உள்ளடக்கத்துக்குச் செல்

ஜில் டார்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜில் டார்ட்டர்
TED (கருத்தரங்கு)
பிறப்பு16 சனவரி 1944 (1944-01-16) (அகவை 80)
தேசியம்அமெரிக்க ஐக்கிய நாடு
படித்த கல்வி நிறுவனங்கள்பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கார்னெல் பல்கலைக்கழகம்
பணிவானியலாளர்

ஜில் கார்னெல் டார்ட்டர் (Jill Cornell Tarter) (பிறப்பு: ஜனவரி 16, 1944) ஓர் அமெரிக்க வானியலாளர், சேதி ஆய்வு நிறுவனத்தின் மேனாள் இயக்குநர், சேதியின் பெர்னார்டு எம். ஆலிவர் கட்டில் பேராசிரியர். வானியலாளர்..[1][2][3]

கல்வி

[தொகு]

இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியலில் இளவல் பட்டம் பயின்றார். ப்ர்க்கெலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இவர் வானியலில் முதுநிலை, முனைவர் பட்டங்களைப் பெற்றார்.[4]

வானியல் பணி

[தொகு]

இவர் புறவெளி உயிரினத் தேட்டம் சார்ந்த பல அறிவியல் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் பட்டம் படிக்கும் மாணவராக இருந்தபோதே SERENDIP எனும் புறவெளி உயிரினம் வெளியிடும் கதிர்வீச்சு ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவர் backronym எனும் "அருகாமையில் உள்ள அறிதிற மக்கள் வெளியிட்ட புறவெளி கதிர்வீச்சு உமிழ்வுத் தேட்டம்." எனும் திட்டத்தை உருவாக்கினார். இவர் 1992 இல் நாசாவின் உயர் பிரிதிற நுண்ணலை அளக்கை (HRMS) திட்டப் பொறுப்பு அறிவியலாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் 1993 இலும் பின்னரும் சேதி நிறுவனத்தின் மீளாக்க உயர் பிரிதிற நுண்ணலை அளக்கை சார்ந்த போனிக்சு சேதி திட்ட இயக்குநராக இருந்துள்ளார். இவர் 2002 இல் HabCat சார்ந்ந்த மார்கரெட் டர்ன்புல்லுடன் இணைந்து போனிக்சு திட்டத்தின் முதன்மையான பகுதியை வடிவமைத்துள்ளார். இவர் பல டஜன் தொழில்நுட்பக் கட்டுரைகளை வெளியிட்டதோடு, பல விரிவுரைகளையும் உகந்த அறிவியல் கல்வியின் தேவை பற்றியும் புறவெளி அறிதிற உயிரினத் தேட்டம் பற்றியும் ஆற்றியுள்ளார். இவர் நீரக பிணைவை தொடரவல்ல அளவு பொருண்மையற்ர விண்மீன்களை வகைப்படுத்த, பழுப்புக் குறுமீன் என்ற சொல்லை உருவாக்கியவர் ஆவார்.[5] இவர் புறவெளி உயிரினத் தேட்டத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு, 2012 இல் ஓய்வு பெற்றார்.[3]

கானரித் தீவில் நடந்த முதல் starmus விழாவில், “புடவியில் அறிதிற வாழ்க்கையினர்: புறவெளியில் எவராவது உள்லனரா?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இவ்விழா வானியலாளர் காரிக் இசுரவேலரால் வானியலையும் சார்ந்த அறிவியல் புலங்களையும் இசையையும் கலையையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். பின்னர் டார்ட்டர் starmus குழும இயக்குநர்களில் ஒருவராகச் சேர்ந்தார். மற்ர இயக்குநர்களாக வானியற்பியலாளர் இசுரவேலரும் கித்தார் கலை இளவரசி பிரியான் மேரியும் கோட்பாட்டு இயற்பியலாலர் சுட்டிபன் ஆக்கிங்கும் படிமலர்ச்சி உயிரியலாளர் இரிச்சர்டுடாக்கின்சும் பிறரும் இருந்துள்ளனர். இவரது 2011 உரை Starmus: 50 Years of Man in Space என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ளது.[6] > இவர் CuriosityStreamஅறிவுரைக் குழுவின் உறுப்பினராவார்.[7]

தகைமையும் விருதுகளும்

[தொகு]

இவரின் வான் உயிரியல் ஆய்வும் பெண் அறிவிய்லாளராகப் பெற்ற வெற்றிகளும்தகைமைகளும் இவருக்குப் பல அறிவியல் நிறுவனங்களில் இருந்து பல விருதுகளை ஈட்டித் தந்தன.

