ஜோதிர்மயீ தாஷ்
ஜோதிர்மயி தாஷ் (Jyotirmayee Dash) கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கத்தில் பேராசிரியராக உள்ளார், பொதுவாக கரிம வேதியியல் மற்றும் வேதியியல் உயிரியல் தொடர்பான தலைப்புகளில் ஆராய்ச்சி ஆர்வத்துடன் உள்ளார். [1]
ஜோதிர்மயி தாஷ், 2003 ஆம் ஆண்டு பேராசிரியர். எஃப்.ஏ. கானின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய தொழில்நுட்பக் கழகம், கான்பூரில் தொகுப்புமுறை கரிம வேதியியலில் முனைவர் பட்டமும், இந்தியாவின் கட்டாக்கில் உள்ள ராவன்ஷா பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றார். இவர் 2004-2006 இல் ஜெர்மனியின் ஃப்ரீ பல்கலைக்கழக பெர்லினில் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் ஆய்வு மாணவராகவும், 2006-2007 இல் பிரான்சின் ஈஎஸ்பிசிஐ பாரீசில் ஒரு முதுகலை ஆசிரியராகவும், 2006-2007-ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேரி-கியூரி ஆய்வுதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆய்வு மாணவராகவும் இருந்தார்.கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அவர், 2014 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கத்தில் சேர்ந்தார்.
கௌரவங்களும் விருதுகளும்
[தொகு]ஜோதிர்மயி தாஷுக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள் மற்றும் விருதுகள் பின்வருமாறு: [2]
- ஆசிரியர் ஆலோசனைக் குழு உறுப்பினர், ஏசிஎஸ் ஒமேகா, 2021
- சர்வதேச ஆலோசனை வாரியம், வேதியியல் ஆசிய இதழ், 2021
- வேதியியல் அறிவியலுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு, 2020 [3] [4] [5]
- ஃபெலோ ஆஃப் வேதியியலுக்கான வேந்திய சங்கம், எஃப் ஆர் எஸ் சி, 2020
- இந்திய வேதியியல் ஆராய்ச்சி சங்கம் வெண்கலப் பதக்கம், 2020
- டிபிடி(DBT)/ வெல்கம் டிரஸ்ட் இந்தியன் அலையன்ஸ் சீனியர் பெல்லோஷிப், 2020
- 2015-2016 ஆம் ஆண்டிற்கான ஸ்வர்ணஜெயந்தி பெல்லோஷிப் [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Faculty Profile". பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
- ↑ "JD Group: Organic Synthesis and Chemical Biology". Archived from the original on 28 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Awardee Details". CSIR Human Resource Development Group, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
- ↑ "Odia chemical scientist gets prestigious award". பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
- ↑ "Asia's Rising Scientists: Jyotirmayee Dash". பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
- ↑ "Woman scientist nominated for Swarnajayanti fellowship". https://www.thehindu.com/sci-tech/science/Woman-scientist-nominated-for-Swarnajayanti-fellowship/article16986826.ece.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜோதிர்மயீ தாஷ் publications indexed by Google Scholar
- ORCID