ஜெயா பொறியியல் கல்லூரி
Appearance
ஜெயா பொறியியல் கல்லூரி, திருநின்றவூர் | |
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 1995 |
சார்பு | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை |
தலைவர் | பேரா. ஏ. கனகராஜ் |
முதல்வர் | முனைவர். கிருஷ்ணன் விஜயராகவன் |
அமைவிடம் | , , 13°8′6″N 80°2′41″E / 13.13500°N 80.04472°E |
இணையதளம் | www |
ஜெயா பொறியியல் கல்லூரி திருநின்றவூர், தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனமாகும். கல்லூரி ISO 9001: 2000 சான்றிதழ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரி ஆவடியிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 29 கி.மீ., திருவள்ளூரிலிருந்து 16 கிலோமீட்டர்,நெமிலிச்சேரி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.
வரலாறு
[தொகு]ஜெயா பொறியியல் கல்லூரி 1995 இல் நிறுவப்பட்டது, இது ஜெயா கல்லூரிகள் குழுமத்தில் ஒரு பகுதியாக உள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
[தொகு]இளங்கலை படிப்புகள்
- பி. இ. வானூர்தி பொறியியல்
- பி. இ. குடிமுறை பொறியியல்
- பி. இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி. இ. மின்சார மற்றும் மின்னணு பொறியியல்
- பி. இ. மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல்
- பி. இ. இலத்திரனியல் மற்றும் மயமாக்கல் பொறியியல்
- பி. இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
- பி.டெக் தகவல் தொழில்நுட்பம்
- பி.டெக் ஜவுளி தொழில்நுட்பம்
முதுகலை படிப்புகள்
- எம்.இ பிரயோக இலத்திரனியல்
- எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.டெக் ஜவுளி தொழில்நுட்பம்
சிறப்பம்சங்கள்
[தொகு]- கணித்தமிழ் பேரவை :ஜெயா பொறியியல் கல்லூரி கணித்தமிழ் பேரவையில் ஒரு அங்கமாக விளங்குகிறது.
- ஜெயா கட்டற்ற மென்பொருள் மையம் : இந்த மையம் இலவச மென்பொருட்களின் விழிப்புணவுக்காகவும் அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்பாட்டிற்காகவும் உருவாக்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- "Jaya Engineering College, Anna University Chennai". Collegesintamilnadu.com. Archived from the original on 2013-01-21. Retrieved 2012-01-17.
- http://jec.ac.in/contact/. Jec.ac.in. Retrieved 2015-09-23
- http://jec.ac.in/us/.Retrieved 2015-09-23.