ஜேம்ஸ் நீஷம்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜேம்ஸ் டக்ளஸ் ஷீஹான் நீஷம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 17 செப்டம்பர் 1990 ஆக்லாந்து, நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை மிதம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 264) | 14 பிப்ரவரி 2014 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 16 மார்ச் 2017 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 178) | 19 ஜனவரி 2013 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 ஜூலை 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 59) | 21 டிசம்பர் 2012 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009/10–2010/11 | ஆக்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–2017/18 | ஒட்டாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014 | டெல்லி டேர்டெவில்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014 | கயானா அமேசான் வாரியர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | டெர்பிசையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | கென்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018/19 | வெல்லிங்டன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 10 நவம்பர் 2019 |
ஜிம்மி நீஷம் (Jimmy Neesham) என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் டக்ளஸ் ஷீஹான் நீஷம் (பிறப்பு: செப்டம்பர் 17, 1990) நியூசிலாந்து பன்னாட்டுத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக அனைத்து வகையான துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடுகிறார். ஆக்லாந்தில் பிறந்த இவர் வெலிங்டன் துடுப்பாட்ட அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடுகிறார் .
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]இந்தியாவுக்கு எதிராக நீஷம் தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடி ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்கள் எடுத்தார், இது அறிமுகப் போட்டியில் 8வதாக களமிறங்கிய தேர்வு மட்டையாளர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[1] ஜூன் 2014 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இரண்டாவது தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தனது முதல் இரண்டு போட்டிகளில் நூறு அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[2]
3 ஜனவரி 2019 அன்று, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நீஷம் ஒரு ஓவரில் ஐந்து ஆறுகள் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்தார்.[3] இது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மட்டையாளர் ஒருவர் ஒரு நிறைவில் எடுத்த அதிக ஓட்டங்களாகும்.[4]
ஏப்ரல் 2019 இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றார்.[5][6] 1 ஜூன் 2019 அன்று, உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் முதல் போட்டியில், நீஷம் தனது 50 வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[7] ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்தின் போட்டியில், நீஷம் தனது ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தியதுடன் 50வது முறையாக மட்டையாளரை வீழ்த்தினார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Brendon McCullum hits 302 as New Zealand draw with India". BBC Sport. 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
- ↑ New Zealand 7 for 508 (dec), West Indies 0 for 19 at stumps on day two of first Test in Jamaica, after century by Jimmy Neesham
- ↑ "James Neesham marks return with five sixes in an over". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
- ↑ "Neesham slams 34 in record over". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
- ↑ "Sodhi and Blundell named in New Zealand World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "Uncapped Blundell named in New Zealand World Cup squad, Sodhi preferred to Astle". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "ICC Cricket World Cup 2019 (Match 3): New Zealand vs Sri Lanka – Statistical Preview". Cricket Addictor. https://cricketaddictor.com/cricket/icc-cricket-world-cup-2019-match-3-new-zealand-vs-sri-lanka-statistical-preview/. பார்த்த நாள்: 1 June 2019.
- ↑ "Neesham, Ferguson leaves Afghanistan in ruins". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 8 June 2019.