உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை
உருவாக்கம்கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு
எழுத்துஇராசேசு சக்சம், இலா தத்தா பேடி, மாளவிகா, மைராச்சு சைடி
இயக்கம்சித்தேந்திர சிறீவத்தவா
நடிப்புகிரத்திக்கா செங்கர், உல்கா குப்தா, சமீர் தர்மாதிக்காரி
நாடு இந்தியா
மொழிதமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி
அத்தியாயங்கள்520
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அபிமன்யூ சிங்கு
ஓட்டம்அண்ணளவாக 24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
படவடிவம்576-இ (சீர்துல்லியத் தொலைக்காட்சி)
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 8, 2010 –
சனவரி 27, 2012
மீண்டும் 2020 ஒளிபரப்பகின்றது
வெளியிணைப்புகள்
[ஜான்சி ராணி இணையதளம்]

ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை (Jhansi Rani, இந்தி: एक वीर स्त्री की कहानी... झाँसी की रानी, மராத்தி: झाशीची राणी, தெலுங்கு: ఝాన్సీ లక్ష్మీబాయి) என்பது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட இந்தி மொழியிலமைந்த சான்சி கி இராணி தொலைக்காட்சி நாடகத் தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்தத் தொடர் இந்தி மொழியில் ஆகத்து 18, 2009 அன்று முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.[1]

தமிழ் மொழியில் இந்த நிகழ்ச்சி மார்ச்சு 8, 2010 தொடங்கியது. முதலில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை ஒளிபரப்பப்பட்டது. பின்பு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பானது.[2] சூலை 18, 2011இலிருந்து நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பானது.[3]

இது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. தலைப்புக் குறிப்பிடுவது போல, இத்தொடரின் கதையானது 1857 இந்தியக் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த சான்சியின் இராணி இலட்சுமிபாயினுடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[4] இந்தத் தொடர் தமிழ் மொழியில் சனவரி 27, 2012 அன்று மகாராணி இலட்சுமிபாயின் வீர இறப்புடன் முடிவடைந்தது. சனவரி 30, 2012இலிருந்து 50 நாட்களில் முடியும் வண்ணம் ஒரு சிறப்புத் தொகுப்பாக இந்தத் தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி முடித்துள்ளது.[5]

தற்போது, 2020 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பகின்றது.

கதைக்கரு

[தொகு]

இது சான்சி இராணி இலட்சுமிபாய் பற்றிய ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும். இராணி இலட்சுமிபாயின் சிறு வயதிலிருந்து அவரின் இறப்பு வரையான நிகழ்வுகளை இத்தொடர் மையமாகக் கொண்டுள்ளது.[6]

இராணி இலட்சுமிபாய்/மனு பாய்

[தொகு]

இராணி இலட்சுமிபாய், மௌரியபந்தர் தம்பேயின் மகள் ஆவார். இராணி இலட்சுமிபாய் குதிரையேற்றம், வாட்போர், சுடுகுழலால் சுடுதல் என்பனவற்றில் திறமை வாய்ந்தவர். மறை, பழங்கதை, கீதை என்பனவற்றில் நிறைந்த அறிவுடையவர். இவர் ஒரு நேர்மையான ஆட்சியாளராக இருந்து அனைத்து மக்களுக்கும் அறத்தை வழங்கினார்.

நானா சாகேபு

[தொகு]

நானா சாகேபு, மாதவு நாராயண் இராவு என்பவரின் மகன் ஆவார். 1839இல் இரண்டாம் பேசுவா பாசி இராவு என்பவரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் இரக்கம், துணிவு, அறிவு என்பனவற்றை உடையவர். இவருடைய அறிவாற்றலும் முக்காலவுணர்வும் 1857 இந்தியக் கிளர்ச்சியில் இவரின் முக்கியத்துவத்தை உணர்த்தின.

