உள்ளடக்கத்துக்குச் செல்

சோழ நாட்டில் பௌத்தம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழ நாட்டில் பௌத்தம்
நூல் பெயர்:சோழ நாட்டில் பௌத்தம்
ஆசிரியர்(கள்):பா. ஜம்புலிங்கம்
வகை:ஆய்வு
துறை:வரலாறு
இடம்:காவேரிப்பட்டணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:220
பதிப்பகர்:புது எழுத்துப் பதிப்பகம்
பதிப்பு:முதற் பதிப்பு 2022

சோழ நாட்டில் பௌத்தம் (Chozha Naatil Boutham) என்பது 2022 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வரலாற்று நூலாகும். இதை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம் எழுதியுள்ளார். தொடர்ந்து சோழ நாட்டில் உள்ள பௌத்த தலங்களைத் தேடிப் பயணம் செய்து சேகரித்த தனது முப்பது ஆண்டுகாலப் பௌத்த ஆய்வுகளைத் தொகுத்து இவர் சோழநாட்டில் பௌத்தம் என்ற பெயரில் ஒரு நூலாகத் தொகுத்துள்ளார். நூலில் நூலாசியர் சேகரித்த அரிய புத்தர் சிலைகளின் ஒளிப்படங்களும், புத்தர் சிலைகள் குறித்த துல்லியமான தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. காலத்தால் அழிந்துபோன பௌத்த விகாரைகளும், பல்வேறு இடங்களில் கவனிப்பாரற்று கைவிடப்பட்டுக் கிடந்த புத்தர் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டு இந்நூலில் ஆவணமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் நகரத்திலுள்ள புது எழுத்துப் பதிப்பகம் தேவையான கெட்டி அட்டையில் இந்நூலை வெளியிட்டுள்ளது.

நூலமைப்பு

[தொகு]

சோழநாடு, அசோகரின் சாசனங்கள், இலக்கியம், பிற சான்றுகள், பௌத்த விகாரங்கள், கோயில்கள், நாகப்பட்டினப் புத்தர் செப்புத்திருமேனிகள், புத்தர் சிற்பங்கள், புத்தர் சிலைகள், புத்துயிர்பெறும் பௌத்தம் என்று எட்டு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு சோழநாட்டில் பௌத்தம் என்ற இந்நூல் சோழநாட்டின் பௌத்த வரலாற்றை பேசுகிறது. பதிப்பாசிரியர் உரை, நூலாசிரியர் உரை இவற்றுடன் முன்னிணைப்பு, மின்னிணைப்பு என ஆகமொத்தம் 220 பக்கங்களாக நூல் ஆக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர்

[தொகு]

தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு பௌத்த ஆய்வாளராக தொடர்ந்து இயங்கி வருகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சு சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து உதவிப்பதிவாளராகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 1990 ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த பௌத்த ஆய்வு தொடர்பான களப்பணியின்போது அறுபதுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைப் பட்டியலிட்டுள்ளார்[1]. தமிழில் வாழ்வில் வெற்றி என்ற ஒரு சிறுகதைத்தொகுப்பும், படியாக்கம் என்ற நூலையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் Tantric Tales of Birbal, Judgement Stories of Mariyathai Raman, Jesting Tales of Tenali Raman ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் விக்கிப்பீடியா, ஆங்கில விக்கிப்பீடியா, வலைப்பூ என இணையத்திலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

அரிய புத்தர் சிலைகள்

[தொகு]

புகைப்படம் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளுடன் சோழ நாட்டில் பௌத்தம் என்ற இந்நூலில் இடம்பெற்றுள்ள புத்தர் சிலைகளின் பட்டியல்:

