சோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம்
சோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம் என்பது 1928 - 1940 ஆண்டுகள் காலப் பகுதியில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் பொதுவுடமைக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட ஒரு பொருளாதாரக் கொள்கை ஆகும். சோவியத் ஒன்றியத்தை வேகமாக ஒரு முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு கனரக தொழில்கள் தேவை என்றும், அதற்கு மூலமாக உழுவுத் தொழிலே அமையும் என்றும் இசுராலின் கருதினார். இதனால் லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.
இந்த கொள்கைகளின் படி உழவர்களின் உற்பத்திச் சொத்துக்களும் வன்முறையாக அரசுடமை ஆக்கப்பட்டது. உழவர்கள் அனைவரும் அரசு தொழிலாளர்கள் ஆக்கப்பட்டனர். உழவர்கள் உற்பத்தி செய்யும் எவற்றைம் அவர்களே நுகர முடியாது என்றும் கூறப்பட்டது.[சான்று தேவை] இதனால் உழவர்களை கொத்தடிமைகாளாகத் தம்மை உணர்ந்தனர்.[சான்று தேவை] இந்தக் கொள்கை கோல்டமோர், சோவியத் பஞ்சம் 1932-1933 போற பெரும் அழிவுகளுக்கு இட்டுச் சென்றது.[சான்று தேவை]