மௌரியபந்தர் தம்பே

[தொகு]

மனுவின் தந்தையான மௌரியபந்தர் தம்பே மென்மையான இதயம் படைத்தவர். இவர் தனது மகளுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் கூறினார். தனது மகள் சிறந்ததை அறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மைனா பாய்

[தொகு]

மைனா பாய், பாசி இராவின் முதலாவது மனைவி ஆவார். இவர் எளிமையான, அடக்கமான, தனது பிள்ளைகளில் அக்கறையுள்ள பெண் ஆவார். இவர் தனது சொந்த மகளைப் போல் மனுவை நேசித்தார்.[7]

பேசுவா பாசி இராவு

[தொகு]

இரண்டாம் பேசுவா பாசி இராவு ஓர் ஆட்சியாளர். இவருக்கு இரண்டு மகள்கள். இவர் இரண்டு மகன்களைத் தத்தெடுத்துக் கொண்டார்.

தாந்தியா தோப்பே

[தொகு]

தாந்தியா தோப்பே, மனு பாயின் ஆசான் ஆவார். மனு, இராணி இலட்சுமிபாயாக வருவதற்கு உதவி புரிந்தவர்களுள் இவரும் ஒருவர். இராணி இலட்சுமிபாயின் இறப்பின் பின் இவர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

வாகினி சாகேபு

[தொகு]

வாகினி சாகேபு இத்தொடரில் ஒரு புனைவுக் கதைமாந்தர். இவர் பேசுவாக் குடும்பத்தின் மூத்த பெண் ஆவார்.

வைசாலி

[தொகு]

வைசாலி இத்தொடரில் ஒரு புனைவுக் கதைமாந்தர். இவர் இயசோதாவின் மகள் ஆவார்.[8]

வரலாறு

[தொகு]

இராணி இலட்சுமிபாய் நவம்பர் 19, 1835 மௌரியபந்தர் தம்பே, பகீரதிபாய் தம்பே ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[9] இவருக்குப் பெற்றோர் மணிக்கர்ணிக்கா என்று பெயர் சூட்டினர்.[10] மணிக்கர்ணிக்காவுக்கு நான்கு வயதாக இருக்கும்போது பகீரதிபாய் தம்பே இறந்து விட்டார்.[11]

1842இல் மணிக்கர்ணிக்காவுக்கு சான்சியின் மகாராசாவான கங்காதர இராவு நெவல்கருடன் திருமணம் நடைபெற்றது.[12] அதிலிருந்து மணிக்கர்ணிக்கா சான்சி இராணி ஆனார்.[13] திருமணத்தின் பின்பு, மணிக்கர்ணிக்காவுக்கு இலட்சுமிபாய் என்ற பெயர் சூட்டப்பட்டது.[14] 1851இல் இராணி இலட்சுமிபாய் தாமோதர் இராவு என்ற மகனைப் பெற்றெடுத்தார்.[15] என்றாலும் அக்குழந்தை ஏறத்தாழ நான்கு மாதங்களில் இறந்து போனது.[16] அதன் பின்னர், இருவரும் ஆனந்து இராவு என்ற குழந்தையைத் தத்தெடுத்தனர்.[17] பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் இராவு என்ற பெயர் சூட்டப்பட்டது.[18] ஆனாலும் தனது மகனின் இறப்பினால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீளாத மகாராசா கங்காதர இராவு நெவல்கர் நவம்பர் 21, 1853 இறந்தார்.[19]

ஆனாலும் அப்போதைய ஆங்கிலேய ஆணையரான இடல்லவுசி அவகாசியிலிக் கொள்கையின்படி, மகவேற்ற பிள்ளையை உத்தியோக முறையில் ஏற்க மறுத்து, சான்சியையை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சித்தார்.[20] ஆனாலும் இதற்கு மகாராணி இலட்சுமிபாய் ஒத்துக் கொள்ளவில்லை.[21]

இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது.[22] இக்கலகத்திற்கு இராணி இலட்சுமிபாய் உதவக்கூடும் என்ற ஐயத்தினால் சூன் 8, 1857 சோக்கன் பாகில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைவர்களைக் கொன்றதாக இராணி இலட்சுமிபாய் மீது குற்றஞ்சுமத்தி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் ஈ உரோசு தலைமையிலான படையை சான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைத்தது.[23] ஆனாலும் மகாராணி இலட்சுமிபாய் தனது படைகளுடன் இணைந்து ஆங்கிலேயர்களுடன் கடுமையாகப் போர் புரிந்தார்.[24] என்றாலும் ஆங்கிலேயர்கள் சான்சி நகரத்தைக் கைப்பற்றியவுடன் ராணி லட்சுமிபாய் தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார்.[25]

பின்னர், மகாராணி இலட்சுமிபாய் கல்பி என்ற இடத்துக்குச் சென்று தனது படைகளுடனும் தாந்தியா தோப்பேயின் படைகளுடனும் இணைந்து கொண்டார்.[26] மகாராணியும் தாந்தியா தோப்பேயும் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராசா சயாசிராவு சிந்தியாவின் படையைத் தோற்கடித்தார்கள். அத்தோடு, குவாலியரின் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.[27] அப்போது, ஆங்கிலேயரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. உடனே, மகாராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் புரிந்தார். ஆனாலும் போகூழாக சூன் 17, 1858 மகாராணி இலட்சுமிபாய் போரில் இறந்தார்.[28]

பகுதியான புனைவு

[தொகு]

வைசாலி, கங்கா, இலத்தி, வாகினி சாகேபு போன்ற புனைவுக் கதைமாந்தர்களும் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடிகர்கள்

[தொகு]

இளைய இராணி இலட்சுமிபாயாக நடித்தவர் உல்கா குப்தா ஆவார். இந்தி மொழியில் சூன் 8, 2010இலிருந்து வளர்ந்த இராணி இலட்சுமிபாயாக நடித்தவர் கிரத்திக்கா செங்கர் ஆவார். இருவரும் இராணி இலட்சுமிபாயாக நடித்ததற்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளனர். மேலும் சமீர் தர்மாதிக்காரி மகாராசா கங்காதர இராவாக நடித்துள்ளார்.

