உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் காமாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் காமாவ்
George Gamow
பிறப்பு(1904-03-04)மார்ச்சு 4, 1904
ஒதேசா, உருசியா
இறப்புஆகத்து 19, 1968(1968-08-19) (அகவை 64)
கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைசோவியத் ஒன்றியம் சோவியத் ஒன்றியம்,
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா
தேசியம்உருசியர்
துறைஇயற்பியலாளர், அறிவியல் எழுத்தாளர்
பணியிடங்கள்கோட்டிங்கன் பல்கலைக்கழகம்
நீல்ஸ் போர் நிறுவனம்
கவெண்டிசு ஆய்வுக்கூடம்
ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேல்
கொலராடோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அலெக்சாண்டர் ஃபிரீடுமேன்
அறியப்படுவதுஅண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு, குவையத் துளையிடல், பெருவெடிப்பு
விருதுகள்காலிங்கா பரிசு (1956)

ஜார்ஜ் காமாவ் (George Gamow, (உருசிய பலுக்கல்: [ˈɡaməf], காமவ்; மார்ச் 4 [யூ.நா. பெப்ரவரி 20] 1904 – ஆகத்து 19, 1968), இயற்பெயர்: கியார்கிய் ஆந்திரனோவிச் காமாவ், உருசியம்: Георгий Антонович Гамов), ஓர் அணுவிக்கருவியல், அண்டவியல், உயிர்வேதியியல், இயற்பியல் அறிவியலாளர் ஆவார்.இவர் ஜார்ஜசு இலமைத்ரே பெருவெடிப்புக் கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர். முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்து விளக்கியவர். அணுக்கருவின் கதிரியக்கச் சிதைவு, விண்மீன் படிமலர்ச்சி, விண்மீன் அணுக்கருத் தொகுப்பு வினை, பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பு வினை, மூலக்கூற்று மரபியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் இவற்றின் தொகுப்பு நிகழ்வை அணுக்கருசார் அண்டத் தோற்ற நிகழ்வாக வரையறுத்தார்.

தன் வாழ்வின் நடுப்பகுதியிலும் கடைசிப்பகுதியிலும் கல்வி பயிற்றுவதில் நாட்டம் செலுத்தியுள்ளார். பல மக்கள் அறிவியல் நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று இரண்டு மூன்று ... ஈறிலி , திருவாளர் தோம்ப்கின் ... நூல் தொடர் ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. இன்னமும் முதல் வெளியீட்டுக்கு அரைநூற்றாண்டுக்குப் பின்னரும் அவரது நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு விற்பனையாகின்றன. இவை அறிவியலின் அடிப்படைகளையும் கணிதவியலையும் அறிமுகப்படுத்துவதிலும் விளக்குவதிலும் திறமை மிக்கனவாய் அமைகின்றன.

இளமையும் வாழ்க்கைப் பணியும்

[தொகு]

காமவ் உருசியப் பேரரசில் ஒதேசாவில் பிறந்தார். இவர் தந்தையார் பள்ளியில் உருசிய மொழியும் இலக்கியமும் பயிற்றுபவராகவும் தாயார் பெண்களுக்கு புவிப்பரப்பியலும் வரலாறும் பயிற்றுபவராகவும் இருந்துள்ளனர்..இவர் உருசிய மொழியுடன் தய்யரிடம் பிரெஞ்சும் தன் பயிற்சி ஆசிரியரிடம் செருமானிய மொழியும் இளமையிலேயே கற்றுக்கொண்டுள்ளார். இவர் தொடக்க காலத்தில் பெரும்பாலான வெளியீடுகளை பிரெஞ்சிலும் உருசியத்திலுமே வெளியிட்டுள்ளார். பின்னர் தொழில்நுட்ப நூல்களை எழுதவும் மக்கள் அறிவியல் நூல்களை எழுதவும் ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.

