உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் வில்லியம் மார்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் மார்சல்
அமெரிக்காவின் 24வது அஞ்சல் துறைத் தலைமை இயக்குநர்
பதவியில்
சூலை 3, 1874 – ஆகத்து 24, 1874
குடியரசுத் தலைவர்யுலிசீஸ் கிராண்ட்
முன்னையவர்ஜான் கிரெஸ்வெல்
பின்னவர்மார்சல் சூவல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜேம்ஸ் வில்லியம் மார்சல்

(1822-08-14)ஆகத்து 14, 1822
வில்சன், வர்ஜீனியா, அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 5, 1910(1910-02-05) (அகவை 87)
வாஷிங்டன், அமெரிக்கா
அரசியல் கட்சிஅமெரிக்கக் குடியரசுக் கட்சி
கல்விஇளங்கலை பட்டம், திக்கின்சன் கல்லூரி

ஜேம்ஸ் வில்லியம் மார்சல் (James William Marshall) (ஆகத்து 14, 1822 - பெப்ரவரி 5, 1910) குடியரசுத் தலைவர் யுலிசீஸ் கிராண்ட்-இன் கீழ் அமெரிக்காவின் அஞ்சல் துறைத் தலைமை இயக்குநராகவும், லிங்கன், கிராண்ட் மற்றும் ஹேய்ஸ் ஆகியோரின் கீழ் பல திறன்களால் ஒரு அரசாங்க நிர்வாகியாகவும் இருந்தார். கிராண்ட் நிர்வாகத்தின் கடைசி அமைச்சரவை உறுப்பினராக மார்சல் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை, திருமணம் மற்றும் தொழில்

[தொகு]

ஜேம்ஸ் வில்லியம் மார்சல் 1822 ஆகத்து 14 அன்று வர்ஜீனியாவில் பிறந்தார். இவரது தாயார் சூசன் ஓரியா மார்சல் மற்றும் இவரது தந்தை ஜேம்ஸ் பெடே. இவரது தாத்தா ரஷ் மார்சல் ஆவார். [1] 1837 வரை கிளார்க் மற்றும் பாக்கியர் மாவட்டங்களில் பள்ளிகளில் பயின்றார். அதே ஆண்டு மார்சல் கென்டக்கியின் மவுண்ட் ஸ்டெர்லிங் நகருக்கு மாறினார். அங்கு இவர் வணிகத்தில் ஈடுபட்டார். [1] 1848இல் இவர் பென்சில்வேனியாவின் கார்லிஸ்லில் அமைந்துள்ள திக்கின்சன் கல்லூரியில் பட்டம் பெற்றார். பென்சில்வேனியாவில் [1] பட்டம் பெற்ற பிறகு மார்சல் 1848 முதல் 1850 வரை திக்கின்சன் கல்லூரியில் பண்டைய மொழிகளின் இணை பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் இவர் 1850 முதல் 1862 வரை பண்டைய மொழிகளின் முழு பேராசியராகப் பணியாற்றினார். [1] இவர் 1850இல் கார்லிசலின் ஜேன் ஸ்டீபன்சனை மணந்தார்.

அமெரிக்காவின் தூதர்

[தொகு]

அமெரிக்க உள்நாட்டுப் போர் வெடித்தபோது, அப்பொழுது ​​பணியாற்றிய குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனால் இங்கிலாந்தின் லீட்சுக்கு அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்.[1]

முதல் உதவி அஞ்சல் துறைத் தலைமை இயக்குநர் (1869-1874)

[தொகு]

1869 ஆம் ஆண்டில் அதிபர் யுலிசீஸ் கிராண்ட் இவரை முதல் உதவி அஞ்சல் துறைத் தலைமை அதிகாரியாக நியமித்தார். இவர் இதில் 1874 வரை பணியாற்றினார்.

அமெரிக்காவின் அஞ்சல் துறைத் தலைமை இயக்குநர் (1874)

[தொகு]

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிராண்ட் சூலை 1874 இல் இவரை அமெரிக்காவின் அஞ்சல் துறைத் தலைமை அதிகாரியாக்கினார். 1869இல் இப்பதவியில் நியமிக்கப்பட்ட ஜான் கிரெஸ்வெல் ராஜினாமா செய்ததால், மார்சல் நியமிக்கப்பட்டார். இவர் அப்பதவியில் செப்டம்பர் 1874 வரை, அதே ஆண்டில் மார்சல் சூவல் அப்பதவிக்கு நியமிக்கப்படும்வரை வரை பணியாற்றினார். [1]

முதல் உதவி தலைமை இயக்குநர் (1874-1877)

[தொகு]

அதே ஆண்டில் சூவல் அஞ்சல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் மார்சல் 1874 இல் முதல் உதவி தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கிராண்ட் நிர்வாகத்தின் முடிவில் ஜேம்ஸ் மார்சல் 1877 வரை இச்சேவையைத் தொடர்ந்தார். [1]

பிற்காலத் தொழில்

[தொகு]

அப்போதைய அதிபர் ருதர்போர்ட் பி. ஹேஸின் கீழ் பணியாற்றிய அஞ்சல்துறையின் தலைமை அதிகாரி கீ என்பவரால் இவர் இரயில்வே அஞ்சல் சேவையின் பொது கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.[2] 1880 இல் கீயின் பதவிக்காலம்வரை இவர் அப்பதவியில் இருந்தார். பின்னர் இவர் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். [1]

மரணம்

[தொகு]

பெப்ரவரி 5, 1910 இல், மார்சல் வாசிங்டனில் உடல் பலவீனத்தால் இறந்தார். [2]

ஆதாரங்கள்

[தொகு]
  • "James Williams Marshall". New York Times. February 6, 1910. https://timesmachine.nytimes.com/timesmachine/1910/02/06/102035222.pdf. 
  • Rositter Johnson, ed. (1906). Biographical Dictionary of America Marshall, James William. Boston: American Biographical Society.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]