நடிகர் கதைமாந்தர்
இளைய கதைமாந்தர்கள்
உல்கா குப்தா இராணி இலட்சுமிபாய் அல்லது மனு பாய்
சகீர் சேக்கு நானா சாகேபு
வளர்ந்த கதைமாந்தர்கள்
கிரத்திக்கா செங்கர் இராணி இலட்சுமிபாய்/புரட்சி வீரன்/இராணா பங்குரா
சமீர் தர்மாதித்காரி மகாராசா கங்காதர இராவு நெவல்கர்
பிரியம் அம்பலியா தாமோதர் இராவு
ஆரியன் அகர்வால் ஆனந்து இராவு/தாமோதர் இராவு
சைலேசு தத்தர் மௌரியபந்தர் தம்பே
சுர்பி திவாரி மைனா பாய்
இரவீந்திர மாங்கனி பேசுவா பாசி இராவு
இசித்தா வியாசு இராணா பங்குரா/சல்காரிபாய்
அருணா இராணி வாகினி சாகேபு
செயா பட்டாச்சார்யா சக்கு பாய்
கரீமா அச்மானி மோட்டி பாய்
அமித்தா நங்கியா இலச்சு பாய்
தருண் கண்ணா அலி பகதூர்
சத்யசித் துபே நானா சாகேபு
விட்டுணு சர்மா வத்ராயண்
தேவு குப்னானி துருபாது
திரிசிக்கா திவாரி வைசாலி
பிரணீத்தா சாகு சூகி
சோனி சிங்கு விடக்கன்னி
மின்னல் கப்பூர் மந்திரா
தினேசு கௌசிக்கு நரசிங்கராவு
ஏமந்த சௌதிரி இரகுநாத்து சிங்கு
ஈவா குரோவர் பகீரதி தம்பே
சித்தார்து வாசுதேவு சமர் சிங்கு
புனீத்து வசிசிட்டு கர்மா
அமீத்து பாச்சோரி தாந்தியா தோப்பே
அசினூர் கவுர் பிராச்சி
தான்யா இந்து
பெனாவு தாதாச்சாஞ்சி கங்கா
அசுவினி கல்செக்கர் ஈரா பாய்
ஆரவு சௌதிரி மங்கள் பாண்டே[29]
அசிண்டு கவுர் இலடாய் சர்க்கார் (ஓர்ச்சாவின் இராணி)
சுடன்சு பாண்டே உவராச்சு (மோதின் இளவரசர்)
சயாசிராவு சிந்தியா (குவாலியரின் மன்னர்)
இராசா பகதூர் (குவாலியர்)
தினக்கர் இராவு (குவாலியர்)
இராவு சாகேபு
இலத்தி
உல்கா குப்தா காளி
சஞ்சய் சுவராச்சு இராவு துலாசு
மனோச்சு குமார் குலாம் கோவுசு கான்
முந்தார்
மலம் பாபா
பென் காப்ளான் சான் இலாங்கு (எழுத்தாளர்)
பிரித்தானியர்கள்
விக்டோரியா அரசி
சார்லசு கேனிங்கு, முதலாம் இயர்ல் கேனிங்கு
கேரி இரிச்சர்ட்சன் ஆளுநர் இடல்லவுசி
ஈ உரோசு
தலைவர் மாக்கு
எட்வர்டு சோனென்பிளிக்கு தலைவர் சேம்சு மேன்சன்/தலைவர் சான் டபிள்யூ. நெல்சன்
இரமோனா சாவு உரோசு நெல்சன்
கோல்
விக்காசு வர்மா உயர் தலைவர்/தலைவர் இராபர்டு ஆமில்டன்
அலெக்சு ஓ'நெல் படைப்பணித் தலைவர் இராபர்டு டபிள்யூ. எல்லிசு
தலைவர் மால்கம்
சாமுவெல் புரவுண் தலைவர் இராசு
தலைவர் மார்டின்
தலைவர் பிரேசர்
கிளென் தேவிடு சார்டு ஆணையர் வில்சன்
இராபின் பிராட்டு சர் மோர்லண்டு (கான்பூரின் ஆணையர்)
சுசான் பெர்னெர்டு திருமதி மோர்லண்டு

[30]

