சோலியா
![]() சோலியா நடனக் கலைஞர்கள் | |
பூர்வீக பெயர் | சோலியா/ஹட்கேலி |
---|---|
வகை | நாட்டுபுற நடனம் |
தோற்றம் | இந்தியா மற்றும் நேபாளம் |
சோலியா ( குமாவோனி : छोलिया ) அல்லது ஹட்கேலி (அல்லது ஹட்கே ; நேபாளி: हुड्केली ) என்பது இந்தியவின் உத்தரகண்ட் மற்றும் நேபாளத்தின் சுதுர்பாஷ்சிம் மாகாணத்தின் குமாவோன் பிரிவில் உருவான ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமாகும். [1] இது இன்று குமாவோனி மற்றும் சுதுர்பஷ்சிம் (முக்கியமாக டோட்டி, பைடாடி மற்றும் டார்ச்சுலா மாவட்டங்களில்) கலாச்சாரங்களின் அடையாளமாக மாறியுள்ளது. சோலியா நடனம், அடிப்படையில் ஒரு திருமண ஊர்வலத்துடன் கூடிய ஒரு வாள் நடனமாகும். ஆனால் இப்போது அது பல நல்நிகழ்வுகளிலும் நிகழ்த்தப்படுகிறது. [2]
குமாவோன் பிரிவின் அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத் மற்றும் பித்தோராகர் மாவட்டங்களிலும், நேபாளத்தின் தோட்டி, பைதாடி மற்றும் தர்ச்சுலா மாவட்டங்களிலும் இது மிகவும் பிரபலமான நடனமாகும். இந்த வாள் நடனம் ஆயிரமாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது குமாவோனி மக்கள் மற்றும் காஸ் மக்களின் தற்காப்பு மரபுகளில் வேரூன்றியுள்ளது.
தோற்றம்
[தொகு]ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நடனமானது குமாவோனின் போர்புரியும் சத்திரியர்களான காசாக்கள் மற்றும் கத்யூரிகளில் திருமணங்களில் ஆடப்படுகிறது. வாள் முனையில் அக்காலத்தில் திருமணங்கள் நடைபெறும்.
10 ஆம் நூற்றாண்டில் வந்த சந்த் அரசர்களால் பூர்வீக சத்திரியர்கள் ஒன்றுபட்டனர். பூர்வீக சத்திரியர்களை சிறுபான்மையினராக மாற்றிய புலம்பெயர்ந்த ராஜபுத்திரர்களும் மலையக பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டனரர். அவர்களின் பஹாரி கலாச்சாரத்தால் பாரம்பரியங்கள் மற்றும் மொழியில் மாற்றங்களை ஏற்படுத்தினர். வாள் முனையில் நடைபெறும் திருமணங்களின் நாட்கள் முடிந்துவிட்டன. ஆனால் அதனுடன் இணைக்கப்பட்ட மரபுகள் இன்றும்ம் தொடர்கின்றன.
அதனால்தான் மணமகன் குன்வர் அல்லது குமாவோனில் மன்னர் என்று அழைக்கப்படுகிறார். அவர் திருமண ஊர்வலத்தில் குதிரையில் சவாரி செய்து, தனது பெல்ட்டில் குக்குரியும் அணிந்துள்ளார். [3]
முக்கியத்துவம்
[தொகு]
குமாவோன் மக்களின் தற்காப்பு மரபுகளில் அதன் தோற்றம் தவிர, இது மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த கலை வடிவம் முக்கியமாக ராஜபுத்திர சமூகத்தால் அவர்களின் திருமண ஊர்வலங்களில் நிகழ்த்தப்படுகிறது. [4] இது தீய ஆவிகள் மற்றும் பேய்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதால் மங்களகரமானதாக நம்பப்படுகிறது. மக்களின் மகிழ்ச்சியைக் குறிவைக்கும் இத்தகைய ஆவிகளால் திருமண ஊர்வலங்கள் பாதிக்கப்படும் என்று நம்பப்பட்டது. புதிதாக திருமணமானவர்களை மயக்குவதற்காக பேய்கள் திருமண ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து வரும். சோலியாவின் நடிப்பு இதைத் தடுக்கலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக உள்ளது.
கருவிகள்
[தொகு]பித்தளைக் கருவி வகையைச் சேர்ந்த துரி , நாக்பனி மற்றும் ரன்சிங் ஆகியவை குமாவோன் பிரிவின் பாரம்பரிய கருவிகள் ஆகும். இது முன்னர் படைத்துருப்புகளின் மன உறுதியை அதிகரிக்க போர்களில் பயன்படுத்தப்பட்டது.
