ஜாதவ்பூர்
ஜாதவ்பூர் | |
---|---|
கொல்கத்தா மாநகரம் | |
1:இராஜா சுபோத் சந்திர மல்லிக் சாலை 2:சுலேகா மோரே 3:ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 4:இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம் 5:ஜாதவ்பூர் பேருந்து நிலையம் | |
ஆள்கூறுகள்: 22°30′09″N 88°22′03″E / 22.502513°N 88.3676051°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நகரம் | கொல்கத்தா |
மாவட்டம் | கொல்கத்தா[1][2][3] |
கொல்கத்தா மெட்ரோ நிலையம் |
|
மாநகராட்சி | கொல்கத்தா மாநகராட்சி |
மாநகராட்சிகள் | கொல்கத்தா மாநகராட்சியின் வார்டுகள் 92, 93, 96, 98, 99 மற்றும் 102 |
ஏற்றம் | 36 ft (11 m) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி[4][5] |
• கூடுதல் அலுவல் மொழி | ஆங்கிலம்[4] |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 700 032, 700 092 |
இடக் குறியீடு | +91 33 |
மக்களவை தொகுதி | ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஜாதவ்பூர் சட்டமன்றத் தொகுதி |
ஜாதவ்பூர் (Jadavpur), இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கொல்கத்தா மாவட்டத்தில் உள்ள தலைநகர் பகுதியான கொல்கத்தா மாநகரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஜாதவ்பூர் கொல்கத்தாவிற்கு தென்கிழக்கே (ஜவகர்லால் நேரு சாலை வழியாக) 12.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொல்கத்தா மாநகராட்சியின் வார்டுகள் எண் 92, 93, 96, 98, 99 மற்றும் 102 ஜாதவ்பூர் நகர்புற பகுதியில் உள்ளது. தெற்கு கொல்கத்தா மாநகரத்தில் அமைந்த ஜாதவ்பூர் நகர்புற பகுதியில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்[6], இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்[7], மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்[8] மற்றும் இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம்[9] உள்ளது. ஜாதவ்பூரில் இராஜா சுபோத் சந்திர மல்லிக் சாலை மிகவும் பிரபலம். ஜாதவ்பூர் பகுதி, ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதிக்கும்; ஜாதவ்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.
போக்குவரத்து
[தொகு]ஜாதவ்பூர் பகுதியில் ஜாதவ்பூர் தொடருந்து நிலையம் மற்றும் கொல்கத்தா மெட்ரோவின் இரவீந்திர சரோவர் மெட்ரோ நிலையம், மகாநாயக் உத்தம் குமார் மெட்ரோ நிலையம், கவி சுகந்தா மெட்ரோ நிலையம், ஜோதிரிந்திரா நந்தி மெட்ரோ நிலையம் மற்றும் சத்யஜித் ராய் மெட்ரோ நிலையங்கள் உள்ளது.
கல்வி & ஆய்வு நிலையங்கள்
[தொகு]- ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்[10].[11][12][13]
- விஜய்கர் ஜோதிஷ் ராய் கல்லூரி [14]
- இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்[15]
- இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம்
- மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்
- கேபிசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை.[16]
- ஜாதவ்பூர் வித்தியாபீடம்[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kolkata district". http://ceowestbengal.nic.in/ACName?DCID=10.
- ↑ "Electors Details As On 30-10-2010" இம் மூலத்தில் இருந்து 29 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130529011629/http://www.s24pgs.gov.in/election/doc/electors%20details.pdf.
- ↑ "KMC Wards in South 24 Parganas". http://s24pgs.gov.in/s24p/page.php?nm=SubDivision.
- ↑ 4.0 4.1 "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
- ↑ Jadavpur University
- ↑ Indian Association for the Cultivation of Science
- ↑ "About CGCRI". cgcri.res.in. பார்க்கப்பட்ட நாள் 13 March 2018.
- ↑ INDIAN INSTITUTE OF CHEMICAL BIOLOGY
- ↑ "The National Council of Education Bengal | Home". Archived from the original on 8 June 2020. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
- ↑ "Jadavpur University". JU. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
- ↑ "Jadavpur University, Kolkata". collegedunia. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
- ↑ "Where Big Thinkers Come to Disrupt". World University Rankings. UNSW Sydney. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
- ↑ "Vijaygarh Jyotish Ray College". VJRC. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
- ↑ "Indian Association for the Cultivation of Science". IACS. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
- ↑ "KPC Medical College and Hospital, Jadavpur". KPCMCH. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
- ↑ "Jadavpur Vidyapith". JV. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.