ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர்
ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர் | |
---|---|
அறிவியல் வாழ்க்கைப் போக்கு |
ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர் (21 மார்ச் 1797 – 17 திசம்பர் 1861) என்பவர் செருமனிய தொல்லுயிரியல், விலங்கியல் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் பழங்காலவியல் பற்றிய பல முக்கியமான படைப்புகளை எழுதினார்.
பணி
[தொகு]வாக்னர் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் முனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், விலங்கியல் ஸ்டாட்ஸ்சம்லுங் (மாநில விலங்கியல் சேகரிப்பு) காப்பாளராகவும் இருந்தார். இவர் பாலூட்டிகளின் புவியியல் பரவல் (Die Geographische Verbreitung der Säugethiere Dargestellt) (1844-46) என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.
வாக்னர் ஒரு கிறித்தவ படைப்பாளி.[1]
பிகர்மி
[தொகு]பிகெர்மியின் புதைபடிவப் படுக்கைகளுக்கு வாக்னர் பயணம் செய்து, மாசுடோடன், டைனோதெரியம், இப்பாரியன், இரண்டு வகையான ஒட்டகச் சிவிங்கிகள், மான் மற்றும் பிறவற்றின் புதைபடிவ எச்சங்களைக் கண்டுபிடித்து விவரித்தார்.[2][3] இந்த புதைபடிமங்களில் ஜோகன்னசு ரோத்துடன் இவர் இணைந்து எழுதிய தொல்லியல் நூல், "ரோத் & வாக்னர்" என்று அழைக்கப்படும் பழங்காலவியலில் ஒரு முக்கிய பாடப்புத்தகமாக மாறியது. இதில் "மிகவும் உடைந்த எலும்புகள், அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து முழுமையான எலும்புக்கூடு எதுவும் காணப்படவில்லை".[4][5]
பெருமை
[தொகு]வாக்னர், தென் அமெரிக்கப் பாம்பு வகையான தயபோரோலெபிசு வாக்னேரியின் அறிவியல் பெயரில் நினைவுகூரப்படுகிறது.[6]
நூல் பட்டியல்
[தொகு]- (in இடாய்ச்சு மொழி) 1844-1846. Die Geographische Verbreitung der Säugethiere Dargestellt.
- (in இடாய்ச்சு மொழி) Johann Andreas Wagner 1897. Monographie der gattung Pomatias Studer.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rupke, Nicolaas A. (2005). Neither Creation nor Evolution: The Third Way in Mid-Nineteenth-Century Thinking about the Origin of Species. Annals of the History and Philosophy of Biology 10: 160.
- ↑ Upper Miocene Formations of Greece at Pikermi பரணிடப்பட்டது 2012-06-03 at the வந்தவழி இயந்திரம் on Geology.com
- ↑ Neue Beiträge zur Kenntniss der fossilen Säugthier-Überreste von Pikermi on Google books, by Wagner, Munich, 1857
- ↑ Die fossilen Knochenüberreste von Pikermi in Griechenland on Google books, by Johannes Rudolf Roth and Johann Andreas Wagner, Munich, 1854
- ↑ "bones were much broken" in the Edinburgh New Philosophical Journal, Volume 6, 1857, page 182
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Wagner, J.A.", p. 278).