உள்ளடக்கத்துக்குச் செல்

சோ. மாரியப்பன் கென்னடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோ. மாரியப்பன் கென்னடி (S. Mariappankennady) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் மானாமதுரை தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு விசுவாசமாகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவரைச் சபாநாயகர் ப. தனபால் தகுதி நீக்கம் செய்தார்.[3][4] இவர் அண்மையில் அமமுகவிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. My Neta
  2. TTV Dhinakaran asks 18 disqualified MLAs to move to resort near Tirunelveli till Madras HC verdict
  3. Verdict on disqualification of 18 MLAs on June 14; Tamil Nadu on tenterhooks
  4. Echo of poll debacle: AMMK sees many jumping ship
  5. "திமுகவில் இணைந்தார் மானாமதுரை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.மாரியப்பன் கென்னடி". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._மாரியப்பன்_கென்னடி&oldid=3377847" இலிருந்து மீள்விக்கப்பட்டது