உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்
Joseph Jackson Lister
ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்
பிறப்பு11 சனவரி 1786 (1786-01-11) (அகவை 238)
இலண்டன்
இறப்பு(1869-10-24)24 அக்டோபர் 1869
அப்டன் , எஸ்செக்ஸ்
வாழிடம்இங்கிலாந்து
தேசியம்பிரித்தானிய
துறைமருத்துவம் மற்றும் இயற்பியலாளர்
அறியப்படுவதுமருத்துவ நுண்ணோக்கியின் வளர்ச்சி.

ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் (Joseph Jackson Lister, 11 சனவரி 1786 – 24 அக்டோபர் 1869) பிரித்தானிய இயற்பியலாளர்; நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கியவர்; நவீன அறுவை சிகிச்சையின் தந்தையாகிய ஜோசப் லிஸ்டரின் தந்தை ஆவார்.

இளமை

[தொகு]

ஜோசப் ஜாக்சன் லிஸ்டரின் தந்தையின் பெயர் ஜான் லிஸ்டர். அன்னையின் பெயர் மேரி. ஜான் லிஸ்டரின் 49 வது வயதில் லண்டனில் உள்ள யார்க்சைர் என்ற இடத்தில் பிறந்த கடைசி மகன் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். ஜோசப்பிற்கு சிறு வயதிலேயே, கண்ணாடிப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

1800 களில் பள்ளிப் படிப்பை அரைகுறையாய் முடித்த ஜோசப் ஜாக்சன், தனது 14 ஆவது வயதில் தன் தந்தையுடன் இணைந்து லோத்புரி என்ற ஊரில் மதுபான விற்பனையைக் கவனித்து வந்தார். அதில் அவர் சிறப்பாகச் செயல்பட்டதால் நான்கு ஆண்டுகளுக்குப்பின், அதன் பங்குதாரராகவும் ஆனார். தனது 32 ஆவது வயதில், 26 வயதுள்ள இசபெல்லா என்பவரை மணந்தார். பிறகு 1821 இல் தனது மைத்துனருடன், கப்பல் வணிகத்துக்குப் புறப்பட்டார். இவர்களுக்கு மேரி, ஜான், இசபெல்லா சோபியா, ஜோசப், வில்லியம் ஹென்றி, ஆர்தர் ஹூக் ஆகிய ஐந்து மக்கள் பிறந்தனர்.

உருப்பெருக்கி

[தொகு]

நுண்நோக்கிகளும், தொலைநோக்கிகளும், 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் நிறைய குறைகள் இருந்தன. முக்கியமாக, உருவங்கள் தெளிவாகத் தெரியாமல், கலங்கலாகத் தெரிந்தது வந்தன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூட, இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இயற்கையில் கண்ணாடிப் பொருட்களில் ஆர்வமுடைய ஜாக்சன் உருப்பெருக்கியின் 'அபரேஷன்' (aberration) எனப்படும் உருவம் மங்கலாகத் தெரியும் பிரச்சினைக்கு முடிவு கட்டினார். ஒரு நுண்நோக்கியை 1826ல் உருவாக்கி அதில் ஆடிகள் மூலம் தெளிவாக அருகாமைப் பொருட்களையும், தொலைவிலுள்ள பொருட்களையும் பார்க்க வகை செய்தார். நுண்ணோக்கி வழியே திசுக்களைப் பார்த்து அதனைப் பற்றிய கல்வியை வளர்த்துக்கொண்டார். அவரது நுண்ணோக்கி உருவாக்கத்துக்குப் பின், உயிரியல் மிக வேகமாக வளர்ந்தது. நுண்ணோக்கி தொழிலும் வளர்ந்தது. முதல் முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்டவர், மற்றவர்களுக்குக் காண்பித்தவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ஆவார். ஜாக்சன் லிஸ்டர் உருவாக்கிய நுண்ணோக்கி இலண்டன் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

[தொகு]

1832ல், இங்கிலாந்தின் வேந்தியக் கழகத்தில் (fellowship of the Royal Society) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறுதிக்காலம்

[தொகு]

1846 இல் தனது மகன் ஜான் இளவதிலேயே இறந்தபின் இவரும் இவருடைய மனைவி இசபெல்லாவும் ஆறு ஆண்டுகள் அப்டன் என்ற இடத்தில் தனியாக வசித்தனர். இவரது மற்றொரு மகனான வில்லியம் ஹென்றியும் தீராத நோயினால் 1864-இல் இறந்தார். லிஸ்டர் தனது 84 ஆம் வயதில் 1869-இல் அப்டனில் காலமானார்.

உசாத்துணை

[தொகு]
  • பேரா.சோ.மோகனா, கீற்று இணைய இதழ்
  • Godlee, Sir Rickman (1917). Lord Lister. London: Macmillan & Co.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஜாக்சன்_லிஸ்டர்&oldid=3924295" இலிருந்து மீள்விக்கப்பட்டது