உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ஹார்ட்லி துராண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் ஹார்ட்லி துராண்ட் (John Hartley Durrant, 10 சனவரி 1863–18 சனவரி 1928) என்பவர் ஓர் ஆங்கிலேயப் பூச்சியியலாளர் ஆவார். இவர் செதிலிறக்கையினங்களில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்டவர் ஆவார். இவர் அரச பூச்சியியல் சங்கத்தின் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார்.

துராண்ட் இங்கிலாந்தில் இட்ச்சின் என்ற இடத்தில் 1863 இல் பிறந்தார். இவர் உயிரியல் பெயரிடல் முறைமையில் ஆளுமை செலுத்தினார். வால்சிங்கம் பிரபு தாமசு டி கிரேயின் செயலாளராகப் பணியாற்றி, அவரது சேகரிப்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தார். இவை இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு விடப்பட்டபோது, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க வால்சிங்கம் துராண்டிற்கு நிதி வழங்கினார். துராண்ட் லயனல் வால்ட்டர் ரோத்சுசைல்டுடன் இணைந்து, பிரித்தானியப் பறவையியல் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செதிலிறக்கையினங்கள், தெற்கு டச்சு நியூ கினியில் உள்ள பனி மலைகளில் வோலசுத்தன் பயணங்கள் பற்றிய பல அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது சேகரிப்புகள் இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள ஹோப் துறை ஆகியவற்றிற்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

[தொகு]
  • Anonym (1928). [Durrant, J. H.] Entomologist's Monthly Magazine. (3) 64 67.
  • Busck, A. (1928). [Durrant, J. H.] Proceedings of the Entomological Society of Washington. 30 40.
  • Collin, J. E. (1929). [Durrant, J. H.] Proceedings of the Entomological Society of London.
  • Tams, W. H. T. (1928). [Durrant, J. H.] Nature. 121 214-215.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹார்ட்லி_துராண்ட்&oldid=3795498" இலிருந்து மீள்விக்கப்பட்டது