இறுதிப் படலம்

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

காயமடைந்த இராணி இலட்சுமிபாய் தாந்தியா தோப்பேயிடம் இரகுநாத்து சிங்கு திரும்பி வர மாட்டார் எனக் கூறுகிறார். தாமோதரையும் அழைத்துக் கொண்டு கான்பூருக்குச் செல்லுமாறும் அச்சுச் செய்திகளைச் சான் இலாங்கிடம் ஒப்படைக்கும்படியும் தொடர்ந்து கூறுகிறார் இராணி இலட்சுமிபாய். மேலும் சான் இலாங்கு அவற்றைச் செய்தித் தாளில் வெளிவிடுவதால் தமது குறிக்கோள் நிறைவேறி விடுமென்றும் கூறுகிறார். இச்சமயத்தில் பிரித்தானிய வீரர்கள் சான்சி இராணியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். தாந்தியா தோப்பேயையும் தாமோதரையும் இராணி இலட்சுமிபாய் கட்டாயப்படுத்திச் செல்லவைத்தார். இராணி இலட்சுமிபாய் இதற்கிடையில் கோயிலொன்றின் உள்ளே செல்கிறார். படுகாயம் அடைந்த இராணி இலட்சுமிபாய் இராசமாதா, பேசுவா பாசி இராவு, கர்மா, கோவுசு கான், மகாராசா கங்காதர இராவு, மௌரியபந்தர் ஆகியோரின் தோற்றத்தைக் காண்கிறார். அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத் தொடருமாறு இராணி இலட்சுமிபாயை வற்புறுத்துகிறார்கள். ஒவ்வொருவரும் இராணி இலட்சுமிபாயின் உடலில் நகைகளாக மாறுகின்றனர். பிரித்தானிய வீரர்கள் கோயிலுள் புகுகிறார்கள். இராணி இலட்சுமிபாய் ஹர ஹர மகாதேவா என்று முழங்கி ஆங்கிலேயர்களைத் துர்க்கையைப் போல் வீரமாகக் கொன்று குவிக்கிறார். உடனே, கோல் கோழையைப் போலே இராணி இலட்சுமிபாயைச் சுடுகிறார். படைவீரர்களை இராணி இலட்சுமிபாயின் கைகளைப் பிடிக்க விட்டு, அவரால் தாக்க முடியாதவாறு செய்துவிட்டுப் பின்பு வாளினாற்தாக்குகிறார் கோல். இராணி இலட்சுமிபாய் காயமடைந்திருந்தபோதிலும் படை வீரர்களைத் தாக்கி விட்டுத் துணிவுடன் கோலின் தலையில் தாக்குகிறார். அனைத்து ஆங்கிலேயர்களையும் அழித்து விட்டுக் கோயிலின் வாயில் வழியாகச் சென்ற வண்டியின் ஓட்டுநரிடம் தன் இறப்பைப் பற்றி யாரும் அறியக் கூடாது என்றும் தன் உடல் தீய ஆங்கிலேயர்களிடம் கிடைக்கக் கூடாது என்று வாக்குப் பெற்றுக்கொண்டு வீர இறப்பு அடைந்தார் இராணி இலட்சுமிபாய். அந்த வண்டி ஓட்டுநர் சான்சி இராணியின் இறுதிக் கடமைகளைச் செய்கிறார். மகாராணி விக்டோரியா ஒழிக என்று இந்தியர்கள் ஊர்வலம் செல்கிறார்கள். இராணி லட்சுமிபாய் இறந்துவிட்டதாகச் சார்லசு கேனிங்கு நம்பவில்லை. இந்தியர்கள் சான்சி இராணி இலட்சுமிபாய் இறந்துவிட்டதை நம்ப மறுக்கிறார்கள், சுதந்திரத் தீயை அணையாமல் காக்கின்றனர்.[31] மகாராசா கங்காதர இராவின் உயிர் இராணி இலட்சுமிபாயின் உயிரை அழைத்துச் செல்கிறது. மகாராணி இலட்சுமிபாய் இறக்கவில்லை. இறக்கவும் மாட்டார்கள். என்றுமே புரட்சியின் தீச் சுடராக நம் மனதில் இருப்பார்கள்.

வீரதீரச்செயல் மிகுந்த ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை இவ்வாறு முடிவடைந்தது.[32]

தலைப்புப் பாடல்

[தொகு]

இந்தத் தொடரின் தலைப்புப் பாடலைப் பாடகர் திப்பு பாடியிருந்தார்.[33]

ஏனைய மொழிகள்

[தொகு]

