ஜமால் அப்துல் நாசிர்
ஜமால் அப்துந் நாசிர் | |
---|---|
جمال عبد الناصر | |
2வது எகிப்திய ஜனாதிபதி | |
பதவியில் 23 சூன் 1956 – 28 செப்டம்பர் 1970 | |
பிரதமர் | பட்டியலைக் காண்க
|
Vice President | பட்டியலைக் காண்க
|
முன்னையவர் | முகமது நஜீப் |
பின்னவர் | அன்வர் சதாத் |
எகிப்திய பிரதம மந்திரி | |
பதவியில் 19 சூன் 1967 – 28 செப்டம்பர் 1970 | |
குடியரசுத் தலைவர் | அவரே |
முன்னையவர் | முகமது செத்கீ சுலேமான் |
பின்னவர் | மஹ்மூத் ஃபௌசி |
பதவியில் 18 ஏப்ரல் 1954 – 29 செப்டம்பர் 1962 | |
குடியரசுத் தலைவர் | முகமது நஜீப் தானேதான் |
முன்னையவர் | முகமது நஜீப் |
பின்னவர் | அலி சாப்ரி |
பதவியில் 25 பிப்ரவரி 1954 – 8 மார்ச் 1954 | |
குடியரசுத் தலைவர் | முகமது நஜீப் |
முன்னையவர் | முகமது நஜீப் |
பின்னவர் | முகமது நஜீப் |
எகிப்தியத் துணைப் பிரதமர் | |
பதவியில் 8 மார்ச் 1954 – 18 ஏப்ரல் 1954 | |
பிரதமர் | முகமது நஜீப் |
முன்னையவர் | ஜமால் சலேம் |
பின்னவர் | ஜமால் சலேம் |
பதவியில் 18 சூன் 1953 – 25 பிப்ரவரி 1954 | |
பிரதமர் | முகமது நஜீப் |
முன்னையவர் | சுலேமான் ஹஃபீசு |
பின்னவர் | ஜமால் சலேம் |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 18 சூன் 1953 – 25 பிப்ரவரி 1954 | |
பிரதமர் | முகமது நஜீப் |
முன்னையவர் | சுலேமான் ஹஃபீசு |
பின்னவர் | சக்காரியா மொயித்தீன் |
புரட்சி ஆணை மன்றத் அவை தலைவர் | |
பதவியில் 14 நவம்பர் 1954 – 23 சூன் 1956 | |
முன்னையவர் | முகமது நஜீப் |
பின்னவர் | பதவி அகற்றப்பட்டது |
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 5 அக்டோபர் 1964 – 8 செப்டம்பர் 1970 | |
முன்னையவர் | ஜோசிப் புரோஸ் டீடோ |
பின்னவர் | கென்னத் கவுண்டா |
ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் அவைத்தலைவர் | |
பதவியில் 17 சூலை 1964 – 21 அக்டோபர் 1965 | |
முன்னையவர் | முதலாம் ஹைலி செலாசி |
பின்னவர் | குவாமே நிக்ரூமா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜமால் அப்துந் நாசிர் உஸேன் 15 சனவரி 1918 அலெக்சாந்திரியா, எகிப்து |
இறப்பு | 28 செப்டம்பர் 1970 கெய்ரோ, ஐக்கிய அரபு குடியரசு | (அகவை 52)
தேசியம் | எகிப்தியர் |
அரசியல் கட்சி | அரபு சோசியலிச ஐக்கியம் |
துணைவர் | தகியா காசெம் |
பிள்ளைகள் | ஹோதா மோனா காலித் அப்துல் ஹமீத் அப்துல் ஹக்கீம் |
தொழில் | இராணுவ அதிகாரி |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | எகிப்து |
கிளை/சேவை | எகிப்திய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1938–1952 |
தரம் | கர்னல் |
போர்கள்/யுத்தங்கள் | 1948 அரபு - இசுரேல் போர் |
ஜமால் அப்துந் நாசிர் உசைன் (அரபு மொழி: جمال عبد الناصر حسين) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜமால் அப்துந் நாசிர் (Gamal Abdel Nasser, சனவரி 15, 1918 - செப்டெம்பர் 28, 1970)[1] எகிப்தின் இரண்டாவது சனாதிபதியாக இருந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப்பதவியை வகித்தார். எகிப்து நாட்டுப் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்துந் நாசிர், பின்னர் நாட்டின் முதலாவது சனாதிபதியாக இருந்த முகம்மது நஜீப்புடன் இணைந்து, 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். இப் புரட்சி மூலம் எகிப்து, சூடான் முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் எகிப்தில் நவீனமயமாக்கத்துக்கான பாதை திறந்துவிடப்பட்டது. குறுகிய காலமே நிலைத்திருந்த எகிப்து-சிரியா இணைப்பு உட்படப் பேரரேபியத் தேசியவாதம் பெருமளவு வளர்ச்சி பெற்றதுடன் எகிப்தில் சோசலிசச் சீர்திருத்தங்களும் இடம்பெற்றன.
நாசிர் தற்கால அராபிய வரலாற்றிலும், 20 ஆம் நூற்றாண்டில் அரசியலிலும் ஒரு முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார். இவரது தலைமையின் கீழ் எகிப்து சூயெசுக் கால்வாயை நாட்டுடைமை ஆக்கியதுடன், அரபு உலகிலும், ஆப்பிரிக்காவிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பையும் செய்தது. சூயெசு நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அரபு உலகம் முழுவதிலும் நாசிர் ஒரு வீரராகக் கருதப்பட்டார். அனைத்துலக அணிசேரா இயக்கத்தைத் தொடங்குவதில் நாசிரின் பங்கு முக்கியமானது. நாசிர், அவரது தேசியவாதக் கொள்கைக்காகவும், நாசிரியம் என அழைக்கப்பட்ட இவரது வகைப் பேரரேபியவாதத்துக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர். இவரது இக்கொள்கைக்கு 1950 களிலும், 1960 களிலும், அரபு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது. இசுரேலுடனான ஆறு நாள் போரில் அரேபியப் படைகள் தோல்வியடைந்தது, அரபுலகின் தலைவர் என்ற இவரது நிலைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vatikiotis, Panayiotis J. (1978). Nasser and His Generation. London: Croom Helm. pp. 23–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85664-433-7.
- ↑ Rasler, Karen; Thompson, William R.; Ganguly, Sumit (2013). How Rivalries End. Philadelphia: University of Pennsylvania Press. pp. 38–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-4498-4.