உள்ளடக்கத்துக்குச் செல்

ச. சபாநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓவியர் சபா என அழைக்கப்படும் சரவணமுத்து சபாநாயகம் (இறப்பு: ஆகத்து 7, 2013) ஈழத்து மரபுவழி ஓவியர் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

யாழ்ப்பாணம், நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மல்லாகத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வங் கொண்டவராயிருந்தார். 1947 ஆம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகள் சென்னை நுண்கலைக் கல்லூரியில் கற்று பட்டம் பெற்றார். வீரகேசரியில் பணியாற்றி, தொடர்கதை, சிறுகதை, கவிதைகள் என்பனவற்றுக்கு ஓவியங்கள் வரைந்தார். 1960 ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையிலும் பகுதிநேர ஓவியராகப் பணியாற்றினார். பல்வேறு நூல்களுக்கான அட்டைப் படங்கள் வரைந்துள்ளார்.[1] ஓய்வு பெற்ற பின்னர், யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றினார்.

விருதுகள்

[தொகு]
  • 1997 ஆம் ஆண்டில் இவருக்கு கலாபூசணம் விருது கிடைத்தது.
  • வலிகாமம் வடக்கு கலாசார மன்றம் கலைச்சுடர் பட்டம் வழங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சபாநாயகம்&oldid=3242516" இலிருந்து மீள்விக்கப்பட்டது