இந்தி மொழியில் அமைந்த தொடரானது தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜீ தொலைக்காட்சி, ஜீ தமிழ், ஜீ தெலுங்கு என்பனவற்றில் இத்தொடரானது முழுமையாக ஒளிபரப்பப்பட்டு விட்டது. ஜீ தெலுங்கில் இத்தொடர் இறுதியாக பெப்ரவரி 4, 2012 அன்று ஒளிபரப்பப்பட்டது.[34] ஜீ வலையமைப்பின் ஜீ மராத்தித் (திங்கள்-சனி, பி. ப. 2.00) தொலைக்காட்சியில் அக்டோபர் 31, 2011இலிருந்து இத்தொடர் ஒளிபரப்பப்படுகின்றது.[35] அத்தோடு, இந்தத் தொடர் இந்தி மொழியில் ஆங்கில உப தலைப்புகளுடன் ஜீ தொலைக்காட்சி அமெரிக்கா, ஏ. டி. என். கனடா ஆகிய தொலைக்காட்சிகளில் அக்டோபர் 10, 2011இலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இவ்விரு தொலைக்காட்சிகளிலும் இத்தொடர் ஆகத்து, 2013இல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது பகுப்பு நடிகர் கதைமாந்தர்
இந்தியத் தெலி விருதுகள்
2009 இந்தியத் தெலி விருதுகள் சிறந்த வரலாற்று நிகழ்ச்சி ஜான்சி ராணி -[36]
2009 இந்தியத் தெலி விருதுகள் சிறந்த படப்பிடிப்பு (புனைவு) தீபக்கு பாண்டே -
2009 இந்தியத் தெலி விருதுகள் சிறந்த ஒப்பனையாளர் நீருசா -[37]
2010 இந்தியத் தெலி விருதுகள் மிகவும் புகழ் பெற்ற வரலாற்று/தொன்மவியல் நிகழ்ச்சி ஜான்சி ராணி -
2010 இந்திய டெலி விருதுகள் மிகவும் புகழ் பெற்ற குழந்தைக் கலைஞர் உல்கா குப்தா மனு பாய்/இராணி இலட்சுமிபாய்
2010 இந்திய டெலி விருதுகள் சிறந்த ஆடை ஒப்பனைகள் நிக்காட்டு, மரியம், நீருசா -
2010 இந்திய டெலி விருதுகள் சிறந்த படப்பிடிப்பு (புனைவு) தீபக்கு பாண்டே -
2010 இந்திய டெலி விருதுகள் சிறந்த தொலைக்காட்சிப் பாடலாசிரியர் மைராச்சு சைடி -[38]
இந்தியத் தெலிவிசன் அக்காடமி விருதுகள்
2010 இந்தியத் தெலிவிசன் அக்காடமி விருதுகள் சிறந்த வரலாற்று/தொன்மவியல் நிகழ்ச்சி ஜான்சி ராணி -[39]
ஜீ இரிசுத்தே விருதுகள்
2010 ஜீ இரிசுத்தே விருதுகள் மிகவும் புகழ் பெற்ற கதைமாந்தருக்குச் சிறப்பு விருது உல்கா குப்தா மனு பாய்/இராணி இலட்சுமிபாய்
2010 ஜீ இரிசுத்தே விருதுகள் விருப்பமான மகள் கிரத்திக்கா செங்கர் இராணி இலட்சுமிபாய்
2010 ஜீ இரிசுத்தே விருதுகள் நேயத் தொடர் ஜான்சி ராணி -[40]
ஜீ தங்க விருதுகள்
2010 ஜீ தங்க விருதுகள் சிறந்த படப்பிடிப்பு (புனைவு) தீபக்கு பாண்டே -
2010 ஜீ தங்க விருதுகள் சிறந்த கலை இயக்கம் சந்தேசு கொந்தாலேக்கர் -
2010 ஜீ தங்க விருதுகள் சிறந்த தொகுப்பு -
2010 ஜீ தங்க விருதுகள் ஆண்டின் சிறந்த நிகழ்த்துநர் உல்கா குப்தா -[41]
தி குளோபல் இந்திய விலிம் அண்டு தெலிவிசன் ஆனர்சு
2011 தி குளோபல் இந்திய விலிம் அண்டு தெலிவிசன் ஆனர்சு சிறந்த புத்தம்புதிய முகம் (பெண்) கிரத்திக்கா செங்கர் இராணி இலட்சுமிபாய்
2011 தி குளோபல் இந்திய விலிம் அண்டு தெலிவிசன் ஆனர்சு சிறந்த கலை இயக்கம் சந்தேசு கொந்தாலேக்கர் -
