ஜோன் அட்டா மில்ஸ்
ஜோன் அட்டா-மில்ஸ் John Atta-Mills | |
---|---|
கானாவின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 7 ஜனவரி 2009 | |
Vice President | ஜோன் மகாமா |
Succeeding | ஜோன் குஃபோர் |
கானாவின் தணை குடியரசுத் தலைவர் | |
பதவியில் 7 ஜனவரி 1997 – 7 ஜனவரி 2001 | |
குடியரசுத் தலைவர் | ஜெரி ரோலிங்ஸ் |
முன்னையவர் | கோவ் ஆர்க்கா |
பின்னவர் | அலியூ மகாமா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூலை 1944 கோல்ட் கோஸ்ட், கானா |
அரசியல் கட்சி | தேசிய மக்களாட்சிக் காங்கிரஸ் |
துணைவர் | ஏர்னெஸ்டீனா |
தொழில் | சட்டத்துறைப் பேராசிரியர் |
இணையத்தளம் | [1] |
ஜோன் எவன்ஸ் அட்டா மில்ஸ் (John Evans Atta Mills, பிறப்பு: ஜூலை 21, 1944[1]) என்பவர் கானாவின் ஜனாதிபதி ஆவார். 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மிகக் குறைந்த் பெரும்பான்மை (50.23%) வாக்குகளினால் வெற்றி பெற்றார். இவர் 1997 முதல் 2001 ஆம் ஆண்டு வரை துணைத் தலைவராக இருந்தவர். பின்னர் 2000, 2004 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.
மில்ஸ் கானா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டு 1967 ஆம் ஆண்டில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். லண்டனில் பட்டப்பின் படிப்பை முடித்த பின்னர் கானா பல்கலைக்ககழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Profile of Atta Mills பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம், Ghanareview.com.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2016-12-19 at the வந்தவழி இயந்திரம்