ஜோசப் கணபதிப்ளாக்கல் ஆபிரகாம் (மலையாளம்: ജോസഫ് ജി. അബ്രഹാം) (பிறப்பு 11 செப்டம்பர் 1981) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்தியதடகள வீரர். இவர் தற்போது 400 மீட்டர் தடையோட்டத்தில் தேசிய சாதனையான 49.51 வினாடிகளை 26 ஆகத்து 2007 இல் ஒசாகோவில் நடந்த உலக தடகள சாதனைப் போட்டிகளில் ஏற்படுத்தியவர்.[3][4] இவ்வருடம் குவாங்சோவில் நடந்த நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ தடையோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.[5]