ஏனைய விருதுகள்
2010 புதிய திறமை விருதுகள் பதிப்பாசிரியரின் தெரிவு-மிகவும் புகழ் பெற்ற புதிய வரலாற்று/தொன்மவியல் நிகழ்ச்சி ஜான்சி ராணி -[42]
2010 எவ். ஐ. சி. சி. ஐ. விருது ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர் உல்கா குப்தா மனுபாய்/இராணி இலட்சுமிபாய்[43]
2011 பிகு தெலிவிசன் விருதுகள் வீரமான பெண் கதைமாந்தர் (புனைவு) கிரத்திக்கா செங்கர் இராணி இலட்சுமிபாய்[44]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. படல வழிகாட்டி-பக்கம் 166(ஆங்கில மொழியில்)
  2. புதிய தொடர்கள்/நிகழ்ச்சிகள்-பக்கம் 3
  3. புதிய தொடர்கள்/நிகழ்ச்சிகள்-பக்கம் 4
  4. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] இந்தியாவில் பெண்ணின் ஆற்றலைத் தொகுக்கும் ஒரு நிகழ்ச்சியை ஜீ தொலைக்காட்சி தொடங்குகிறது (ஆங்கில மொழியில்)
  5. "டெலிவிஷன் விருந்து". Archived from the original on 2012-02-23. Retrieved 2021-09-04.
  6. ஜான்சி ராணி பற்றி (ஆங்கில மொழியில்)
  7. நடிகர்களைப் பார்க்க-பக்கம் 1 (ஆங்கில மொழியில்)
  8. நடிகர்களைப் பார்க்க-பக்கம் 2 (ஆங்கில மொழியில்)
  9. சான்சி இராணி இலட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு (ஆங்கில மொழியில்)
  10. ஜான்சி ராணி-பக்கம் 1[தொடர்பிழந்த இணைப்பு]
  11. சான்சி இராணி (ஆங்கில மொழியில்)
  12. இலட்சுமிபாய், சான்சியின் இராணி (ஆங்கில மொழியில்)
  13. இலட்சுமிபாய், சான்சியின் இராணி (ஆங்கில மொழியில்)
  14. இலட்சுமிபாய், சான்சியின் இராணி (ஆங்கில மொழியில்)
  15. இலட்சுமிபாய்: சான்சியின் இராணி (ஆங்கில மொழியில்)
  16. இராணி இலட்சுமிபாய் (ஆங்கில மொழியில்)
  17. சான்சி இலட்சுமிபாய் (ஆங்கில மொழியில்)
  18. சான்சி இராணி இலட்சுமிபாய் (ஆங்கில மொழியில்)
  19. இராணி சான்சி (1835-1858) (ஆங்கில மொழியில்)
  20. கீழ்ப்படிய மறுத்தல்: சான்சி-பாகம் 1 (ஆங்கில மொழியில்)
  21. சான்சி-இராணி இலட்சுமிபாய் (ஆங்கில மொழியில்)
  22. இந்தியாவின் உரிமைக்கான முதற்போர் (ஆங்கில மொழியில்)
  23. சான்சியின் இராணி நோக்கத்துக்கு எதிரான போராளி (ஆங்கில மொழியில்)
  24. ஜான்சி ராணி-பக்கம் 2[தொடர்பிழந்த இணைப்பு]
  25. இலட்சுமிபாய், சான்சியின் இராணி (ஆங்கில மொழியில்)
  26. ["சான்சியின் இராணி 1854-1858 (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-12-09. Retrieved 2012-03-10. சான்சியின் இராணி 1854-1858 (ஆங்கில மொழியில்)]
  27. ["சான்சியின் வரலாறு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-08-03. Retrieved 2012-03-10. சான்சியின் வரலாறு (ஆங்கில மொழியில்)]
  28. இராணி இலட்சுமிபாய் (1835-1858) (ஆங்கில மொழியில்)
  29. ஒரு வீரப்பெண்ணின் கதை ஜான்சி ராணி நடிகர்கள்-பக்கம் 1 (ஆங்கில மொழியில்)
