ஜென் குப்தா
ஜென் குப்தா Jen Gupta | |
---|---|
பிறப்பு | ஜெனிபெர் ஆன் குப்தா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மான்செசுட்டர் பல்கலைக்கழகம் |
அமைப்பு(கள்) | போர்ட்சுமவுத் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது |
|
வலைத்தளம் | |
jengupta |
ஜென் எனப்பட்ட ஜெனிபெர் ஆன் குப்தா (Jennifer Ann Gupta) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் போர்ட்சுமவுத் பல்கலைக்கழக அறிவியல் பரப்புரையாளரும் ஆவார். இவர் நாளைய உலகம் எனும் பிரித்தானிய ஒலிபரப்பு நிகழ்ச்சியில் தோன்றி உரை ஆற்றியுள்ளார்.
கல்வி
[தொகு]குப்தா வின்செசுட்டரில் பிறந்து வளர்ந்தார். இவர் தன் முதனிலைக் கல்வியை பீட்டர்சு சைமாண்டு ஆறாம் படிவக் கல்லூரியில் முடித்தார்.[1] இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் முதுவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழக்த்தின் ஜோடுரெல் பாங்க் வானியற்பியல் நோக்கீட்டகத்தில் முனைவர் பட்டம் 2012 இல் பெற்றுள்ளார் Jodrell Bank Centre for Astrophysics]].[2] இவரது முனைவர் பட்ட ஆய்வுரை "பெர்மி காலகட்ட செறிகதிர் முனைவுறு பால்வெளிக் கரு சார்ந்த பல் அளைநீள ஆய்வு (Multiwavelength Studies of Radio-loud Active Galactic Nuclei in the Fermi Era)" என்பதாகும்.[3]
வாழ்க்கைப்பணி
[தொகு]இவர் தன் முனைவர் பட்ட ஆய்வின்போதே அறிவியலில் பரப்புரைப் பணியைத் தொடங்கிவிட்டார். இவர் நகைச்சுவை சார்ந்த இணைய ஒலிபரப்பில் பெரும்பணி ஆற்றியுள்ளார்.[4] இவர் மான்செசுட்டர் பிரைட் குழுவரங்கில் வானியல் சார்ந்த ஊக்கமூட்டும் பல் நகைச்சுவைக் காட்சிகளை நடித்துக் காட்டியுள்ளார்.[5] இதேபோல இலண்டன் புளூம்சுபரி அரங்கிலும் நகைச்சுவைக் காட்சிகளை நடித்துக் காட்டியுள்ளார்.[6] அந்த ஆண்டே இவர் ஒரே நாளில் ஏழு மெர்லின் தொலைநோக்கிகளைக் காண சாலைப்பயணம் மேற்கொண்டு முடித்துள்ளார்.[7] இவர் பிரித்தானிய இயற்பியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்துள்ளார்.[8][9] இவர் பிரித்தானிய ஒலிபரப்புக் குழுமத்தின் நாளைய உலகம் நிகழ்ச்சியின் பலபகுதிகளுக்கு இணைவிருந்தோம்புநராக இருந்துள்ளார்.[10][11]
இவர் 2016 இல் அரசு வானியல் கழகத்தின் வானியலில் மகளிர் விழா ஓவியத் தொடர்களில் தோன்றியுள்ளார்.[12] அதே ஆண்டில் இவர் அழைப்பின்பேரில் அரசு நிறுவனத்தில் " கண்ணுக்குப் புலப்படாத இரவு வானம் (The invisible night sky)" எனும் தலைப்பில் அரியதொரு உரையாற்றியுள்ளார்.[13] இவர் தென்கிழக்கு இங்கிலாந்தில் வானியல் கழகங்களின் சார்பில் பல உரைகள் ஆற்றியுள்ளார்.[14][15][16] இவர் 2015 இல் வரலாற்றுப் புகழ்வாய்ந்த போர்ட்சுமவுத் துறைமுகத்தில் நேரடி விண்மீன்காணல் திட்டத்துக்கு ஏற்பாடு செய்து ஓம்புநராக இருந்தார்.[17]
இவர் பொதுமக்களுக்கான வானியல் உரைகள் மட்டுமன்றி, அறிவியல் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.[18] அதே ஆண்டில் இவர் துல்லியமற்ற அறிவியல் கோட்பாடுகளால் முறையாக விவாதம் நடத்திய பாஃபெசுட்டு விழாவையும் விருந்தோம்பினார்.[19][20] இவர் செல்டம் சீரியுசு ( Seldom Sirius) எனும் வானியல் இணைய ஒலிபரப்பு நிகழ்ச்சியின் நிறுவனரும் இணையோம்புநரும் ஆவார்.[21]
இவர் 2011 இல் நான் ஓர் அறிவியலாளர் ஆவேன். இங்கிருந்து எனை வெளியேற்றுங்கள்! என்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்றார்.[22] இவர் 2012 இல் போர்ட்சுமவுத் பல்கலைக்கழகத்தின் அண்டவியல், ஈர்ப்பு நிறுவனத்தில் சேர்ந்தார். இங்கு பரப்புரைக்கும் மக்கள் தொடர்புக்கும் மதிப்பீட்டுக்கும் இவர் பொறுப்பாளர் ஆவார்.[23] இவர் ஒவ்வோராண்டும் 10,000 பள்ளி மாணவர்களுடனும் பொது உறுப்பினர்களுடன் பணிசெய்கிறார்.[24]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Me" (in en-US). Dr Jen Gupta. 2014-08-29. https://jengupta.com/about-me/.
