ஜீன் ஆடம்சன்
ஜீன் ஆடம்சன் MBE | |
---|---|
பிறப்பு | 29 பெப்ரவரி 1928 பெக்காம், இங்கிலாந்து |
தொழில் | எழுத்தாளர், விவரிப்பாளர் |
தேசியம் | பிரித்தானியர் |
கல்வி நிலையம் | இலண்டன் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | டாப்சி மற்றும் டிம் |
துணைவர் | காரெத் ஆடம்சன் (தி. 1957; இற. 1982) |
பிள்ளைகள் | லியோ (1961) கேபிரில்லெ (1963) கேட்டி (1965) |
ஜீன் ஆடம்சன் எம்.பீ.ஈ (Jean Adamson MBE-Order of the British Empire), (பிறப்பு: பிப்ரவரி 29, 1928) இவர் குழந்தைகளின் புத்தக எழுத்தாளர் மற்றும் படம் வரைபவர் ஆவார். அவரது நன்கு அறியப்பட்ட புத்தகங்கள் டாப்ஸி மற்றும் டிம் ஆகும். முதலாவது புத்தகம் 1960 இல் வெளியிடப்பட்டு, 2003 ஆம் ஆண்டில் மறுவெளியீடு செய்யப்பட்டது.[1][2]
வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]ஜீன் ஆடம்சன் தென்கிழக்கு லண்டனில் பெக்காமில் பிறந்தார். இலண்டன் பல்கலைக் கழகத்தில் கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியில் புத்தகங்களுக்கு ஓவியம் வரைதலைப் படிக்கும் முன், இலக்கணப் பள்ளியில் பயின்றார். பட்டம் பெற்ற பிறகு, அவர் பல்கலைக்கழகத்தில் படம் வரைதல் மற்றும் வடிவமைப்பு பற்றிக் கற்பித்தார்[1]. ஆடம்ஸன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது தனது எதிர்கால கணவரும் மற்றும் சக எழுத்தாளருமான கரெத் ஆடம்சனை சந்தித்தார். அவர்கள் 1957 இல் திருமணம் செய்து, நியூக்கேசல் நகருக்கு குடிபெயர்ந்தார்கள், அங்கே அவர்கள் இருவரும் குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுத ஆரம்பித்தார்கள்.[3][4]
ஆடம்சன் 1968 ஆம் ஆண்டில் இருந்து, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள ஸ்ட்ரெத்தாமில் வாழ்ந்து வந்தார். திருமணமாகி 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 1982ல் கரெத் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக இறந்தார்.[3] செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு ஸ்ட்ரெத்தாமில் நடைபயிற்சி மேற்கொண்டபோது ஆடம்சன் கொள்ளையரால் தாக்கப்பட்டார். அந்நிகழ்வில் அவரது கை முறிந்தது.[5]
விருதுகள்
[தொகு]ஆடம்ஸன் 1999 ல் குழந்தைகளுக்கான இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைக்காக பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த ஒழுங்கின உறுப்பினர் ஆனார். பின்னர் 2016 ஆம் ஆண்டில் தனது கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியின் கெளரவ உறுப்பினர் ஆக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Jean Adamson". Goldsmiths University of London. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
- ↑ "Relaunch for Topsy and Tim". news.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
- ↑ 3.0 3.1 "Topsy and Tim author Jean Adamson to be made Honorary Fellow of Goldsmiths, University of London". Ely-News. 16 February 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
- ↑ Rhodes, Giulia (31 October 2013). "Topsy and Tim are just like members of the family". Sunday Express. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016.
- ↑ "Children's author, 81, is robbed". news.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.