நூல்கள்

[தொகு]

மக்கள் நூல்கள்

[தொகு]
  • சூரியனின் பிறப்பும் இறப்பும் (The Birth and Death of the Sun) (1940, revised 1952)
  • புவியின் வரலாறு (Biography of the Earth) (1941)
  • ஒன்று இரண்டு மூன்று ...ஈறிலி (1947, revised 1961), Viking Press (copyright renewed by Barbara Gamow, 1974), Dover Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-25664-2, illustrated by the author. Dedicated to his son, Igor Gamow, it remains one of the most well received ever in the popular science genre. இதில் கணிதவியல், உயிரியல், இயற்பியல், படிகவியல், எனப் பல அறிவியல் அடிப்படைகளையும் நெறிமுரைகளையும் அலசுகிறார்.
  • நிலா (The Moon) (1953)
  • Gamow, George; Stern, Marvin (1958). Puzzle-Math. Viking Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-08637-7.
  • இயற்பியல் வரலாறு (Biography of Physics) (1961)
  • ஈர்ப்பியல் (Gravity) (1962) Dover Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-42563-0. Profiles of Galileo, Newton, and Einstein
  • புவியெனும் கோள் (A Planet Called Earth) (1963)
  • சூரியன் எனும் விண்மீன் (A Star Called the Sun) (1964)
  • இயற்பியலைக் குலுக்கிய முப்பது ஆண்டுகள் (Thirty Years That Shook Physics): குவையக் கோட்பாட்டின் கதை (The Story of Quantum Theory), 1966, Dover Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-24895-X.
  • என் உலகப் பார்வை: மறைமுக வாழ்க்கை வரலாறு (My World Line: An Informal Autobiography) (1970) Viking Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-50376-2

திருவாளர் தோம்ப்கின்சுவின் தொடர்கள்

[தொகு]
  • விந்தையுலகில் திருவாலர் தோம்ப்கின்சு (Mr. Tompkins in Wonderland) (1940) இது முதலில் Discovery இதழில் (UK) 1938 இல் வெளியிடப்பட்டது..
  • திருவாளர் தோம்ப்கின்சு அணுவை அலசுகிறார் (Mr. Tompkins Explores the Atom) (1945)
  • ''திருவாளர் தோம்ப்கின்சு வாழ்வின் உண்மைகளைக் கற்கிறார் (Mr. Tompkins Learns the Facts of Lif)e (1953), about biology
  • ''திருவாளர் தோம்ப்கின்சு தொகுதிகள் (Mr. Tompkins in Paperback) (1965), combines Mr. Tompkins in Wonderland with Mr. Tompkins Explores the Atom, Cambridge University Press, 1993 Canto edition with foreword by Roger Penrose
  • ''தனக்குள்ளே திருவாளர் தோம்ப்கின்சு (Mr. Tompkins Inside Himsel)f (1967), A rewritten version of Mr. Tompkins Learns the Facts of Life giving a broader view of biology, including recent developments in molecular biology. Coauthored by M. Ycas.
  • ''திருவாளர் தோம்ப்கின்சுவின் புத்துலகம் (The New World of Mr. Tompkins) (1999), coauthor Russell Stannard updated Mr. Tompkins in Paperback (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521630092 is a hardcover)

அறிவியல் பாட நூல்கள்

[தொகு]
  • அணுக்கருவின் உள்ளியைபும் கதிரியக்கமும் (The Constitution of Atomic Nuclei and Radioactivity) (1931)
  • அணுக்கருவின் கட்டமைப்பும் அணுக்கரு உருமாற்றங்களும் (Structure of Atomic Nuclei and Nuclear Transformations) (1937)
  • அண்டத்திலும் மாந்தர் வாழ்விலும் அணுவாற்றல் (Atomic Energy in Cosmic and Human Life) (1947)
  • அணுக்கரு, அணுக்கரு ஆற்றல் வாயில்களின் கோட்பாடு (Theory of Atomic Nucleus and Nuclear Energy Sources) (1949) coauthor C. L. Critchfield
  • புடவியின் தோற்றம் (1952)
  • பொருண்ம்ம், புவி, வானம் (Matter, Earth and Sky) (1958)
  • இயற்பியல்: அடிப்படைகளும் முனைமுகப்புகளும் (Physics: Foundations & Frontiers) (1960) coauthor John M. Cleveland
  • அணுவும் அணுக்கருவும் (The Atom and its Nucleus) (1961)
  • மும்முரமாகும் தோம்ப்கின்:ஜார்ஜ் காமவின் சாரவியல் (Mr. Tompkins Gets Serious: The Essential George Gamow) (2005). edited by Robert Oerter, Pi Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-187291-5.

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Interviews with Ralph A. Alpher and Robert C. Herman conducted by Martin Harwit in August, 1983, for the Archives at the Niels Bohr Library, American Institute of Physics, College Park, Maryland.
  • "Ralph A. Alpher, Robert C. Herman, and the Prediction of the Cosmic Microwave Background Radiation," Physics in Perspective, 14(3), 300–334, 2012, by Victor S. Alpher.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_காமாவ்&oldid=3616570" இலிருந்து மீள்விக்கப்பட்டது