1. அரியலூர் புத்தர் [2]
2. அருந்தவபுரம் புத்தர்[3]
3. ஆயிரவேலி அயிலூர் புத்தர்[4]
4. இடும்பவனம் புத்தர்[5]
5. இலையூர் புத்தர்
6. உள்ளிக்கோட்டை புத்தர்[6]
7. எழுமகளூர் புத்தர்
8. ஒகளூர் புத்தர்
9. கண்டிரமாணிக்கம் புத்தர்[7]
10. கரூர் புத்தர்[8]
11. கிராந்தி புத்தர்
12. கீழ்க்கொளத்தூர் புத்தர்
13. கீழ்க்குறிச்சி புத்தர்
14. குத்தாலம் புத்தர்
15. குழுமணி புத்தர்
16. குழுமூர் புத்தர்
17. கோட்டப்பாடி புத்தர்
18. கோபிநாதப்பெருமாள்கோயில் புத்தர்
19. சந்தைத் தோப்பு புத்தர்
20. சின்னமேடு புத்தர்
21. சீதக்கமங்கலம் புத்தர்
22. சுத்தமல்லி புத்தர்
23. சோழன்மாளிகை புத்தர்
24. திருச்சி புத்தர்
25. திருநாட்டியத்தான்குடி புத்தர்
26. திருப்பராய்த்துறை புத்தர்
27. திருப்பாம்புரம் புத்தர்
28. திருவலஞ்சுழி புத்தர்
29. பட்டீசுவரம் புத்தர்[9]
30. பரவாய் புத்தர்
31. பிள்ளைபாளையம் புத்தர்
32. புதூர் புத்தர்
33. புத்தமங்கலம் புத்தர் 34. பசுபவனம் புத்தர்
35. பெரண்டாக்கோட்டை புத்தர்
36. பெரிய திருக்கோணம் புத்தர்
37. பெருஞ்சேரி புத்தர்
38. பேட்டைவாய்த்தலை புத்தர்
39. மங்கலம் புத்தர்[10]
40. மணலூர் புத்தர்[11]
41. மதகரம் புத்தர்
42. மன்னார்குடி புத்தர்
43. மாத்தூர் புத்தர்
44. மானம்பாடி புத்தர்
45. முசிறி புத்தர்
46. முத்துசேர்வைமடம் புத்தர்
47. முழையூர் புத்தர்
48. ராயம்புரம் புத்தர்
49. வலங்கைமான்புத்தூர் புத்தர்
50. வளையமாபுரம் புத்தர்
51. வன்னிச்சிப்பட்டினம் புத்தர்
52. விக்ரமங்கலம் புத்தர்
53. விக்ரமம் புத்தர்
54. விடையபுரம் புத்தர்
55. வெள்ளனூர் புத்தர்
56. வையச்சேரி புத்தர்
57. செயங்கொண்டம் புத்தர்
58. ஆலங்குடிப்பட்டி சமண தீர்த்தங்கரர் -மகாவீரர்
59. குளித்தலை சமணத் தீர்த்தங்கரர் -மகாவீரர்
60. திருநாகேசுவரம் சமண தீர்த்தங்கரர்
61. பெருமத்தூர் சமண தீர்த்தங்கரர்
62. பென்னகோணம் சமண தீர்த்தங்கரர்
63. யோகபட்டம் அணிந்த சிவன்
64. பகவர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Buddhism in the Chola country, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002 [1]
  2. "Buddha sculpture from 11th Century found in Ariyalur", The Times of India, 2019-08-27, ISSN 0971-8257, retrieved 2023-10-14
  3. "கும்பகோணம் அருகே கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலை பகுதி கண்டெடுப்பு", Hindu Tamil Thisai, 2023-07-03, retrieved 2023-10-14
  4. ஏப் 27, பதிவு செய்த நாள்:; 2014 (2014-04-27), "டெல்டா மாவட்டங்களில் பராமரிப்பின்றி புத்தர் சிலைகள் - Dinamalar Tamil News", Dinamalar, retrieved 2023-10-14 {{citation}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  5. திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாறு (PDF). தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. p. 21.
  6. "Buddha statue found near Mannargudi - History Discussion Discussions on Ponniyin Selvan Varalaatru Peravai", ponniyinselvan.in, retrieved 2023-10-15
  7. "கண்டிரமாணிக்கத்தில் 10-ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிப்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/2012/jul/25/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-531871.htm. பார்த்த நாள்: 15 October 2023. 
  8. "ஐயனார் கோயிலில் பழமையான புத்தர் சிலை..!", nakkheeran (in ஆங்கிலம்), 2021-10-11, retrieved 2023-10-15
  9. "கும்பகோணம் அருகே கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலை பகுதி கண்டெடுப்பு", Hindu Tamil Thisai, 2023-07-03, retrieved 2023-10-15
  10. "காவிரியின் வடக்கே முசிறி-பெரம்பலூர் பகுதியில் பண்டைய பௌத்தச் சுவடுகள்", groups.google.com, retrieved 2023-10-15
  11. "Buddha statue found near Thanjavur", The Hindu (in Indian English), 2015-01-31, ISSN 0971-751X, retrieved 2023-10-15