தோல் , டமாவ் போன்ற தாளக் கருவிகள் குமாவுனைப் பூர்வீகமாகக் கொண்டவை. தோலீஸ் எனப்படும் தொழில்முறை இசைக்கலைஞர்களால் இவை வாசிக்கப்படுகின்றன.
மசக்பீன் குமாவுனில் ஆங்கிலேயர்களால் அணிவகுப்பு இசைக்குழுக்களில் வாசிக்கப்படும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்டது.
நௌசூரிய முருளி (ஒன்பது முடிச்சு கொண்ட புல்லாங்குழல்) போன்ற மரக் கருவிகளான புல்லாங்குழல் மற்றும் ஜ்யோன்யா (ஜோன்யா) (இரட்டைப் புல்லாங்குழல்) குமாவுன் பூர்வீகமான இரட்டைக் குழல் வகையும் இசைக்கப்படுகிறது. [5]
உடை
[தொகு]குமௌனியின் பாரம்பரிய உடையான வெண்நிற நீள அங்கிகளையும் , தலையில் தங்கா, சோலா, முகத்தில் சந்தனக் கட்டையால் மூடப்பட்ட துளவார் வாள்கள் மற்றும் பித்தளைக் கேடயங்களுடனும் போருக்குத் தயாராக இருப்பது போல் அணிந்திருப்பார்கள்.. அவர்களின் ஆடை குமாவுனில் வாழ்ந்த பண்டைய தற்காப்பு வீரர்களின் உடையை ஒத்திருக்கிறது. [6]
அம்சங்கள்
[தொகு]போர் இசையுடன், வாள்கள் ஏந்திய நடனக் கலைஞர்கள், தங்கள் சக நடனக் கலைஞர்களுடன் கேலிச் சண்டைகளில் ஈடுபடும் போது, ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நடனமாடுகிறார்கள்.
"நிஷானா" ( பதாகைகள் ) என்ற முக்கோண சிவப்புக் கொடியை ஏந்தியபடி , வாள்களை அசைத்து, முகத்தில் உமிழும் வெளிப்பாடுகளுடன் அவர்கள் போருக்குச் செல்லும் போர்வீரர்களின் தோற்றத்தைத் தருகிறார்கள்.
சோழிய நடனக் கலைஞர்களின் முழு அணியில் 22 பேர் உள்ளனர் .அவர்களில் 8 பேர் வாள் நடனக் கலைஞர்களும் மீதமுள்ள 14 பேர் இசைக்கலைஞர்களும் ஆவர்.
வடிவங்கள்
[தொகு]பின்வருபவை குமாவுன் முழுவதும் பிரபலமான சோலியாவின் வடிவங்கள். அவை இயக்கங்களில் வேறுபடுகின்றன:
- பிசு நிருத்யா (बिसू नृत्य )
- சரண்வ் (நகைச்சுவை சண்டைகள்) (सरांव)
- ரன்ன் நிருத்யா (எழுத்து. போர் நடனம்) (रण नृत्य)
- சரங்கர் (सरंकार)
- வீராங்கனா (வீராங்கனா)
- தீபன்ஷு (தீபான்ஷு)
- சோலியா பாஜா (छोलिया बाजा)
- ஷௌகா ஷைலி (शौका शैली) குமாவுனின் ஜோஹர் பகுதியைச் சேர்ந்தது
- பைதான் பாஜா (पैटण बाजा)
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ नागरिक. "संकटमा हुड्केली नाच". nagariknews.nagariknetwork.com (in நேபாளி). Retrieved 2022-11-01.
- ↑ "Folk Dances Of North India". Culturalindia.net. Retrieved 2010-06-12.
- ↑ "Choliya Dance - Folk Dances of Kumaon". Euttaranchal.com. Archived from the original on 2 July 2014. Retrieved 2010-06-12.
- ↑ musetheplace.com. "Choliya Dance – Folk Dances of Kumaon". musetheplace.com. Archived from the original on 2016-03-03. Retrieved 2013-01-21.
- ↑ "Welcome to Chhaliya Mahotsava, Pithoragarh". Chhaliyamahotsava.com. Archived from the original on 23 January 2011. Retrieved 2010-06-12.
- ↑ "Choliya Dance - Choliya Dance Uttarakhand, Cholia Dance Uttaranchal". Himalaya2000.com. Retrieved 2010-06-12.