  • இவர் 1989 இல் வான், வின்வெளியியலில் ஒரு பெண் அறிவியலாளராகப் பெற்ற வாழ்நாள் வெற்றிக்காக விருது பெற்றார்.
  • நாசாவில் இருந்து பொதுச்செவைக்காக இருமுமுறை விருதுகல் பெற்றுள்ளார்.[8]
  • இவர் 2002 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் அய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 2003 இல் கலிபோர்னியா அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.
  • இவர் 2003 இல் விண்வெளி அறிவியல் விருதாக, ஆல்டர் கோளரங்க விருதைப் பெற்றார்.
  • இவர் 2001 இல் டேல்லூரைடு தொழில்நுட்ப விழா விருதைப் பெற்றார்.[9]
  • இவர் 2004 இல் உலகின் 100 அரிய தாக்கம் விளைவித்த அறிஞர்களில் ஒருவராக டைம் (Time) இதழால் பாராட்டப்பட்டுள்ளார்..[10]
  • இவர் 2005 இல் மக்கள் அறிவியல் பரப்பலுக்காக, கார்ல் சாகனின் அறிவியல் பரப்புரைக்கான வியன்விழா விருதைப் பெற்றுள்ளார்.[11]
  • இவர் 2009 இல் TED பரிசைப் பெற்றார்.[12]
  • ஐயுறவு வாத உசாவல் குழுவின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[13]

மக்கள் பண்பாட்டில்

[தொகு]

டார்ட்டரின் வானியல் பணிகள் கார்ல் சாகனின் Contact புதினத்தில் பதிவாகியுள்ளன. [[Contact (1997 US film)|திரைப்படத்தில் எல்லி ஆரோவே என்ற கிளர்ச்சியாளர் பாத்திரமாக ஜோடு ஃபாசுட்டர் நடித்தார். இந்த நடிகையுடன் டார்ட்டர் சில மாதங்கள் படம் எடுக்கும் முன்பும் பின்பும் பேசியுள்ளார். ஆரோவே எனும் பாத்திரம் டார்ட்டரின் பணியைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளது.[4] இவர் ஜான் போசுவெல்லின் அறிவியல் பண்னிசை அல்லது நடைமுறையின் கவிதை (அறிவியலூக்கான பண்) எனும் இசை காணொளிப்படத்திலும் வருகிறார்.[14]

On October 20, 2006, Tarter appeared on the Point of Inquiry podcast to discuss the question: "நாம் தனித்துள்ளோமா?" எனும் கேள்விக்கான விவாதம் பற்றிய காணொளிப்படத்தில்2006 அக்தோபர் 20 இல் டார்ட்டர் தோன்றி, "நாம் தனித்துள்ளோமா? என்ற கேள்விக்கான விடையை அறிந்தால்தான் நாம் மாந்தராக எப்படி இருப்பது என்பது பற்றிய மாறுபட்ட கண்ணோட்டத்துக்கு வர நேரிடும்." எனக் கூறுகிறார்.[15]

அமெரிக்க நாட்டுப் பேராயத்தில் 2013 மே மாதத்தில் அமெரிக்க அறிவியல் விருதாளர் சட்டம், 2013 கொண்டுவரப்பட்டது. அப்போது ஒரு உய்ய உரையாளர் சட்டம் நிறைவேறினால், இதற்கு ஏற்ற அறிவியல் விருதாளராக டார்ட்டரைப் பரிந்துரைத்துள்லார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SETI Institute Official Website – Jill Tarter biography". Archived from the original on 2009-01-06. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  2. Overbye, Dennis (18 June 2012). "A Career Waiting for E.T. to Phone". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/06/19/science/seti-research-head-retires-after-long-search-for-alien-life.html. பார்த்த நாள்: 19 June 2012. 
  3. 3.0 3.1 "Alien hunter retires after 35-year quest for E.T." Fox News. May 22, 2012. பார்க்கப்பட்ட நாள் May 22, 2012.
  4. 4.0 4.1 Space.com: "Dr. Jill Tarter: Looking to Make 'Contact'". Archived from the original on October 5, 2008. பார்க்கப்பட்ட நாள் October 27, 2008.
  5. Brown dwarf – History Retrieved September 24, 2010
  6. http://www.prnewswire.co.uk/news-releases/starmus-festival-and-stephen-hawking-launch-the-book-starmus-50-years-of-man-in-space-274263251.html
  7. "CuriosityStream Advisory Board". பார்க்கப்பட்ட நாள் 31 August 2015.
  8. CNN: "Scientist probes outer space for aliens". CNN. April 19, 2004. http://www.cnn.com/2004/WORLD/americas/04/15/tarter/index.html. பார்த்த நாள்: October 27, 2008. 
  9. "Past Honorees". Telluride Tech Festival. பார்க்கப்பட்ட நாள் October 15, 2011.
  10. டைம் (இதழ்): "TIME 100: Jill Tarter". Time. April 26, 2004 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 17, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130817053635/http://www.time.com/time/specials/packages/article/0,28804,1970858_1970909_1971711,00.html. பார்த்த நாள்: October 27, 2008. 
  11. "Sagan Prize Recipients". wonderfest.org. 2011. பார்க்கப்பட்ட நாள் September 10, 2011.
  12. "TED Prizes Go From Deep Sea to Deep Space". பார்க்கப்பட்ட நாள் October 27, 2008.
  13. "CSI Fellows and Staff". பார்க்கப்பட்ட நாள் August 7, 2011.
  14. John Boswell (melodysheep), யூடியூபில் "The Poetry of Reality (An Anthem for Science)", February 25, 2010.
  15. வார்ப்புரு:Cite podcast
  16. Marlow, Jeffrey (9 May 2013). "The Science Laureate of the United States". Wired Magazine. http://www.wired.com/wiredscience/2013/05/the-science-laureate-of-the-united-states/. பார்த்த நாள்: 12 September 2013. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜில்_டார்ட்டர்&oldid=3584774" இலிருந்து மீள்விக்கப்பட்டது