உற்பத்தியில் கொதிக்கவைத்தல் மிக முக்கியமான செயலாகும் அது பட்டை மென்மையாக்கவும் பட்டை பிரித்தெடுக்கவும் எளிதாகுகிறது. வழக்கமாக பட்டுப்புழு வளா்ப்பில், புழுக்கூட்டின் உள்ளே பூச்சியுடன் வேகவைக்கப்படுகின்றன, இருப்பினும் பட்டுப்புழுக்கள் அவற்றின் கூட்டை விட்டு வெளியேறிய பிறகு பட்டுக்கூட்டை வேகவைத்து பெறப்படும் பட்டானது, அகிம்சை பட்டு என்றழைக்கப்படுகிறது. பட்டுப்புழுக்களைப் பொறுத்தே பட்டின் தரம் மாறுபாடுவதால், சீனாவில் வெவ்வேறு தாவரங்களில் வளா்க்கப்படும் பட்டுகளுக்கு வெவ்வேறு பெயா்கள் வழங்கபடுகின்றன. ( எடுத்துக்காட்டு : காட்டு முசுக்கொட்டை மீது லார்வாக்களிலிருந்து பட்டு ஜி என்றழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஓக் குவா்கஸ் டென்னாட்டன ஹி என்பதை உற்பத்தி செய்கிறது.
டஸா் பட்டு சாகுபடி மல்பெரி பட்டு சாகுபடியை விட மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது, ஆனால் அது குறைவான இழைகளை கொண்டிருப்பதால் குறைவாகவே நீடித்து காணப்படுகிறது. இது மங்கிய பொன்நிறம் கொண்டது. காடுகளிலிருந்து அதிகமான புழுக்கூடுகள் சேகரிக்கப்படுவதால், அது காடுகளில் பெருமளவு சேகரிக்கப்படுகிறது.
பராமரிப்பு
[தொகு]- டஸா் பட்டை ( அல்லது வேறு வகை பட்டு ) உலா் சலவை செய்தலே பாதுகாப்பானது.
- உலா் சலவை செய்யப்பட்ட டஸா் பட்டு நெகிழியால் மூடப்படக்கூடாது, பட்டில் காற்றோட்டம் வேண்டும்.
- டஸா் பட்டைக் கையால் சலவை செய்யப்பட வேண்டுமென்றால், குளிர்ந்த நீா் மற்றும் மென்மையான திரவ சோப்பை பயன்படுத்த வேண்டும்
இந்தியாவில் உற்பத்தி
[தொகு]இந்தியா டஸா் பட்டு தயாரிப்பதில் இரண்டாவது பெரிய தயாரிப்பாளராகவும், இந்திய டஸா் ( வெப்ப மண்டல டஸா் என்றும் அழைக்கப்படுகிறது). இது பழங்குடி மக்களால் அதிகம் தயாரிக்கப்படுகிறது. இது பெருமளவு பீகாரின் பாகல்பூரில் தயாரிக்கப்படுகிறது ( பாகல்பூா் பட்டு எனவும் அழைக்கப்படுகிறது) மேலும் இது மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம் போன்ற இடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் டாசர் படாடானது ஒரிசாவின் பட்டாதித்ராஸ் மற்றும் மேற்கு வங்கத்தின் காந்த விரிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சத்தீசுகர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியப் பகுதிகளிலும் டஸா் பட்டு தயாரிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் ஜார்கண்ட் மாநிலமானது டஸா் பட்டு உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக உருவானது.[6]
பாகல்பூா் பட்டு
[தொகு]பாகல்பூரில் உள்ள டஸா் பட்டு நெசவு தொழில், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, கிட்டதட்ட 25,000 கைத்தறிகளில் சுமார் 30,000 கைத்தறி நெசவாளா்கள் பணிபுரிகின்றனா். ஆண்டு வா்த்தகத்தின் மொத்த மதிப்பு ரூ. 100 கோடியாகும், இதில் அரைப்பகுதி ஏற்றுமதிகளில் இருந்து வருகின்றன.[7]
பயன்கள்
[தொகு]புடவைகளில் முக்கியமானதாக டஸா் பட்டு உள்ளது.[8][9] இது கைவினைப்பொருட்கள், துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஆகியவற்றுக்கான மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ரசாயான சாயங்களை அறிமுகப்பட்ட்ட பிறகு இந்த ஆடைகளுக்க்கான நிறங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தங்கள் படைப்புகளில் டஸா் பட்டுபைப் பயன்படுத்தும் நவீன ஆடை வடிவமைப்பாளா்கள் இருக்கிறார்கள். செய்நேர்த்தியுடன் செய்யப்பட்ட வடிவமைப்பாளா்கள் ஆடைகள் உலகலாவிய அளவில் அறியப்படுகின்றன மற்றும் ஐரோப்பிய பாரசீக வளைகுடா மற்றும் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சான்றுகள்
[தொகு]- ↑ Pandey, Dr.S.N. (1 September 2010). West Bengal General Knowledge Digest. Upkar Prakashan. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174822826. Retrieved 26 January 2016.
- ↑ "Tussar Silk". Copper wiki. Retrieved 2012-05-07.
- ↑ "Learning Centre". Brass Tacks, Madras. Retrieved 2012-05-07.
- ↑ Su Jing, Lun Luo, Landlord and labor in late imperial China: case studies from Shandong, Harvard University Asia Center, 1978 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-50866-1
- ↑ Eliza Thompson, Silk, Read Books, 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4086-9508-1
- ↑ "SILK EXHIBITION : देशके विभिन्न राज्यों की प्रसिद्ध सिल्क साड़ियों का किया गया है डिस्पले". Dainik Bhaskar. 27 August 2016. Retrieved 22 November 2016.
- ↑ Bhagalpur Silk Handloom Cluster". Asian Society for Entrepreneurship Education & Development. Retrieved 2012-05-07.
- ↑ Alluring designs in silk". Chennai, India: The Hindu, 2 August 2009. 2009-08-02. Retrieved 2012-05-07.
- ↑ It's worth to be at Weaves". Chennai, India: The Hindu, 11 October 2009. 2009-10-11. Retrieved 2012-05-07.