  30. ஒரு வீரப்பெண்ணின் கதை ஜான்சி ராணி நடிகர்கள்-பக்கம் 2 (ஆங்கில மொழியில்)
  31. படல வழிகாட்டி-பக்கம் 1 (ஆங்கில மொழியில்)
  32. ஜான்சி ராணி சன. 27 '12
  33. ஜான்சி ராணி விளம்பரம்-1 (ஆங்கில மொழியில்)
  34. [தொடர்பிழந்த இணைப்பு] ManaTeluguMovies.net-சான்சி இலட்சுமிபாய்-ப561-பெப்ரவரி 4 (தெலுங்கில்)...
  35. ["ஜான்சி ராணி-திங்கள்-சனி @ பி. ப. 2.00 மணி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-11-21. Retrieved 2011-12-14. ஜான்சி ராணி-திங்கள்-சனி @ பி. ப. 2.00 மணி (ஆங்கில மொழியில்)]
  36. ["9ஆவது இந்தியத் தெலி விருதுகள் வெற்றி பெற்றவர்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-11. Retrieved 2012-02-12. 9ஆவது இந்தியத் தெலி விருதுகள் வெற்றி பெற்றவர்கள் (ஆங்கில மொழியில்)]
  37. ["9ஆவது இந்தித் தெலி விருதுகளில் தொழினுட்பவியல், திட்டமிடுதல் வெற்றி பெற்றவர்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-08-17. Retrieved 2012-02-12. 9ஆவது இந்தித் தெலி விருதுகளில் தொழினுட்பவியல், திட்டமிடுதல் வெற்றி பெற்றவர்கள் (ஆங்கில மொழியில்)]
  38. ["வெற்றி பெற்றவர்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-10-16. Retrieved 2012-02-12. வெற்றி பெற்றவர்கள் (ஆங்கில மொழியில்)]
  39. ["இந்தியத் தெலிவிசன் அக்காடமி விருதுகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2010-08-20. Retrieved 2012-02-12. இந்தியத் தெலிவிசன் அக்காடமி விருதுகள் (ஆங்கில மொழியில்)]
  40. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] ஜான்சி ராணி: ஒரு பெண்ணின் துணிவு பற்றிய ஒரு கதை (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
  41. ["ஜான்சி ராணிக்கு விருது மழை பொழிகிறது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-11-30. Retrieved 2012-04-22. ஜான்சி ராணிக்கு விருது மழை பொழிகிறது (ஆங்கில மொழியில்)]
  42. "முன்னைய வெற்றி பெற்றவர்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-08-17. Retrieved 2012-02-14.
  43. ["எவ். ஐ. சி. சி. ஐ. சட்டகங்களில் ஜீ தொலைக்காட்சிக்கு இது ஓர் இரட்டை வெற்றி (ஆங்கில மொழியில்)!". Archived from the original on 2012-11-30. Retrieved 2012-04-22. எவ். ஐ. சி. சி. ஐ. சட்டகங்களில் ஜீ தொலைக்காட்சிக்கு இது ஓர் இரட்டை வெற்றி (ஆங்கில மொழியில்)!]
  44. ["பிகு தெலிவிசன் விருதுகள் 2011 (விருது) (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-18. Retrieved 2012-02-14. பிகு தெலிவிசன் விருதுகள் 2011 (விருது) (ஆங்கில மொழியில்)]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • ஜான்சி ராணி, ஜீ தமிழ்த் தொலைக்காட்சியினுடைய அலுவல் முறை இணையத்தளம்
  • ஜான்சி ராணி, ஜீ தொலைக்காட்சியினுடைய அலுவல் முறை இணையத்தளம்