- ↑ "Outreach Officers - SEPnet" (in en-GB). SEPnet. http://www.sepnet.ac.uk/about-sepnet/outreach-officers/.
- ↑ Ann, Gupta, Jennifer (2012-09-17). "Multiwavelength Studies of Radio-loud Active Galactic Nuclei in the Fermi Era". www.escholar.manchester.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Jodcast archive". jodcast.net (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
- ↑ "Bright Club Manchester 4 - Family". Manchester Beacon (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-02-20. பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
- ↑ Jennifer Gupta (2011-11-22), Bright Club Stars: Jen Gupta, பார்க்கப்பட்ட நாள் 2018-02-13
- ↑ jodcast (2011-11-10), The e-MERLIN Roadtrip, பார்க்கப்பட்ட நாள் 2018-02-13
- ↑ "Physics in Action - The Training Partnership" (in en-US). The Training Partnership. http://www.thetrainingpartnership.org.uk/study-day/physics-in-action-16/.
- ↑ "Ogden Science Officers". www.ogdentrust.com (in ஆங்கிலம்). Archived from the original on 2018-02-14. பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ "Tomorrow's World: Me and My Robot". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
- ↑ "Tomorrow's World Live - Move to Mars". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
- ↑ "Portsmouth astrophysicist features in leading women portraits | UoP News". uopnews.port.ac.uk (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-04-14. பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ "The invisible night sky" (in en) இம் மூலத்தில் இருந்து 2019-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190414000600/https://www.rigb.org/whats-on/events-2016/april/public-the-invisible-night-sky.
- ↑ "Andover Astronomical Society". www.andoverastronomy.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ "Events" (in en-US). Dr Jen Gupta. 2014-10-02. https://jengupta.com/public-talks-and-events/events/.
- ↑ "Dr Jennifer Gupta: Radio Astronomy, Quasars and Black Holes" (in en-US). Isle of Wight Cafe Scientifique. 2015-09-24. https://cafescientifique.onthewight.com/dr-jennifer-gupta-radio-astronomy-quasars-and-black-holes/.
- ↑ "Stargazing Live 2015 at Portsmouth Historic Dockyard". Eventbrite (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ "An Evening Of Unnecessary Detail at Backyard Comedy Club". www.tickettext.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ "BAHFest London". Eventbrite (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ BAHFest (2016-05-17), BAHFest London - Big Science - Jen Gupta: Fixing the World, பார்க்கப்பட்ட நாள் 2018-02-13
- ↑ "Seldom Sirius Podcast". seldomsirius.net. பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ "What Jennifer Gupta did with her prize money… - About I'm a Scientist, Get me out of here" (in en-US). About I'm a Scientist, Get me out of here. 2017-01-25. https://about.imascientist.org.uk/2017/what-jennifer-gupta-did-with-her-prize-money/.
- ↑ "Jen Gupta". www.icg.port.ac.uk (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ "Introducing Jen Gupta" (in en-US). astrotweeps. 2016-07-04. https://astrotweeps.wordpress.com/2016/07/04/introducing-jen-gupta/.
வெளி இணைப்புகள்
[தொகு]