ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன்
ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன் (George Gaylord Simpson 16 சூன் 1902–6 அக்டொபர் 1984) அமெரிக்காவைச் சேர்ந்த தொல்லுயிர் ஆராய்ச்சியாளர். கூர்தலறக் கொள்கையை வளர்த்தெடுப்பதிலும் மேம்படுத்துவதிலும் இவருடைய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை என மதிக்கப்படுகின்றன. அழிந்து போன உயிரினங்கள் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் குடியேறும் விலங்கினங்கள் பற்றியும் ஆய்ந்து எழுதியுள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]சிம்ப்சன் 1926 இல் யேல் பல்கலைக்கழகத்தில் படித்துப் பாலுட்டி விலங்குகளின் கூர்தலற வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக இருந்தார். 1945 முதல் 1959 வரை அமெரிக்கன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் தொல்லுயிர் பிரிவின் காப்பாளராக இருந்தார். 1959 முதல் 1970 வரை ஆர்வர்டு பல்கலைக்கழக ஒப்பீட்டு விலங்குகள் அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்தார். 1982 இல் ஓய்வு பெறும் வரை அரிசோனா பல்கலைக் கழகத்தில் புவிஅறிவியல் பேராசிரியராக இருந்தார்.