உள்ளடக்கத்துக்குச் செல்

ஜனமித்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனமித்திரன் என்பது பிரித்தானிய இந்தியாவின், சுதேச சமஸ்தானமான புதுக்கோட்டை நாட்டிலிலிருந்து வெளியான முதல் தமிழ் இதழாகும்.[1] இது 1925, அக்டோபர், 17 முதல் வார இதழாக புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தது. இந்த இதழின் ஆசிரியராக பி. எஸ். பாலசுப்பிரமணிய அய்யர் இருந்தார். இவர் புதுக்கோட்டையில் ஜனமித்திரன் என்ற அச்சகத்தை முதலில் துவக்கினார். அந்த அச்சகத்திலிருந்து இந்த இதழைக் கொண்டுவந்தார். இந்த இதழில் 1927 செப்டம்பர் 21 அன்று புதுக்கோட்டைக்கு காந்தியடிகள் வந்தது, அப்போது இருந்த புதுக்ககோட்டை சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது போன்ற வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றன.

வரலாறு[தொகு]

ஜனமித்திரன் இதழானது புதுக்கோட்டை சமஸ்தான அரசு நிகழ்வுகளை வெளியிட்டு வந்தது. புதுக்கோட்டை மனரான மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆத்திரேலியப் பெண்ணை மணந்து அதனால் ஏற்பட்ட எதிர்ப்பினால் மன்னர் பதவியைத் துறந்தார். ஒரு கட்டத்தில் அவரது மகனான சிட்னி மார்தாண்டனுக்கு மன்னராக பட்டம் சூட்டவேண்டும் என்ற சமஸ்தானம் இறங்கிய நிலையில். அதை எதிர்த்து ஜனமித்திரன் எழுதி வந்தது.

இதனால் ஆத்திரம் கொண்ட சமஸ்தானம், இதழின் மீது வழக்குத் தொடர்ந்தது, இதழை தடை செய்தது. மேலும் இதழின் கௌரவ ஆசிரியரான எஸ். விசுவநாத அய்யரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அமர்வு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்து இதழ் நடத்தியது தவறு என்று தண்டணையும் அபராதமும் விதிக்கபட்டது. மேலு முறையீட்டில் தலைமை நீதியரசர் அந்தத் தீ்ர்ப்பு இரத்து செய்யபட்டது. வழக்குளில் இருந்து தீர்வு கிடைத்த பிறகு பொருளாதார நெருக்கடியால் இதழ் வெளிவருவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. பின்னர் சமஸ்தானத்துக்கு வெளியே உள்ள வாசகர்களின் உதவியால் இதழ் மீண்டும் வெளியானது. கடைசியில் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் 1939 ஆம் ஆண்டோடு இதழ் நிறுத்தப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சுரா, அண்டனூர் (2024-06-12). "நூற்றாண்டு: ஜனமித்திரன் இதழ் (1924- 2024)". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "ஜனமித்திரன் இதழ் - 100: புதுக்கோட்டையின் முதல் இதழ்". 2024-06-23. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனமித்திரன்&oldid=4030319" இலிருந்து மீள்விக்கப்பட்டது